Wednesday, June 16, 2010

வாலி 'அரசவைக் கவிஞர்': வைரமுத்துவுக்கு எம்எல்சி?


சென்னை: தமிழகத்தில் மேலவை அமைப்புப் பணிகள் துவங்கிவிட்டன. இப்போதே யாருக்கு சீட்டு என்ற யூகங்களும் லாபியும் துவங்கிவிட்டன.

இந்த எம்எல்சிக்கள் பட்டியலில் திரைத்துறையிலிருந்து ஏற்கெனவே குஷ்புவை ஓகே செய்துவிட்டார்கள் என ஏற்கெனவே செய்திகள் வந்துவிட்டன.

அடுத்து வைரமுத்துவுக்கும் எம்எல்சி பதவி தரப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, மீண்டும் அரசவைக் கவிஞர் பதவிக்கு உயிரூட்டுகிறார் முதல்வர் என்கிறார்கள். இந்தப் பதவியில் யார் அமர வேண்டும் என்பதையும் தீர்மானித்துள்ளாராம்.

கவிஞர் வாலியை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்துவிட்டே இந்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்களாம்.

இந்தப் பதவியில் ஏற்கெனவே கவியரசர் கண்ணதான், முத்துலிங்கம் மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் இருந்துள்ளனர் இம்மூவரையும் அரசவைக் கவிஞர்களாக நியமித்தவர் எம்ஜிஆர்.

2 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி வழங்க கோரிக்கை:

இந் நிலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அந்தோணி சாமி, செயலாளர் சக்திவேல் ஆகியோர் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில்,

போலீசாரின் வாரிசுகளுக்கு தரமான கல்வி கிடைக்கவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும் போதிய வசதிகள் இல்லாத நிலையில் உள்ளோம்.

போலீசாருக்கென்று அங்கீகரிக்கப்பட்ட சங்கமும், அமைப்பும் கிடையாது. தங்களின் உயிரை இழந்து ரவுடிகளால் தாக்கப்பட்டு இரவு- பகல் பாராமல் மக்களுக்காகவும், அரசுக்காகவும் உழைக்கும் போலீசாரின் நிலை உயர காவலர் நல வாரியம் அமைக்க வேண்டும்.

அமைக்கப்படவுள்ள தமிழக மேலவையில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு 2 எம்எல்சி பதவி வழங்க வேண்டும். நடந்து கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதனை அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment