Tuesday, June 22, 2010
ராவணன் வெளியாகவிருந்த தியேட்டருக்கு தீ வைத்த சிங்களர்கள்!
கொழும்பு: ராவணன் திரைப்படம் ரீலீஸாகவிருந்த மட்டக்களப்பு சாந்தி திரையரங்குக்கு சிங்களர்கள் தீ வைத்தனர்.
ஐஃபா விழாவைப் புறக்கணித்த நடிகர்கள் நடித்த படத்தை ஓடவிடக் கூடாது என சிங்களர்கள் குழு ஒன்று கோஷமிட்டபடி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.
ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராயை சிறப்பு விருந்தினராக ஐஃபா விழாவுக்கு அழைத்தி்ருந்தனர். ஆனால் தமிழர் போராட்டம் காரணமாக அவரும் அவரது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் ஆகியோர் புறக்கணித்தனர்.
ராவணன் படம் இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக திரையிடப்படவிருந்தது. ஆனால் விழாவுக்குப் போனால் தமிழகத்தில் ராவணனை வெளியாக விடமாட்டோம் என தமிழ் உணர்வாளர்கள் எச்சரித்ததால் மணி ரத்னமும் போகவில்லை. ராவணனும் திரையிடப்படவில்லை. இதனால் விழா பெரும் தோல்வியைத் தழுவியது.
அந்த ஆத்திரத்தை இப்போது காட்டுகிறார்கள் சிங்களர்கள்.
ஐஃபா விழாவில் பங்கேற்காத நடிகர்களின் படங்களை இனி இலங்கையில் திரையிடக் கூடாது அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கிழக்கு மட்டக்களப்பு நகரில் ராவணன் திரைப்படம் வெளியாகவிருந்த சாந்தி திரையரங்கின் ஒரு பகுதியை தீ வைத்துக் கொளுத்தினர்.
இதுகுறித்து தியேட்டர் மேலாளர் கந்தசாமி கூறுகையில், சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தை திரையிடக்கூடாது என்று எச்சரித்தனர். நான் அப்போதே காட்டான்குடி போலீஸில் புகார் கூறினேன். ஆனால் இப்போது கொளுத்திவிட்டார்கள்" என்றார்.
ஆனால் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் ராவணன் படம் வெளியாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment