Monday, June 21, 2010

நடிகை இந்திரா வழக்கு: கணவர்-மாமியாருக்கு முன் ஜாமீன்

சென்னை: தன்னை நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சிப்பதாகவும், 100 பவுன் நகையும், ரூ.2 லட்சமும் கேட்டு மிரட்டுவதாகவும் கணவர் மீது புகார் தந்த துணை நடிகை இந்திரா விவகாரத்தில் அவரது கணவர் மற்றும் மாமியாருக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த துணை நடிகையான இந்திரா (30) தனது கணவர் சதீஷ்குமார் (27), அவரது தாயார் இந்திரா, தங்கை தேவி ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதில், நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க சதீஷ்குமார் தன்னை வற்புறுத்துவதாகவும், குடித்துவிட்டு துன்புறுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் சதீஷ்குமார் உட்பட 3 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

அதன்படி, சதீஷ்குமார் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும். தாயார் இந்திராவும், தங்கை தேவியும் விசாரணைக்கு தேவைப்பட்டால் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் செக்ஸ் சித்ரவதை-நடிகை இந்திரா:

முன்னதாக நடிகை இந்திரா வடபழனி உதவி கமிஷனர் மாடசாமியை சந்தித்து, தன்னிடம் 100 பவுன் நகையும், ரூ.2 லட்சமும் கேட்டு மிரட்டுவதாகவும் கணவர் சதீஷ்குமார் மீது புகார் கொடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ஒரு நடிகையான என்னையே சதீஷ்குமார் நடித்து ஏமாற்றி விட்டார். உயிருக்கு உயிராக என்னை காதலிப்பதாக கூறி, 2 முறை தற்கொலைக்கும் முயன்றதால் சதீஷ்குமாரை நான் முழுமையாக நம்பி விட்டேன்.

ஆனால், பின்னர் அவரது சுயரூபம் வெளிப்பட்டது.
எங்கள் ஜாதியில் பெண் எடுத்திருந்தால் வரதட்சணை அதிகமாக கிடைத்திருக்கும் என்று கூறிய சதீஷ்குமார், 100 பவுன் நகையும், ரூ.2 லட்சம் பணமும் வாங்கிவா. அப்போதுதான் நீ என்னுடன் வாழ முடியும். இல்லையென்றால் நான் வேறு திருமணம் செய்து கொள்கிறேன் என்று மிரட்டினார்.

நான் எவ்வளவோ கெஞ்சியும் சதீஷ்குமார் மனம் மாறவில்லை. அவருக்கு தண்டனை வாங்கி தராமல் விடமாட்டேன்.

அதிமுக பகுதிச் செயலாளராக இருக்கும் சதீஷ்குமார், கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்பட்டார். இதற்காக அவரது நண்பர்களுடன் என்னை உல்லாசமாக இருக்க சொன்னார். நள்ளிரவில் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்கள் முன்னால் கவர்ச்சியாக நடனம் ஆடச் சொல்லி தொந்தரவு கொடுத்தார்.

அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவரின் பெயரை சொல்லியே என்னை மிரட்டி வந்தார். இவருக்கெல்லாம், எப்படி அதிமுகவில் பதவி கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை. எனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்படக்கூடாது.

நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். எனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நடிகர் சங்கத்தில் புகார் செய்வேன்.

சதீஷ்குமார் மீது புகார் கொடுத்த பின்னர் எனக்கு நிறைய மிரட்டல்கள் வருகின்றன. மோட்டார் சைக்கிளில் வந்து ரவுடிகள் மிரட்டி விட்டு செல்கிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment