Sunday, June 13, 2010
சந்தோஷமான தம்பதி: ஐஸ்வர்யா -அபிஷேக் முதலிடம்
மும்பை: பிரபலமானவர்களில் மிகவும் அதிகமாக விரும்பப்படும், மகிழ்ச்சிகரமான தம்பதியர் பட்டியலில் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் ஜோடி முதலிடத்தை பிடித்துள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு இணையதளம் இதுதொடர்பான கருத்துக்கணிப்பை நடத்தியது. சுமார் 3.6 லட்சம் பேர் இதில் தங்களின் ஓட்டை பதிவு செய்தனர்.
இதில், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடி தான் மிகவும் சந்தோஷமான தம்பதி, தாங்கள் விரும்பும் தம்பதி என 32 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
அடுத்த இடத்தை ஷாருக்கான்-கௌரி ஜோடி பெற்றுள்ளது. இவர்களை 29 சதவீதம் பேர் மகிழ்ச்சிகரமான தம்பதி எனக் கூறியுள்ளனர்.
மூன்றாவது இடத்தில் அமிதாப் பச்சன்-ஜெயாபச்சன் ஜோடியை சுமார் 20 சதவீதம் மக்கள் தேர்வு செய்துள்ளனர். நான்காவது இடத்தை அமிர் கான்-கிரன் ராவ் ஜோடி பிடித்துள்ளது.
கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் என தென்னகத்திலும் கூட ஏராளமான பிரபல சினிமா தம்பதிகள் உள்ளனர். வடக்கில் உள்ளவர்களுக்கு இந்த சினிமாக்காரர்களை எல்லாம் தெரியாது போலும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment