Friday, June 11, 2010

சல்மான்கானை இயக்குவார்களா சரணும் பிரபு தேவாவும்?


தமிழ் உணர்வாளர்களும், தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பும் அவ்வளவு தூரம் போராட்டம் நடத்தியும் எச்சரிக்கை விடுத்தும் கூட, கொழும்பு விழாவில் பங்கேற்றுள்ளார் நடிகர் சல்மான்கான்.

இவரது படங்களுக்கு சென்னையிலும் ஓரளவு வரவேற்புள்ளது. சொல்லப்போனால் இவரது முதல்படமான மைனே பியார் கியாவின் தமிழ் டப்பிங் சென்னையில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் "அசல்' படத்துக்குப் பின் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சரண். இதற்காக சல்மானிடம் கதை

தொடர் தோல்விகளால் நொந்துபோயிருந்த சல்மான்கானுக்கு பெரிய பிரேக் கொடுத்ததே, தென்னிந்திய இயக்குநரான பிரபுதேவாதான்.

அவரது அடுத்தடுத்த படங்களை இயக்கவிருப்பவர்களும் பிரபு தேவா மற்றும் சரண் ஆகியோர்தான்.

இருவருமே சல்மான் கானிடம் கதை சொல்லிவிட்டு, படத்துவக்க விழா தேதி அறிவிக்கக் காத்திருக்கிறார்கள். விவேக் ஓபராயின் படத்தை செல்வராகவன் இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

இப்போது, தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, பிலிம் சேம்பர் ஆகியவற்றின் புறக்கணிப்பு, எச்சரிக்கையையும் மீறி சல்மான்கான், விவேக் ஓபராய் போன்றவர்கள் ஐஃபா விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இவர்களின் படங்கள் அனைத்துக்கும் இனி தென்னகத்தில் உள்ள 5 மாநிலங்களிலும் தடை விதிக்கப்படும் நிலை உள்ளது.

பிரபு தேவாவும் சரணும் சல்மான்கானை வைத்து படம் இயக்குவார்களா... விவேக் ஓபராயை வைத்து செல்வராகவன் படம் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment