Monday, June 21, 2010

புதுமுகங்களை வைத்து இனி வருஷத்துக்கு 4 படம்!- கஸ்தூரிராஜா


புதுமுகங்களை வைத்து இனி வருடத்துக்கு 4 அல்லது 5 படங்களை எடுக்கப்போவதாகக் கூறினார் இயக்குநர் கஸ்தூரி ராஜா.

கஸ்தூரிராஜா இப்போது முழுநேரத் தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் கூறுகையில், "சினிமாவில் பணம் போடும் தயாரிப்பாளர்கள் நிறைய பேரை காணவில்லை. எடிட்டர், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர் என தொழில் நுட்ப கலைஞர்களெல்லாம் நூறு படங்களை தாண்டியும் இருக்கிறார்கள்.

ஆனால் ஏழெட்டு படங்கள் எடுத்த தயாரிப்பாளர்கள் எங்கே என்று தேட வேண்டி உள்ளது. நஷ்டமாக பலர் தெருவுக்கு வந்து விட்டனர். கோடிக்கணக்கில் செலவழித்து படம் எடுப்பதால் தான் நஷ்டம் வருகிறது.

இருபது கோடி ரூபாயில் எடுத்த படம் தோல்வியானால் எட்டு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எப்படி தாங்க முடியும். அதே நேரம் சிறு பட்ஜெட் படங்கள் தோற்றால் ஓரிரு லட்சங்கள்தான் இழக்க வேண்டி வரும்.

100 படங்கள் ரிலீசானால் பத்து படங்கள்தான் ஓடுகின்றன. சிறிய பட்ஜெட்டில் எடுத்தால் தோல்வியைத் தாங்க முடியும். புதுசா படம் எடுக்க வருபவர்களில் 30 சதவீதம் பேர்தான் நிஜமாக படம் எடுக்கின்றனர். 70 சதவீதம் பேர் எப்படி படம் எடுக்கிறார்கள்? பணம் எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை.

இனி வருடம் தோறும் புதுமுகங்கள், புது தொழில் நுட்ப கலைஞர்களை வைத்து நான்கைந்து சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்க முடிவு செய்துள்ளேன்..." என்றார்.

No comments:

Post a Comment