Tuesday, June 15, 2010

தசாவதாரம் கதை உரிமை-கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!



கமல்ஹாஸனுக்கு எதிரான தசாவதாரம் கதை உரிமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.



தாம்பரத்தை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் செந்தில்குமார் என்பவர் தசாவதாரம் படத்தின் கதை தனக்கே சொந்தம் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு முடியாமல் நீண்டு கொண்டே இருந்தது.



தசாவதாரம் படத்தின் கதை தனக்கே சொந்தம் என்றும், இதை சொன்னதால் கமலும் அவரது உதவியாளர்களும் கொலை மிரட்டல் விடுத்தனர் என்றும் செந்தில் குமார் புகார் கூறினார்.



இது பற்றி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தாம்பரம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டும் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறி இருந்தார்.



இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி பதில் அளித்தார்.



அவர் கூறும்போது தாம்பரம் மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் தாம்பரம் போலீசார் இந்த மனு உரிய விசாரணை மேற்கொண்டனர். கமல் அலுவலகத்திலும் அவரது உதவி இயக்குனர்களிடமும் தசாவதாரம் படக் குழுவினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



அப்போது கதை முழுவதும் கமலுக்கு மட்டுமே சொந்தம் என்றும் அவரே எழுதியது என்றும் தெரிய வந்தது. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.



இதை நீதிபதி எற்றுக்கொண்டு கமலுக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment