Sunday, June 13, 2010
அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்!
விஜய் நடிக்கும் புதிய பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேலூர் வந்த அசினைப் பார்க்க பெரும் ரசிகர் கூட்டம் முண்டியடித்தது. இதனால் பெரும் தள்ளுமுள்ள ஏற்பட, போலீதார் வந்து கூட்டத்தைக் கலைத்தனர்.
பாடிகார்ட் என்ற மலையாள படத்தை தனது 51வது படமாக இயக்குநர் சித்திக்கை வைத்து எடுத்து வருகிறார் நடிகர் விஜய். இதில் விஜய் ஜோடியாக அசின் நடிக்கிறார்.
இந்திக்கு சென்ற பின்னர் அசின் மீண்டும் தமிழில் நடிக்கும் முதல் படம் இது.
இதன் படபிடிப்பு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நவீன உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. விஜய்யும் அசினும், ராஜூ சுந்தரம் நடன குழுவினருடன் ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
விஜய்- அசின் படிப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரசிகர்கள் விளையாட்டு அரங்கம் முன்பு குவிந்தனர். அவர்கள் படபிடிப்பை காண முண்டியடித்தனர்.
ஆனால் படபிடிப்பு குழுவினர் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனாலும் நடிகர்- விஜய், நடிகை அசினை பார்த்தே தீர வேண்டும் என ரசிகர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். அப்போது கேரவனிலிருந்து அசின் வெளியே வந்தார்.
ரசிகர்களைப் பார்த்து அவர் கையசைக்க, உற்சாகமான ரசிகர்கள், அவரை நெருங்க முண்டியடித்தனர். அப்போது கூட்டத்தில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தடிகளைச் சுழற்றியபடி கூட்டத்தைக் கலைத்தனர் போலீசார். தொடர்ந்து கூட்டம் சேராமல் இருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
வி.ஐ.டி பல்கலைக்கழகம் மற்றும் சத்துவாச்சாரி விளையாட்டரங்கம் உள்ளிட்ட இடங்களில் 10 நாட்களுக்கு மேல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment