Wednesday, June 16, 2010

சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து!


வடிவேலு மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சிங்கமுத்து சிறைவாசத்தை தாங்க முடியாமல் சக கைதிகளிடம் கதறி அழுதாராம்.

வடிவேலுவின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சிஙகமுத்து கைது செய்யப்பட்டு கோர்ட் உத்தரவின் பேரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாற்று உடை கூட எடுத்துக் கொள்ள அவகாசம் தராமல் சிங்கமுத்துவை கைது செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கட்டிய வேட்டி, சட்டையோடு சிறைக்கு வந்துள்ளார் சிங்கமுத்து. சிறைவாசம் அவரை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாம். சிறை அறையில் கொண்டுவந்து விடப்பட்டபோது, சக கைதிகளைப் பார்த்து ஒரு தவறும் செய்யாத என்னை போய் கைது செய்துவிட்டார்களே என்று கூறி கதறி அழுதாராம் சிங்கமுத்து.

இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டிருந்தாராம். அவரை சக கைதிகள் ஆறுதப்படுத்தினார்களாம்.

நேற்று காலை அவரது வக்கீல் மற்றும் உறவினர்கள் சிங்கமுத்துவை போய் பார்த்தார்கள். அப்போது அவருக்கு மாற்று உடைகள் கொடுத்தார்கள்.

அப்போது கண்களில் நீர் ததும்ப, சினிமாவில் மற்றவர்களை சிரிக்க வைத்தேன். இப்போது என் நிலைமை அழும் நிலையில் உள்ளது என்று சிங்கமுத்து வேதனையோடு சொன்னாராம். அவரது நிலைமையை பார்த்து அவரது உறவினர்களும், வக்கீலும் கண்கலங்கி விட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சிங்கமுத்து சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய போலீசார் அவகாசம் கேட்டதால் விசாரணை 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

சிங்கமுத்து வருமானவரி கட்டுபவர் என்பதால் அவருக்கு கோர்ட் உத்தரவுப்படி ஏ வகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு:

இந் நிலையில் சிங்கமுத்துவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை நாளை சைதாபேட்டை பெருநகர நீதிமன்றத்தில் நடக்கிறது.

No comments:

Post a Comment