Wednesday, June 30, 2010

ஆஸ்கர் விருது-நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு



ஆஸ்கர் விருது களைத் தேர்வு செய்யும் கமிட்டியில் நடுவர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இந்தியர்களுக்குப் பெருமளவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொடுத்த படம் ஸ்லம்டாக் மில்லியனர். இப்படத்துக்காக ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்றார். ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு தலா ஒரு விருது கிடைத்தது.



இந்த நிலையில் விருத்துக்கான படங்களைப் பரிசீலிக்கும் ஆஸ்கர் கமிட்டியில் ரஹ்மானும், பூக்குட்டியும் சேர்க்கப்பட்டுள்ளனர். படங்களைப் பார்த்து மதிப்பிட்டு மார்க் கொடுக்கும் பணி இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போல ஏராளமான பேர் இக்கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.



இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், மிகப் பெரிய பணி. இதை எதிர்பார்க்கவில்லை. சிறப்பாக செய்ய வேண்டும் என கருதுகிறேன் என்றார்.

கன்னட மார்க்கெட்டைப் பிடிக்க புறப்பட்டார் நயன்தாரா







தமிழும், தெலுங்கு ம் கிட்டத்தட்ட தன்னை தொங்கலில் விட்டு விட்டதால் அடுத்து கன்னடத்திற்குக் குறி வைத்துள்ளாராம் நயனதாரா .



சிம்புவுடன் காதல் பின்னர் கலாட்டா. சிறிது கால கேப்புக்குப் பின்னர் பிரபுதேவாவுடன் காதல், தொடரும் கலாட்டா என போய்க் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இதன் விளைவு தமிழ் மார்க்கெட் அவுட். தெலுங்கு மார்க்கெட் அம்போ.



கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கில் நயன்தாராவின் காலம் முடிந்து விட்டது என்கிறார்கள். பிரபு தேவாவுடன் அவருக்கு ரகசியமாக கல்யாணமும் ஆகி விட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அவரைத் தேடிப் போகவிருந்தவர்களும் கூட ஜகா வாங்கி தமன்னாவின் வீட்டுப் பக்கம் கார்களைத் திருப்பி வருகின்றனராம்.



தமிழிலும், தெலுங்கிலும் பிசியாக இருந்தபோது தாய்மொழி களமான மலையாளத்தை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை நயன்தாரா. இதனால் மீண்டும அங்கு திரும்ப அவருக்கு பெரிய அளவில் இஷ்டமில்லை. சம்பளமும் அங்கு ரொம்பக் குறைச்சல். இதனால் கன்னடத்துப் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளாராம் நயனதாரா.



முதல் முதலாக கன்னடத்தில் நடிக்கப் போவதால் அங்கு தனக்கு நல்ல அறிமுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல் வேலையாக பத்திரிகைகப் பேட்டிகளுக்கு நிறைய நேரம் ஒதுக்குகிறாராம். தனக்குத் தெரிந்தவர்களுக்கு தானே போன் போட்டு சென்னாகிதீரா சாரே (நல்லாருக்கீங்களா ஐய்யா)என்று மலையாளமும், கன்னடமும் கலந்து கட்டி நலம் விசாரிக்கிறாராம்.



இந்த அப்ரோச் ரொம்ப நல்லாருக்கே என்று கன்டன மீடியாக்களும் குஷியாகியுள்ளனவாம்.



நயன்தாராவுக்கு மொழிப் பிரச்சினையெல்லாம் பெரிதே இல்லையாம். ஜமாய்க்கிறாராம். பிரபுதேவாவுக்குத்தான் கன்னடம் தாய்மொழியாச்சே, பிறகு எப்படி வரும்!

செல்வராகவனின் 'மின்னல்' படம்!



படு நிதானமாக படம் எடுப்பதில் புகழ் பெற்றவரான செல்வராகவன் சுருக்கமாக ஒரு படத்தை எடுத்து வெளியிடவுள்ளாராம்.



ஒரு படத்தை எடுத்து முடிக்க 2 வருடம் வரை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்பவர் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு இடைவெளி விட்ட செல்வராகவன், தெலுங்கில் ராணா டகுபதியை வைத்து ஒரு படம் செய்வதாக இருந்தார். ஆனால் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக அந்த திட்டம் டிராப் ஆகி விட்டதாம்.



இதையடுத்து தம்பி தனுஷ் , தோழி ஆன்டிரியாவை வைத்து ஒரு மின்னல் வேகப் படத்தை இயக்கப் போகிறாராம் செல்வா. ராம்ஜி கேமராவைக் கையாள,ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இது குறுகிய காலப் படைப்பாக இருக்குமாம்.



இது புதிய படம் அல்ல. ஏற்கனவே தனுஷ், ஆன்டிரியாவை வைத்து திட்டமிடப்பட்டிருந்த மாலை நேரத்து மயக்கம்தான். இந்தப் படம் 14 நாள் படமாக்கலுக்குப் பின்னர் படத்தை நிறுத்தி வைத்திருந்தார் செல்வா. காரணம், ஆன்டிரியாவுக்கும், செல்வாவுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் நட்பு. இதன் விளைவுதான், சோனியா அகர்வாலும், செல்வாவும். அந்தப் படத்தைத்தான் தற்போது திரும்ப எடுக்கவுள்ளார் செல்வா.



தனுஷுடன் இணைந்து செல்வராகவன் செய்யும் 4வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



ஜூலை 2 முதல் 'குவார்ட்டர் ஃபைட்' தொடக்கம்!

பருத்தி வீரன்-தொடரும் வழக்கு



பருத்திவீரன் கன்னட,தெலுங்கு உரிமை விற்கப்பட்டு விட்டதா?-உயர்நீதிமன்றம் கேள்வி



பருத்தி வீரன் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட மொழி உரிமை விற்கப்பட்டு விட்டதா என்பதைத் தெரிவிக்குமாறு படத் தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இயக்குநர் அமீரின் சீரிய இயக்கத்தில் உருவான படம் பருத்தி வீரன். இப்படத்தை ஞானவேல்ராஜா என்பவர் தயாரித்தார். இவர் நடிகர் சூர்யாவின் உறவினர் என்று கூறப்படுகிறது. சூர்யாவின் தம்பியான கார்த்திதான் பருத்தி வீரன் படத்தின் நாயகன். பிரியா மணி நாயகியாக நடித்திருந்தார்.



இப்படத்தின் தயாரிப்பின்போது ஞானவேல்ராஜாவுக்கும், அமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக திரையுலக அளவில் பஞ்சாயத்து பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் பருத்தி வீரன் படத்தின் கன்னட, தெலுங்கு மொழி உரிமையை விற்கக் கூடாது என்று ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் அமீர்.



அந்த வழக்கு விசாரணையின்போது ரூ. 50 லட்சம் உத்தரவாதத் தொகையை டெபாசிட் செய்வதாக ஞானவேல்ராஜா தெரிவித்தார். இதுதவிர இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்படுவுதாகவும், பட உரிமையை விற்பதற்கு தடை விதிக்கக் கூடாது என்றும் கோரினார். இதை ஏற்ற நீதிபதி சந்துரு, அமீர் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.



இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச் முன்பு அமீர் அப்பீல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், அக்பர் அலி ஆகியோர், பருத்தி வீரன் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட உரிமை விற்கப்பட்டு விட்டதா என்பதை தெரிவிக்குமாறு ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

குடிபோதையில் டிரைவிங்-சிக்கலில் அரபு நடிகை

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த பிரபல நடிகை, குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக சிக்கலில் மாட்டியுள்ளார்.



ரமதான் தொடர்பான டிவி தொடர்களின் பணியில் தொடர்ந்து ஈடுபட்டதால் ஏற்பட்ட வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக தான் குடித்ததாக அந் நடிகை கூறியுள்ளார்.



40 வயதாகும் அந்த நடிகை டிவி தொடர்களில் நடித்து வருபவர் ஆவார். அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் சிக்கினார். இதில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து துபாய் போக்குவரத்து கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகையின் வக்கீல் வாதிடுகையில், நாட்டுக்கு வெளியேதான் அவர் குடித்தார். மேலும் விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார்.



வழக்கை விசாரித்த போக்குவரத்து கோர்ட், நடிகைக்கு 20,000 திர்ஹாம் அபராதம், ஒரு மாத சிறைத் தண்டனை, ஒரு வருடத்திற்கு வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து ஆகியவை தண்டனையாக விதிக்கப்பட்டது.



இதையடுத்து துபாய் உயர்நீதிமன்றத்தில் அந்த நடிகை அப்பீல் செய்தார். அதில், நான் தொடர்ந்து ரமதான் தொடர்பான தொடர்களில் நடித்து வந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டதாலும், வேலைப்பளு மிகுதியாலும் கொஞ்சம் போல மது அருந்தினேன். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. அவற்றை நான் கவனிக்க வேண்டும். எனவே என் மீது இரக்கம் காட்டுமாறு கோரியுள்ளார்.



இந்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



'வா குவார்ட்டர் கட்டிங்'-வாங்கினார் தயாநிதி அழகிரி



சிவா, லேகா வாஷிங்டன் நடித்த 'வா குவார்ட்டர் கட்டிங்' படத்தை வாங்கியுள்ளார் தயாநிதி அழகிரி .



ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்த படம் தான் வா. இப்படத்துக்கு முதலில் 1/4 கட்டிங் என பெயரிட்டிருந்தனர். தற்போது இதை வா என்று மாற்றி விட்டனர். இப்படத்தில் சிவா, எஸ்.பி.பி.சரண், லேகா வாஷிங்டன் ஆகியோர் நடித்துள்ளனர். புஷ்கர், காயத்ரி தம்பதி இயக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா கேமராவை கவனித்துள்ளார்.



இப்படத்தை தயாநிதி அழகிரி வாங்கியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமெடிப் படமாகும். இதற்கு முன்பு தயாநிதி அழகிரி வெளியிட் தமிழ் ப் படமும் முழுக் காமடிப் படம் என்பது நினைவிருக்கலாம்.



ஓரம்போ படத்தை இயக்கியவர்கள்தான் காயத்ரியும், புஷ்கரும். தற்போது முழுக் காமெடிக் கதையுடன் வா மூலம் திரும்ப வந்துள்ளனர்.



படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாம். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

லாரன்ஸுடன் இணையும் அனுஷ்கா



முனி படத்தின் 2ம் பாகம்-லாரன்ஸ் ஜோடிகளாக அனுஷ்கா, லட்சுமி ராய்



முனி படத்தின் 2ம் பாகத்தை எடுக்கப் போகிறார் ராகவ லாரன்ஸ். இப்படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகள். அதில் ஒருவர் 'சிங்கம்' அனுஷ்கா.



முனி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். அப்பாவாக வினு சக்ரவர்த்தி, அம்மாவாக கோவை சரளா நடித்திருந்தனர். முக்கிய வேடத்தில் அதாவது முனியாக ராஜ்கிரண் நடித்திருந்தார்.



2ம் பாகத்திற்கு காஞ்சனா என்று பெயரிட்டுள்ளார் லாரன்ஸ். இப்படத்தில் அவருக்கு ஜோடிகளாக அனுஷ்காவும், லட்சுமி ராயும் நடிக்கவுள்ளனராம். இப்படத்திலும் கோவை சரளா இருக்கிறார். ஆனால் ராஜ் கிரண் கிடையாதாம். முற்றிலும் வித்தியாசமான பின்னணியுடன் இந்த 2ம் பாகம் இருக்குமாம்.



படத்தில் 2 நாயகிகள் இருந்தாலும் கூட அனுஷ்காவுக்கு சற்று பவர்புல்லான ரோல் கொடுக்கப் போகிறாராம் லரான்ஸ். அது என்ன என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறாராம்.



ஒருவேளை 'முனியம்மா'வாக இருக்குமோ?

ராவணன் விசிடி-பணம் கேட்டு மிரட்டிய விக்ரம் ரசிகர்கள்



ராவணன் பட திருட்டு விசிடி விற்பனை குறித்து போலீஸுக்குத் தெரியப்படுத்தாமல் இருக்க பணம் தர வேண்டும் என கூறி வீடியோ கடை உரிமையாளரை மிரட்டிய நான்கு விக்ரம் ரசிகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.



சென்னை பாலவாக்கத்தில் வீடியோ கடை வைத்து நடத்தி வருபவர் சதிஷ்குமார். இவரது கடைக்கு ராயப்பேட்டையை சேர்ந்த சிராஜுதீன், சீனிவாசன், அமீர், கார்த்திக் ஆகிய 4 விக்ரம் ரசிகர்கள் சென்றனர்.



ராவணன் திருட்டு சி.டி.க்கள் இருக்கிறதா என கேட்ட 4 பேரும் 24 சி.டி.க்களை விலைக்கு வாங்கினர். பின்னர் கடை அருகே தாங்கள் சென்ற காரை நிறுத்தி விட்டு கடை உரிமையாளர் சதீஷ்குமாரை அழைத்தனர்.



விக்ரம் ரசிகர்களாகிய நாங்கள் கூறினால் போலீசார் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ரூ.10 ஆயிரம் கொடுத்தால் புகார் கொடுக்காமல் சென்று விடுவோம். இல்லையென்றால் நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து சதீஷ்குமார் நீலாங்கரை போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் முரளி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விக்ரம் ரசிகர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.



திருட்டு சி.டி.க்களை விற்பனை செய்த கடை உரிமையாளர் சதீஷ்குமார், ஊழியர் பழனிவேல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சிவாஜி பிலிம்ஸ் படத்தில் ரஜினி-கமல்?



சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கலாம் என்ற ஒரு பேச்சு கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.



நினைத்தாலே இனிக்கும் படத்தோடு இணைந்து நடிப்பதை விட்டனர் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும். அதன்பின்னர் இருவரும் தத்தமது ஸ்டைலில் சூப்பர் ஸ்டார்களாகி விட்டனர். இன்று வரை இவர்களது இடத்திற்கு பொருத்தமான யாரும் வரவில்லை.



இருவரும் தத்தமது ஸ்டைலில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் திரை விருந்துகள் இன்னும் ரசிகர்களுக்கும் அலுப்புத் தட்டவில்லை. அவர்களுக்கும் சலிப்பு வரவில்லை.



இந்த நிலையில் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க கடும் முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. சில காலமாகவே இந்த முயற்சிகள் தீவிரமாகவே உள்ளன. கே.பாலச்சந்தர் படத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.



பாரதிராஜா இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்கள். அதற்கு இளையராஜா இசையமைப்பார் என்றும் கூட பேச்சு வந்தது. வைரமுத்துதான் இப்படத்துக்கு பாடல்கள் எழுதப் போகிறார் என்று கூட கூறப்பட்டது. அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.



இந்த நிலையில் மீண்டும் ரஜினி, கமலை வைத்து ஒரு புதிய பேச்சு கிளம்பியுள்ளது. சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கமலும், ரஜினியும் இணையப் போவதாக அந்தத்தகவல் கூறுகிறது.



சிவாஜி குடும்பத்தின் செல்லப் பிள்ளைகளாக உள்ளவர்கள் ரஜினியும், கமலும். எனவே சிவாஜி பிலிம்ஸுக்காக அவர்கள் நடிப்பார்கள் என்ற செய்தி நம்பும்படியாகவே உள்ளது.



இருப்பினும் இதுகுறித்து சிவாஜி பிலிம்ஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான ஆமோதிப்பும், மறுப்பும் வெளியிடப்படவில்லை.



எனவே இது உண்மையா அல்லது மேலும் ஒரு வதந்தியா என்பது நாளடைவில் தெரிய வரும்

'ரேப் சென்டிமென்ட்'-கோபத்தில் பிரியா மணி!



தன்னை வைத்து கோலிவுட்டில் தற்போது பேசப்பட்டு வரும் ஒரு 'ராசி' குறித்து பிரியா மணி கடும் கோபமடைந்துள்ளார். இப்படியெல்லாமா ஒரு நடிகை குறித்துப் பேசுவது என்று கடும் அதிருப்தியும் அடைந்துள்ளார்.



அது வேறு ஒன்றும் இல்லை, பிரியா மணிக்கும், கற்பழிப்புக் காட்சிக்கும் செம பொருத்தம் என்று சினிமா க்காரர்களிலேயே சிலர் பேசி வருகிறார்களாம்.



பருத்தி வீரன் படத்தில் பலர் சேர்ந்து கற்பழிப்பது போன்ற காட்சியில் நடித்திருந்தார் பிரியா மணி. அந்தக் காட்சியை அமீரும் மிகக் கோரமாக காட்டியிருந்தார். இந்தக் காட்சி நிறையவே பேசப்பட்டது.



தற்போது சமீபத்தில் வெளியான ராவணன் படத்திலும் பிரியா மணி பல போலீஸ்காரர்கள் சேர்நது கற்பழிப்பது போன்ற காட்சியை வைத்திருந்தார் மணிரத்தினம். இந்தக் காட்சியும் பேசப்பட்டது.



இதையடுத்து பிரியா மணிக்கு கற்பழிப்புக் காட்சிகள் நல்ல பொருத்தமாக உள்ளதாக கோலிவுட்டில் பேச ஆரம்பித்து விட்டனராம்.



இதுவைர மதர் சென்டிமென்ட், சிஸ்டர் சென்டிமென்ட், வில்லேஜ் சென்டிமென்ட் என்று பேசி வந்தவர்கள் புதிதாக அதில் கற்பழிப்பு சென்டிமென்ட்டையும் சேர்த்துள்ளனர்.



இது பிரியா மணி காதுக்குப் போக அவர் அப்செட்டாகி விட்டாராம். இப்படியெல்லாம் கூடவா பேசுவார்கள் என்று அவர் பொறுமியதாக கூறுகிறார்கள்.



இந்த நிலையில் பிரியா மணி ராவணன் படத்தை முடித்த கையோடு மலையாளத்துக்குப் போகிறார்.அங்கு மம்முட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ரஞ்சித் இயக்குகிறார். பிரஞ்சியேட்டன் மற்றும் ஒரு சாமியார் என்ற தலைப்பிலான படம் இது. காமெடிப் படமாம்.



கற்பழிப்பு சென்டிமென்ட் பேச்சை மறைக்க இந்த காமெடிப் படம் பிரியாவுக்குக் கை கொடுக்கட்டும்!

நடிகர் ஜெயம் ரவி ஆண் குழந்தைக்குத் தந்தையானார்



நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கு இன்று மாலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.



நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு இந்த மாத கடைசியில் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறியிருந்தனர்.



இந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்படவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று மாலை 4.15 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.



தாயும், சேயும் நலம் என ஜெயம் ரவி குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.



ஆஸ்கர் விருது-நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு



ஆஸ்கர் விருது களைத் தேர்வு செய்யும் கமிட்டியில் நடுவர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இந்தியர்களுக்குப் பெருமளவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொடுத்த படம் ஸ்லம்டாக் மில்லியனர். இப்படத்துக்காக ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்றார். ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு தலா ஒரு விருது கிடைத்தது.



இந்த நிலையில் விருத்துக்கான படங்களைப் பரிசீலிக்கும் ஆஸ்கர் கமிட்டியில் ரஹ்மானும், பூக்குட்டியும் சேர்க்கப்பட்டுள்ளனர். படங்களைப் பார்த்து மதிப்பிட்டு மார்க் கொடுக்கும் பணி இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போல ஏராளமான பேர் இக்கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.



இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், மிகப் பெரிய பணி. இதை எதிர்பார்க்கவில்லை. சிறப்பாக செய்ய வேண்டும் என கருதுகிறேன் என்றார்.

கிளியோபாட்ராவாக நடிக்கும் ஏஞ்சலினா ஜூலி



பல பேரரசர்களை தனது அழகால் பதறடித்த கிளியோபாட்ராவின் வேடத்தில், நடிக்கவுள்ளார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி.

1963 ம் ஆண்டு, எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'கிளியோபாட்ரா: எ லைப்' என்ற திரைப்படம் வெளியானது. அந்த படத்தில், கிளியோபாட்ராவாக எலிசபெத் டெய்லரும், அவரது காதலன் மார்க் ஆன்டனியாக டெய்லரின் நிஜ காதலன் ரிச்சர்ட் பர்டனும் நடித்தனர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதே திரைப்படத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் தயாரிக்கின்றனர்.



'கிளியோபாட்ரா: எ லைப்' படத்தின் உரிமையை ஸ்காட் ருடின் என்ற தயாரிப்பாளர் வாங்கியுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க். படத்தில், கிளியோபாட்ராவாக நடிக்க ஹாலிவுட்டின் முன்னனி நடிகையான ஏஞ்சலினா ஜூலியும், மார்க் ஆன்டனியாக அவரின் வாழ்க்கைத் துணைவர் பிராட் பிட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.



இது குறித்து படத் தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் கூறுகையில்:



அப்போதைய கிளியோபாட்ரா திரைப்படம், தற்போதைய நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறுசிறு மாற்றங்களுடன் புதிதாக தயாரிக்கப்படுகிறது.



இந்த கதாபாத்திரத்திற்கு ஏஞ்சலினா மிகவும் பொருத்தமானவர். ஏற்கனவே, ஆஸ்கர் விருது பெற்றுள்ள இவர், இந்த படத்திற்காக இன்னும் ஒரு விருது வாங்குவார் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினர்.

கனடா நாட்டின் சுற்றுலா தூதராக அக்ஷய் குமார் நியமனம்



இந்தி நடிகர் அக்ஷய் குமார், கனடா நாட்டின் சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.



அக்ஷய் குமாருக்கு கனடாவிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர் நடித்த படங்கள் அங்கும் நன்றாக ஓடியுள்ளன. கனடாவில் நடந்த வின்டர் ஒலிம்பிக் போட்டியின்போது, ஜோதி ஓட்டத்திலும் குமார் கலந்து கொண்டார்.



இந்த நிலையில் அவரை அந்த நாட்டு சுற்றுலா தூதரகா நியமித்துள்ளனர். 2012 வரை இந்தப் பொறுப்பில் இருப்பாராம் குமார். இது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கனடாவின் சுற்றுலாவை இந்தி யாவில் பிரபலப்படுத்த தயாராக இருப்பதாகவும் குமார் கூறியுள்ளார்.



இந்தியர் ஒருவரை தனது நாட்டு சுற்றுலாத் தூதராக கனடா நியமித்திருப்பதில் காரணம் உள்ளது. கடந்த ஆண்டு இந்திய சுற்றுலாப் பயணிகள் மூலம் கனடாவுக்கு 82 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அதிகரிக்கும் நோக்கில்தான் தற்போது இந்திய நடிகர் ஒருவரை சுற்றுலா தூதராக நியமித்துள்ளது கனடா.

கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா



திரையுலகில் பொன் விழா கண்டுள்ள கமல்ஹாசனைப் போற்றும் வகையில், கமல்ஹாசன் நினைவுகள் என்ற பெயரில் பிரமாண்ட விழாவை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் டெல்லியில் எடுக்கிறது. ஜூலை 2ம் தேதி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் மாலை 6.30 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது. 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை இந்த விழா நடைபெறும்.



விழாவின் தொடக்கமாக ஹே ராம் படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து அன்பே சிவம், விருமாண்டி, தேவர் மகன், சாகர சங்கமம், தசாவதாரம் மற்றும் நாயகன் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.



இதுதொடர்பாக தகவல் ஒலிபரப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 4 வயதில் நடிக்க வந்து தற்போது 55 வயதாகியும் தொடர்ந்து பிரகாசமான முறையில் நடித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு என்பது மிகவும் அரிய ஒன்ராகும். உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மா படம் மூலமாக தனது 4வது வயதில் 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி நடிக்க வந்தார்.



அதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதினைப் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை முழுவதும், நல்ல திரை ரசிகராகவும் இருந்து வருகிறார்.



அவர் இந்தியத்திரைப்படத்துறைக்கு ஆற்றி வரும் பணியைக் கெளரவித்து பாராட்டும் வகையில், 1990ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.



கமல்ஹாசன் இதுவரை 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், 5 தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள், 3 நந்தி விருதுகள் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.அவர் நடித்த மூன்றாம் பிறை, நாயகன், சிகப்பு ரோஜாக்கள், தேவர் மகன், சாகர சங்கமம், சாகர், சத்மா, விருமாண்டி உள்ளிட்ட திரைத் துறைக்கு கமல்ஹாசன் அளித்த சிறந்த படைப்புகளில் சில.



1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் அவரது நடிப்பை டைம் பத்திரிக்கை வெகுவாக பாராட்டியிருந்தது.



கடந்த 50 வருடங்களாக திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பணியாற்றி வரும் கமல்ஹாசனின் சேவைகளைப் பாராட்டி மத்திய திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் 3 நாள் கமல்ஹாசன் திரைப்படங்களின் நினைவுகள் என்ற பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



விழாவை அமைச்சர் அம்பிகா சோனி தொடங்கி வைக்கிறார். கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.



இந்த விழாவுக்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ் சின்னத்திரையாக ஸ்வேதா தேர்வு-தேவிப்பிரியாவுக்கு 3வது இடம்



சென்னையில் நடந்த மிஸ் சின்னத்திரை 2010 அழகிப் போட்டியில் ஸ்வேதா முதலிடத்தைப் பிடித்தார். 3வது இடம் நடிகை தேவிப்பிரியாவுக்குக் கிடைத்தது.



2010ம் ஆண்டிற்கான சின்னத்திரை அழகி போட்டி சென்னை யில் நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான விலாசினி, மோனிகா, லாவண்யா, மோபின், ஸ்வேதா, காயத்ரி, தேவிப்பிரியா, மணிமேகலை, அன்னபூரணி, ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



3 சுற்றுக்களாக போட்டி நடந்தது. முதலில் சேலை அணிந்தபடியும், பின்னர் மேற்கத்திய உடைகளிலும் அழகிகள் நடைபோட்டனர். அவர்களிடம் நடுவர்களாக கலந்து கொண்ட நடிகை சமீதா, நடிகர் நட்ராஜ், டைரக்டர் ரவிமரியா, ஆடை அலங்கார நிபுணர் சுனில்மேனன், மிஸ் சென்னை திவ்யா, அழகுகலை நிபுணர் மது ஆகியோர் தனித் தனியாக கேள்விகள் கேட்டனர்.



இதன் அடிப்படையில் 2010ம் ஆண்டு சின்னத்திரை அழகியாக ஸ்வேதா தேர்வானார். இவருக்கு நடிகை கீர்த்தி சாவ்லா கிரீடம் சூட்டினார்.



2வது இடம் ரஜினிக்கும், 3வது இடம் நடிகை தேவிப்பிரியாவுக்கும் கிடைத்தது.



கூந்தல் அழகியாக மணிமேகலை, மெல்லிய தோல் அழகியாக லாவண்யா, அழகான உடல்வாகு உடையவராக விலாசினி, போட்டோ முக அழகியாக அன்னபூரணி, அழகான முக அழகியாக மோனிகா, திறமையாளராக மோபின், அழகான கண் அழகியாக காயத்ரி ஆகியோர் தேர்வானார்கள்.



நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை,நடன நிகழ்ச்சிகளும் களை கட்டின.

டாக்டர் மீது ஜாக்சன் தந்தை வழக்கு



தனது மகனின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக கூறி மைக்கேல் ஜாக்சனின் டாக்டர் மீது ஜாக்சனின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.



கடந்த ஆண்டு ஜூன் 25ம்தேதி ஜாக்சன் திடீர் என மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியவண்ணம் உள்ளது.



இந்த நிலையில் முதலாமாண்டு நினைவு தினத்தை ஜாக்சனின் லட்சோபம் லட்சம் ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி, இசை நிகழ்ச்சிகளுடன் அனுசரித்தனர்.



இந்த நிலையில், மைக்கேல் ஜாக்சனுக்கு சிகிச்சை அளித்த குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரே மீது அவரது தந்தை ஜோ ஜாக்சன் வழக்கு தொடர்ந்துள்ளார்.



மைக்கேல் ஜாக்சனுக்கு தவறான சிகிச்சை அளித்து அவர் மரணம் அடைய காரணமாக இருந்ததாக அதில் கூறியுள்ளார். இந்த வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெடரல் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது.



ஏற்கனவே அபாயகரமான மருந்துகளை அதிக அளவில் ஜாக்சனுக்குக் கொடுத்ததாக முர்ரே மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, June 28, 2010

ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின



மணிரத்தினம் இயக்கி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ராவணன் படத்தின் திருட்டு விசிடிக்களைப் பறிமுதல் செய்யும் வேலையில் காவல்துறை இறங்கியுள்ளது.



நடிகையும், மணிரத்தினத்தின் மனைவியும், ராவணன் படத்தின் வசனகர்த்தாவுமான சுஹாசினி போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து திருட்டு விசிடிப் புழக்கம் தொடர்பாக புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து ராவணன் பட திருட்டு விசிடிக்களைப் பறிமுதல் செய்ய காவல்துறைக்கு ராஜேந்திரன் உத்தரவிட்டார்.



அதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் உதவி கமிஷனர் விமலா ஆகியோரது மேற்பார்வையில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் புதுப்பட சி.டி.க்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



தனிப்படையினர் மண்ணடியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு திருட்டு விசிடிக்களை தயாரித்துக் கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் சிக்கினார்.



அங்கிருந்து ராவணன் பட விசிடிக்கள் 3000 உள்பட மொத்தம் 5000 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 40 சிடி ரைட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.



சிக்கிய மணிகண்டனை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இதேபோல பர்மாபஜாரில் 1150 ராவணன் பட சிடிக்கள் சிக்கின. துரை என்பவர் கைது செய்யப்பட்டார்.



இதேபோல சுனாப் என்பவர் ராவணன், சிங்கம் உள்ளிட்ட படங்களின் திருட்டு விசிடிக்களை விற்றதற்காக கைது செய்யப்பட்டார்.

Saturday, June 26, 2010

செம்மொழி மாநாடு: நடிகர் சிவக்குமார் தலைமையில் கருத்தரங்கம்!


கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு தினமான நாளை நடிகதர் சிவக்குமார் தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது.

கடந்த 23-ந் தேதி கோலகலமாக தொடங்கிய செம்மொழி மாநாட்டில், தினமும் கருத்தரங்கம், கவியரங்கம், சொற்பொழிவு கலகலப்புக்கும் சுவாரஸ்யத்துகும் பஞ்சமில்லாமல் போகிறது.

மாநாட்டின் நிறைவு விழா நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. விழாவை யொட்டி காலை 9.45 மணிக்கு பொது அரங்க நிகழ்ச்சி திருக்குவளை சகோதரிகள் மங்கல இசையுடன் தொடங்குகிறது.

அதைத்தொடர்ந்து வித்தாக விளங்கும் மொழி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. நடிகர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார். பேராசிரியர் சுப வீரபாண்டியன் தொடக்க உரையாற்றுகிறார்.

பீட்டர் அல்போன்ஸ் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் பேசுகிறார்.

அதைத்தொடர்ந்து ஜெகத் கஸ்பார் (யாதும் ஊரேயாவரும் கேளிர்), பேராசிரியர் பர்வின் சுல்தானா (உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றே), வக்கீல் ராமலிங்கம் (தீதும் நன்றும் பிறர் தர வாரா), வக்கீல் அருள்மொழி (போரைப்புறந்தள்ளி பொருளை பொதுவாக்கவே), கம்பம் செல்வேந்திரன் (ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே), திருச்சி செல்வேந்திரன் (அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து) ஆகிய தலைப்புகளில் பேசுகிறார்கள்.

பிற்பகல் 2 மணிக்கு மாநாட்டு வளாகத்தில் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையம் வழங்கும் கலை நிகழ்ச்சியும், 2.30 மணிக்கு பாலசாயி குழுவினர் வழங்கும் கலந்திசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

சென்னை..30 குறும்படம் எடுக்கும் கமல்!



பெரும் படங்களுக்கு தற்காலிக விடை கொடுத்து குறும்படங்கள் தயாரிக்கப் போகிறார் கமல்ஹாசன்.



சென்னை மாநகரைப் பற்றி பலவித கோணங்களில் பல படைப்பாளிகளின் பார்வைகளைப் பதிவு செய்யும் பொருட்டு 30 குறும்படங்களைத் தயாரிக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.



சமீபத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து திரைக்கதை பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினார் நடிகர் கமல்ஹாசன்.



இந்தப் பட்டறையில் 250 இளம் படைப்பாளிகள் மற்றும் துணை இயக்குநர் கள் பங்கேற்றனர். ஒரு வார கால பயிற்சியின் நிறைவில், படைப்பாளிகள் இனி குறும்படங்களை எடுத்து அவற்றை வெளியிட யு ட்யூப் போன்ற வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.



அதை நடைமுறைப்படுத்தும் வகையில் இப்போது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் கமல். சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பிரான்ஸின் பிரபல திரைப்பட இயக்குநரும், சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது பெற்றவருமான ஜீன் க்ளாட் கேரியருடன் கலந்து கொண்ட கமல், தனது திட்டம் குறித்து கூறியதாவது:



சென்னை நகரம் அன்றைக்கும் இன்றைக்கும் பல செய்திகளைச் சொல்லும் விஷயமாகவே எனக்குப் படுகிறது.



முன்பு சென்னையில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் பல நினைவுகள் வந்து போகின்றன. முன்பு அண்ணாசாலையில் ஸ்பென்ஸர் பிளாஸா (பழைய கட்டிடம்), ஹிக்கின் பாதம்ஸ் என சுதந்திரமாக நடந்தே செல்ல முடியும். ஆனால் இனி அது சாத்தியமா என்று தெரியவில்லை. அவ்வளவு மாற்றங்களை இந்த நகரம் சந்தித்துள்ளது.



இந்த குறும்பட முயற்சி வெறும் வணிக நோக்கத்தில் எடுக்கப்படுவதல்ல. அதேபோல பல பெரிய, சிறிய இயக்குநர்களின் பங்களிப்பும் உள்ளது. ஹரிஹரன், சேகர் குப்தா போன்ற ஜாம்பவான் இயக்குநர்களும், என்னைப் போன்ற சிறிய இயக்குநர்களும் இந்த குறும்படங்களை உருவாக்கவிருக்கிறோம்.



மேலும் எங்கள் பயிற்சிப் பட்டறைக்கு வந்த 250 பேரில் 60 பேரைத் தேர்வுசெய்து, அவர்களில் 30 பேரை இறுதி செய்து இந்த குறும்படங்கள் இயக்கும் வாய்ப்பைத் தந்துள்ளோம்.



இந்தப் படங்களைத் தயாரிக்கவே ராஜ்கமல் குறும்பட தயாரிப்புப் பிரிவையும் துவக்கியுள்ளோம், என்றார் கமல்.



நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரெஞ்ச் இயக்குநர் ஜீன் கிளாட் கேரியர் கூறுகையில், இந்தியா என்றாலே அதன் தென் மாநிலங்கள்தான் கலாச்சார சிறப்பில் முதலிடத்தில் நிற்கின்றன. குறிப்பாக சென்னை மறக்கமுடியாத அற்புதமான நகரம். இந்த நகரம்தான் பல கலாச்சார சிறப்பு மிக்க கலைகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது. இந்த சிறப்பான நகரம் பற்றிய அழுத்தமான பதிவுகளாக இந்த 10 நிமிட குறும்படங்கள் அமையும், என்றார்.



கமல்ஹாசனின் லட்சியப் படமான மருதநாயகத்தின் திரைக்கதை வடிவமைப்பில் பெரும் உதவி புரிந்தவர் ஜீன் கிளாட் கேரியர் என்பது நினைவிருக்கலாம்.

ராவணன் திருட்டு விசிடி... கமிஷனரிடம் சுஹாஸினி புகார்!



ராவணன் படம் திரையரங்குகளை விட்டு தூக்கப்படும் நிலையில், அந்தப் படத்தின் திருட்டு விசிடி வெளியாகிவிட்டதாக மணிரத்னம் மனைவி சுஹாஸினி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.



மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் கடந்த வாரம் வெளியானது ராவணன் திரைப்படம்.



படம் வெளியான அன்று இரவே படத்தின் முழு வீடியோவும் இணையதளங்களில் வெளியாகிவிட்டது. இந்த ஒரு வாரத்துக்குள் 6 வெவ்வேறு பிரிண்டுகள் பர்மா பஜார் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு வந்துவிட்டன.



திரையரங்குகளிலும் இந்தப் படத்துக்கு கூட்டம் குறைந்துவிட்டது. சிறுநகரங்களில் ஏற்கெனவே படம் தூக்கப்பட்டுவிட்டது. இதன் இந்திப் பதிப்பு ராவண், மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.



இந்த நிலையில் இப்படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக மணிரத்னத்தின் மனைவியும் படத்துக்கு வசனம் எழுதியவருமான நடிகை சுஹாசினி புகார் கூறியுள்ளார்.



இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைச் சந்தித்து அவர் மனு கொடுத்தார்.



பின்னர் நிருபர்களிடம் சுஹாஸினி கூறுகையில், "ராவணன் திரைப்படம் இந்தியில் ராவண் என்ற பெயரிலும், தெலுங்கில் வில்லன் என்ற பெயரிலும் வெளிவந்துள்ளது.



இப்படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் சென்னையில் விற்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து இன்று முறையிட்டோம்.



நாங்கள் சொன்னதை கவனமுடன் கேட்ட போலீஸ் கமிஷனர் உடனடியாக வீடியோ தடுப்பு பிரிவு போலீசாரை போனில் அழைத்து அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். மாநில அளவில் செயல்படும் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசிடமும் போனில் பேசினார்.



இன்று மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி ராவணன் திருட்டு சி.டி.யை யார் விற்றாலும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.



எனவே ராவணன் திருட்டு சி.டி.யை யார் வைத்திருந்தாலும் உடனடியாக தூக்கி போட்டு விடுங்கள். யாரிடமாவது திருட்டு சி.டி. இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவியுங்கள்.



புதுவை முதல்வர் வைத்திலிங்கமும் எங்களை தொடர்பு கொண்டு பேசினார். புதுவையில் இருந்து ராவணன் சி.டி.க்கள் சப்ளை செய்யப்படுவதாக அவரிடம் புகார் தெரிவித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரும் உறுதி அளித்துள்ளார்.



கனடாவில் இருந்து கேமராவில் எடுக்கப்பட்டு ராவணன் திருட்டு சி.டி. யாக தற்போது வெளி வந்துள்ளதை கண்டு பிடித்துள்ளோம். வெளிநாடுகளில் புதுப் படங்களின் திருட்டு சி.டி.க்கள் தயாரிக்கப்பட்டு புதுவையில் இருந்து சப்ளை செய்யப்படுகிறது.



வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் போட்டுப் பார்ப்பதற்காகத்தான் ஹோம் வீடியோ என்ற பெயரில் வெளிநாட்டு உரிமத்தை வழங்குகிறோம். ஆனால் சிலர் அதனை திருட்டு சி.டி.க்களாக தயாரித்து வெளியிட்டு விடுகிறார்கள்.



எனவே தயாரிப்பாளர்கள் புதிய படங்களின் வெளிநாட்டு உரிமம் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.



ராவணன் வெற்றிப் படமா தோல்விப் படமா என்பதை இப்போது கூறமுடியாது" என்றார்.

ஜூலை 2 முதல் 'வெளுத்துக்கட்டு'!



எஸ்ஏ சந்திரசேகரன் சொந்தப் படமான வெளுத்துக் கட்டு வரும் ஜூலை 2-ம் தேதி வெளியாகிறது.



இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகரன். சேனாபதி மகன் இயக்குகிறார்.



என் வாழ்க்கையின் ஒரு பகுதி இந்தப்படம் என்று கூறி இந்தப் படத்துக்கு விளம்பரம் செய்துவரும் எஸ் ஏ சி, படத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளார்.



படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகளும் பாராட்டி யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.



விஜய்க்காக இந்தப் படம் சமீபத்தில் சிறப்புக்காட்சியாக போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு அவர் வெகுவாகப் பாராட்டினாராம்.



இந்தப் படத்துக்காக ராமநாதபுரம், புதுக்கோட்டை, மானாமதுரை போன்ற சின்னச் சின்ன நகரங்களிலும் அறிமுக விழா நடத்து விளம்பரம் செய்து வருகிறார் எஸ்ஏசி.



வரும் ஜூலை 2-ம் தேதி தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம்.

உலக தமிழ் குறும்பட போட்டி: 1500 படங்கள் குவிந்தன!

சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் 'உலகத் தமிழ் குறும் படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் போட்டியில் பங்கேற்க 1500 தமிழ் குறும்படங்கள் குவிந்தன.



பச்சை என்கிற காத்து என்ற படத்தை தயாரித்து வரும் 'அ' திரை நிறுவனம் இந்த போட்டிகளை நடத்துகிறது.



குறும் படங்கள், ஆவணப் படங்கள், விளம்பர படங்கள் மற்றும் தமிழிசை தொகுப்புகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.



உலகம் முழுவதும் இருந்து இதுவரை 1500 போட்டியாளர்கள் குறும்பட போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ளதாகவும், படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூலை 5-ந்தேதி என்றும் இப் போட்டிகளை நடத்தும் பச்சை என்கிற காத்து திரைப்பட இயக்குனர் கீரா, தயாரிப்பாளர்கள் அசுவத்தாமன், இந்துமதி, வைகறையாளன், தனலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.



போட்டியில் வெற்றி பெறும் 25 படங்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. இந்த குறும்பட விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.



முன்னணி இயக்குனர்கள் ஒளிப்பதிளார்கள், கல்லூரி முதல்வர்கள் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.

Friday, June 25, 2010

மீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆன்டனி!



விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இசையமைப்பாளராக மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் ஆன்டனி.



சிங்கள ராணுவம் தமிழீழ விடுதலைப் படையைத் தோற்கடித்ததைக் கொண்டாடும் சிங்களப் பாடலுக்கு இசையமைத்தார் என தமிழர்களின் கோபத்துக்குள்ளானவர் விஜய் ஆன்டனி.



யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் இலங்கை ராணுவத்துக்காக கச்சேரிகள் நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த ஒரே காரணத்துக்காக முன்பு இவர் இசையமைத்த வேட்டைக்காரன் படத்தைப் புறக்கணிப்பதாக பல தமிழ் அமைப்புகள் அறிவித்தது நினைவிருக்கலாம்.



ஆரம்பத்தில் வேலாயுதம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் வேட்டைக்காரன் படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், வேலாயுதத்துக்கும் விஜய் ஆன்டனியே இசையமைக்கட்டும் என்று விஜய் சொல்ல, அதற்கு இயக்குநர் ஜெயம் ராஜாவும் ஒப்புக் கொண்டாராம்!



அடுத்தவாரம் வேலாயுதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

அசினுக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு: ராஜபக்சே அரசு ஏற்பாடு!!



இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள அசின் - சல்மான்கான் ஜோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துள்ளது ராஜபக்சே அரசாங்கம்.



மேலும் அசினுக்கும் சல்மானுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இஸட் பிரிவு பாதுகாப்பு ம் வழங்கியுள்ளது இலங்கை அரசு.



ஐஃபா விழாவுக்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முதல்நிலை நடிகர்கள் போகாமல் புறக்கணித்தபோது விவேக் ஓபராய், சல்மான் கான் ஆகியோர் மட்டுமே இலங்கைக்குச் சென்றார்கள்.



அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக, வடக்கு புணரமைப்புத் திட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை வழங்கியுள்ளது இலங்கை அரசு. இந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்குப் போன சல்மானும் விவேக்கும் இன்னும் கூட இந்தியாவுக்குத் திரும்பவில்லை.



இருவரும் கிட்டத்தட்ட இலங்கையின் நிரந்தர விருந்தாளிகளாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். மேலும் சல்மான் கானும் ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சேயும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர்.



வடக்கு இலங்கையில் இதுவரை சினிமாக்காரர்களின் கால்படாத பல லொக்கேஷன்களில் சல்மான்கான் தனது ரெடி படத்தை எடுக்கிறார். இரண்டு மாத காலம் நடக்கும் நடக்கும் இந்தப் படப்பிடிப்புக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு தருகிறது. அசின்- சல்மான் ஆகிய நட்சத்திரங்களுக்கு மட்டும் உச்சபட்ச இஸட் பிரிவு பாதுகாப்பைத் தர உத்தரவிட்டுள்ளார் ராஜபக்சே.



இதைத் தொடர்ந்து கமாண்டோ வீரர்கள் சூழ இலங்கையில் நடமாடுகின்றனர் இவ்விருவரும்.



உண்மையில் இந்தப் படம் மொரீஷியஸில் ஷூட் பண்ணத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் ராஜபக்சேயின் உபசரிப்பைப் பார்த்த பிறகு வேறு எந்த நாடும் வேண்டாம், இலங்கையே போதும் என்று முடிவு செய்துவிட்டாராம்.

ஜாக்ஸன் முதலாமாண்டு அஞ்சலி... ரசிகர்கள் கண்ணீர்!



பாப் இசையின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்ஸனின் முதல் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி திடீரென மரணம் அடைந்தார். அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பதில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. மரணமடைந்த அவரது உடலை புதைத்து, மீண்டும் எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்து, 70 நாட்கள் அலைக்கழித்த பிறகு அடக்கம் செய்தனர்.



அதே நேரம் இந்த இழப்பைத் தாங்க முடியாமல் உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் துயரத்தில் குலுங்கினர்.



மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்து இன்றுடன் சரியாக ஓராண்டு ஆகிறது. இதையொட்டி உலகம் முழுக்க உள்ள பாப் இசை ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.



பல நகரங்களில் அவரை நினைவு கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.



மைக்கேல் ஜாக்சனை கவுரவிக்கும் வகையில் மேடம் டுஸ்ஸாட் அருங்காட்சியகம் உலகம் முழுக்க 9 இடங்களில் மைக்கேல் ஜாக்சன் மெழுகுப் பொம்மைகளை வைத்துள்ளது. அந்த மெழுகுப் பொம்மை கண்காட்சியை பார்க்க மக்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.



இந்த மெழுகு பொம்மை கண்காட்சி அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



சகோதரியின் குற்றச்சாட்டு!



இதற்கிடையே மைக்கேல் ஜாக்சனின் சகோதரி லடோயா நேற்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மைக்கேல் ஜாக்சன் இயற்கையாக மரணம் அடையவில்லை. அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.



அவர் மேலும் கூறுகையில், "என் சகோதரர் உயிர் வாழ்வதை விட இறந்தால்தான் நிறைய லாபம் கிடைக்கும் என்று ஒரு கூட்டம் நம்பியது. அவர்கள்தான் சதி செய்து மைக்கேல் ஜாக்சனைக் கொன்று விட்டனர். இதில் எனக்கு சந்தேகமே இல்லை", என்றார்.



மைக்கேலே ஜாக்ஸன் மரணம் குறித்து கடந்த ஓராண்டாக பல பரபரப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேக்னா நாயுடு கர்ப்பம்?- இ-மெயிலால் பரபரப்பு!



நான் கர்ப்பமா இருக்கேன்... காரணம் யாருன்னு தெரியல' என்று பிரபல நடிகை மேக்னா நாயுடு அனுப்பியது போன்ற மின்னஞ்சல் பலருக்கும் கிடைத்ததால் நேற்று முழுவதும் பரபரப்பு நிலவியது.



நடிகை மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி, அவர் கர்ப்பமாக இருப்பதாக அவதூறு செய்தி பரப்பி விட்டுள்ளார் ஒரு மர்ம ஆசாமி.



தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கவர்ச்சி நடிகை மேக்னா நாயுடு. இவர் மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.



தமிழில் டி.ராஜேந்தரின் வீராசாமியில் அறிமுகமானார். நடிகர் சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் இசை ஆல்பமும் செய்திருக்கிறார்.



கடந்த சில நாட்களாக மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியில் இருந்து அவருடைய தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் தொடர்ச்சியாக இ-மெயில்கள் வந்தன. அவற்றில், 'நான் (மேக்னாநாயுடு) கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை... உங்க அட்வைஸ் தேவை' என்று மேக்னா நாயுடு சொல்வது போல அனுப்பப்பட்டது.



மேலும் இந்த இ-மெயில்களுடன் மேக்னா நாயுடு நடிகர்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.



இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழிகளும், உறவினர்களும் மேக்னா நாயுடுவை தொடர்பு கொண்டு இ-மெயில் விபரத்தை கூறி 'உனக்கு என்னாச்சு?' என்று செல்போனில் திட்டினார்களாம்.



இதனால் அதிர்ச்சி அடைந்த மேக்னா நாயுடு தன்னுடைய இ-மெயில் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயில்களை சோதனை செய்தார். அப்போதுதான் யாரோ ஒரு மர்ம ஆசாமி தன்னுடைய இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி, விளையாடியிருப்பது புரிந்தது.



இது குறி்த்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் மேக்னா. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் Vs கே ஆர்ஜி!



சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராம.நாராயணனும், கே.ஆர்.ஜியும் மோதுகிறார்கள்.



இதற்கான வேட்பு மனுவை கே ஆர்ஜி நேற்று தாக்கல் செய்தார்.



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜுலை) 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜுலை 11-ந் தேதி ஓட்டுப்பதிவு.



இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ராம.நாராயணனை எதிர்த்து, கே.ஆர்.ஜி. போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை நேற்று மாலை தாக்கல் செய்தார்.



தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏற்கெனவே 8 ஆண்டுகள் தலைவராக இருந்தவர் கே.ஆர்.ஜி. தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவராக 4 ஆண்டுகள் பதவி வகித்தவர்.



ராம.நாராயணன் ஏற்கனவே 2 முறை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். முதலில் இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எண்ணமில்லை என்று கூறிவந்தார். ஆனால் தனது முடிவை மாற்றிக் கொண்டு இப்போது 3-வது முறையாக இந்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.



இதுகுறித்து ராம நாராயணன் கூறுகையில், "ஒட்டு மொத்த திரையுலகின் நலன் கருதியும், அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கவும் இந்த முறையும் தேர்தலில் நிற்கிறேன். என்னைப் பற்றி கவுன்சில் உறுப்பினர்களுக்குத் தெரியும்..." என்றார்.



சிறு படத் தயாரிப்பாளர்களுக்காக...



தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து கேஆர்ஜி கூறுகையில், "பதவி ஆசையால் நான் போட்டியிடவில்லை. சிறிய படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற இப்போது களமிறங்குவது முக்கியமானதாக உள்ளது" என்றார்.

எக்கச்சக்க செலவு... பிஎம்டபிள்யூ காரை விற்கும் நயன்!



பிரபுதேவாவுக்கும் சேர்த்து தானே செலவு செய்து வருவதால், போதிய பணமில்லாமல் தவிக்கும் நயன்தாரா, தனது காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ காரை விற்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



நயன்தாராவும் பிரபு தேவாவும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். தற்போது இருவரும் பிரான்சில் தங்கியுள்ளனர்.



தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. காரணம், பத்திரிகையாளர்கள் சூழந்து கொள்வது மற்றும் பிரபு தேவாவின் முதல் மனைவி ரம்லத்தின் மிரட்டல் .



சென்னையிலும் ஒன்றாக வசிக்க முடியவில்லை. இருவரும் தனிகுடித்தனம் நடத்த பிரபுதேவா வீடுபார்த்தார். அதுவும், நடக்க வில்லை.



இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் இண்டர் நெட்டில் வெளியாயின. அவற்றை அவர்கள் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில், தன்னிடமிருந்த ரொக்கத்தில் பெரும் தொகையை பிரபுதேவாவுக்கே செலவழித்து வருகிறாராம் நயன்தாரா. ஆனால் படங்களில் நடிக்காமல் பிரபுதேவாவுடன் சுற்றிக் கொண்டிருப்பதால் வருமானம் குறைந்து கையில் பணமும் இல்லாத நிலை.



நிதி நெருக்கடியைச் சமாளிக்க இப்போது தனது ஆடம்பர பி.எம்.டபுள்யூ வெளிநாட்டு காரை விற்பதற்காக விலை பேசி வருகிறாராம். கிட்டத்தட்ட 1 கோடி மதிப்புள்ள அதிநவீன சொகுசு கார் இது. சில மாதங்களுக்கு முன்புதான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தார் நயன்தாரா.

டெல்லியில் 'கமல் திரைத் திருவிழா'! - மத்திய அரசு ஏற்பாடு



நடிகர் கமல் ஹாஸனை கவுரவிக்கும் விதத்தில் டெல்லியில் மத்திய அரசு சிறப்புத் திரைப்பட விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.



கமல் ஹாஸனின் பொன்விழாவைக் கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி வரும் ஜூலை 2-ம் தேதி திறந்து வைக்கிறார்.



முன்பு சென்னை வந்திருந்த அமைச்சர் அம்பிகா சோனி, கமலை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசே விழா எடுக்கும் என்று கூறியிருந்தார். இப்போது அதை அரசு நிறைவேற்றியுள்ளது.



ஜூலை நான்காம் தேதி வரை டெல்லி ஷ்ரிபோர்ட் அரங்கில் இந்த திரைத் திருவிழா நடக்கிறது. பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த விழாவில் மூன்று நாட்களிலும் கமல் ஹாஸன் நடித்த படங்கள் திரையிடப்படும்.



கமல் ரசிகர்களுக்கு இந்த விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம்.



துவக்க நாளில் ஹே ராம் படம் திரையிடப்படுகிறது. மேலும் ஏக்துஜே கேலியே, சாகர சங்கமம், நாயகன், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளன.



"கமலஹாசனின் கடந்த கால சினிமா நினைவுகள்" என விழாவுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.



கமலின் பொன்விழா சிறப்பு நிகழ்வை இந்திய அரசு கொண்டாடும் இந்த நேரத்தில், கமல் ஹாஸன் தனது மன்மதன் அம்பு படத்தின் ஷூட்டிங்குக்காக பிரான்ஸ் போயிருக்கிறார். அவரைக் கவுரவிக்க தனியாக பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.

Thursday, June 24, 2010

இணையதளத்தில் பாஸ்போர்ட்... ஐஸ்வர்யா அதிர்ச்சி!


பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட்டை சிலர் ஸ்கேன் செய்து இணையதளத்தில் பரவவிட்டுள்ளனர். இதில் அவரது பிறந்த நாள், எந்தெந்த நாடுகளுக்குப் போனார் உள்ளிட்ட சில விவரங்கள் வெளியாகியுள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

தனது பாஸ்போர்ட்டை வெளியாட்களிடம் எப்போதும் கொடுக்கமாட்டாராம் ஐஸ்வர்யா. ஆனால் இப்போது எப்படி வெளியானது என்று புரியாமல் குழம்பியுள்ளார். பாஸ்போர்ட்டில் தனது பெயரை ஐஸ்வர்யா என்று குறிப்பிட்டுள்ளார். பிறந்த தேதி 1.11.1973 என்று உள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய்க்கு 37 வயது என்பது உறுதியாகியுள்ளது.

திருமணத்துக்கு முன்பே இந்த பாஸ்போர்ட்டை எடுத்துள்ளார். இதை இண்டர்நெட்டில் வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது. போலீசுக்கும் இந்த பிரச்சினை ஒரு புகாராகத் தந்துள்ளனர்.

இந்த விஷயத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மீதுதான் ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம். வெளிநாட்டு படப்பிடிப்பு களுக்கு செல்லும்போது விசா பெறும் நடைமுறக்காக பாஸ்போர்ட்டை படப்பிடிப்பு குழுவினர் வாங்கிச் செல்வது உண்டு. அப்போது யாரோ இதனை ஸ்கேன் செய்து இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு இது போன்று முக்கிய பிரமுகரின் பாஸ்போர்ட் இண்டர்நெட்டில் வெளியான சம்பவங்கள் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மொழி மாநாடு: பிரபல நடிகர்கள் வரவில்லை!

கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் துவக்க நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட பிரபல நடிகர்கள் வரவில்லை.

முதல்வர் கருணாநிதி தலைமையில், கோவையில் நேற்று கோலாகலமாகத் துவங்கியது உலக தமிழ் செம்மொழி மாநாடு. இம்மாநாட்டிற்கு ஆயிரக்கணக்காணோர் வந்திருந்தனர்.

மாநாட்டில் சினிமா பிரமுகர்கள் திரளாக வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இவர்களுக்காக மட்டும் பல ஆயிரம் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததால், மாநாட்டுப் பந்தலில் முதல் வரிசையில் நடிகர் நடிகைகளுக்கென தனி பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் நடிகர்கள் பிரபு, சரத்குமார் , பிரசாந்த், விஜயகுமார், தியாகராஜன், பிரகாஷ்ராஜ், ராஜேஷ், நடிகைகள் குஷ்பு, ராதிகா, இயக்குநர் கே.பாலசந்தர், கே.பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா உட்பட சிலர் மட்டுமே மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாடு முடிந்ததும், நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன், விஜயகுமார் ஆகியோர் மேடையில் முதல்வரை சந்தித்துப் பேசினர்.

நடிகர்களை காண, பேச, படம் எடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் அனுமதிக்கவில்லை.

அதேநேரம் கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கமல் வெளிநாட்டில் படப்பிடிப்பில் உள்ளதால் பங்கேற்கவில்லை. இதர முன்னணி நடிகர்களும் முதல் நாள் நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை.

மூன்று நிமிட முத்தம்... முரண்டுபிடித்த நாயகி!


படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் போதும், எந்த அளவும் இறங்கிவந்து நடிப்பேன் என்று கற்பூரமடித்து சத்தியம் செய்யாத குறையாக அக்ரிமெண்டில் கையெழுத்துப் போடுவதும், படப்பிடிப்பில் கவர்ச்சிக் காட்சி வந்தால் முரண்டு பிடித்து நடிக்க மறுப்பதும் தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கும் காட்சிகள்.

இதோ அப்படி ஒரு காட்சி.

படத்துக்குப் பெயர் 'சாந்தி'. ஏ ஒன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிக்க ஒப்பந்தமானவர் மும்பை மாடல் அர்ச்சனா. இப் படத்துக்காக நடிக்க ஒப்பந்தம் ஆனபோது, 'மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தாராம்' நடிகை . கதையையும் இந்தக் காட்சியையும் அவருக்கு முன்கூட்டியே தெரிவித்து சம்மதமும் பெற்றிருந்தாராம் இயக்குநர் .

ஆனால் படம் ஆரம்பித்த இருபதாவது நாளில் தகராறு பண்ண ஆரம்பித்துள்ளார். குறிப்பாக ஒரு முத்தக்காட்சியைப் படம்பிடிக்கும் போது கோபித்துக் கொண்டு போயே போய்விட்டாராம்.

அந்தக் காட்சியில் நடிகைக்கு முத்தம் தரத் தயாராக காத்திருந்த புதுமுக ஹீரோ மகா ஆதித்யா 'வட போச்சே' என வடிவேலு ஸ்டைலில் புலம்பிக் கிடக்க, இன்னொரு பக்கம், 'நான் இப்பவே மும்பை போகணும்' என சலம்பினாராம் அர்ச்சனா.

விஷயத்தை தயாரிப்பாளர் கவனத்துக்குக் கொண்டுபோனார் இயக்குநர் முரளி விஷ்வா.

"சரி போனா போகட்டும் போய்யா... ஐஸ்வர்யா ராய் கோவிச்சுட்டுப் போறதா கெட்டுப் போச்சு... கையில கட்டோட நின்னா ஆயிரம் புதுமுகம் கிடைக்கும்..." என்று நடிகையை ஒரேயடியாக பேக் பண்ணுகிற முடிவுக்கு வந்துவிட்டாராம். தயாரிப்பாளர்.

விஷயத்தை நடிகைக்கு 'பாஸ்' பண்ணிவிட்டு அமைதியாகிவிட்டாராம் இயக்குநர். அடுத்து அவர் நினைத்தது நடந்தது. இறங்கி வந்தார் நடிகை.

'குளத்துல இறங்கியாச்சு... ட்ரஸ்ஸோடதான் குளிப்பேன்னு அடம்பிடிச்சா சினிமாவுல ஒத்துக்க மாட்டாங்களே" என நடிகையின் நலம் விரும்பிகள் (?!) ரொம்ப அட்வைஸ் பண்ணியதால், மீண்டும் ஷூட்டிங்குக்கு வந்தாராம் நடிகை.

கேட்டதை விட பல மடங்கு கிறக்கத்துடன் அவர் கொடுத்த முத்தத்தை மூணு கேமிரா வைத்து படம் பிடித்தாராம் முரளி விஷ்வா. ஒரு நிமிடம் 12 வினாடிகள் ஒரே ஷாட்டாக நீடித்த அந்த முத்தத்தை மூன்று நிமிட முத்தமாக திரையில் தரப்போகிறார்களாம். தேன் குடித்த நரி மாதிரி, இந்த முத்த முற்றுகையிலிருந்து இன்னும் தெளியாமலேயே திரிகிறாராம் அந்த புதுமுகம் ஹீரோ.

முத்தம் கொடுத்துவிட்டு மேக்கப்பைக் கலைத்த நடிகை, 'இப்போ டென்ஷன் இல்லை' என்றாராம்.

அடடா.. ஒரு முத்தம் வாழ்க்கையின் பல தத்துவங்களை புட்டுபுட்டு வச்சிடுச்சே!

ஐஃபா விழா போராட்டம் செத்துப்போன ஒன்று... என் படத்துக்கு தடை விதிக்க முடியாது! - சூர்யா


சென்னை: இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு எதிரான போராட்டம் செத்துப்போன விவகாரம். அதை மீண்டும் கிளறத் தேவையில்லை. இதன் அடிப்படையில், நானும் விவேக் ஓபராயும் நடித்துள்ள படத்துக்கு தடை விதிக்க முடியாது..", என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

இன்று வியாழக்கிழமை 'பெங்களூர் மிர்ரர்' நாளிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டி:

"தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் நீங்கள் நடித்துள்ள ரத்த சரித்திரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே?"

"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே (ராவணனுக்கு எதற்காக தடை விதிக்க வேண்டும்?).

ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன்.

நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சனை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?" என்று கேட்டுள்ளார் சூர்யா.

கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரை விழாவை தென்னகத் திரையுலகமே புறக்கணித்தது. வட இந்தியாவின் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான், ஐஸ்வர்யா ராய், ஜான் ஆபிரகாம், அக்ஷய் குமார் என முன்னணி நட்சத்திரங்கள் தமிழ் உணர்வாளர்களின் வேண்டுகோளை ஏற்று இலங்கை போகாமல் தவிர்த்தனர். இதையும் மீறி சில நடிகர்கள் போனார்கள். அவர்களின் படங்கள் இனி தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் திரையிடப்பட மாட்டாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது.

விழாவும் படுதோல்வியடைந்தது. இன்னொரு பக்கம் தடையை மீறி ஐஃபா விழாவுக்குப் போன விவேக் ஓபராய், சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன் படங்கள் தென்னகத்தில் வெளியாகத் தடை விதிக்கப்பட்டது.

இந் நிலையில், சூர்யா நடித்து அடுத்து வெளியாக உள்ள ரத்த சரித்திரம் தமிழ், இந்திப் படங்களில் சூர்யாவுடன் விவேக் ஓபராய் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு க் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஐஃபா விழாவை எதிர்த்து மும்பையில் ஆர்ப்பாட்டங்களில் இறங்கி அமிதாப் போன்றவர்களை விழாவுக்குச் செல்லாமல் தடுத்த சீமானின் நாம் தமிழர் கட்சி, ரத்த சரித்திரம் ரிலீஸ் விஷயத்தில் மட்டும் அடக்கி வாசிக்கிறது.

'சூர்யா என் தம்பி. அவரது படத்தை மட்டும் மன்னிக்கலாம்' என்று பல்டியடித்துள்ளார் சீமான். ஆனால் உண்மையில் சூர்யாவும் அவரது தந்தை சிவகுமாரும் சீமானை சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

சீமானின் இந்த கொள்கை நழுவலுக்கு உணர்வாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்த நேரத்தில்தான், கடந்த 2 மாத காலமாக தென்னிந்திய திரையுலகமே நடத்தி வரும் ஐஃபா விழா எதிர்ப்பு போராட்டத்தை 'செத்துப்போன விவகாரம்' என சர்வ சாதாரணமாக கூறியுள்ளார் சூர்யா.

நடிகர்கள் இலங்கைக்குப் போனது நல்ல விஷயம் என்று இப்போது கூறும் இவர், இரு வாரங்களுக்கு முன் இந்த போராட்டம் உச்சத்திலிருந்த போது போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறியது நினைவிருக்கலாம்.

திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!




ராஜ்கிரண் கடைசியாக இயக்கி நடித்த வெற்றிப் படம் எல்லாமே என் ராசாதான். அதற்குப் பிறகு அவர் வெறும் நடிகராக மாறிவிட்டார். அதுவும் சின்னச் சின்ன வேடங்களில். மகா பிஸியாக இருந்த அவரது வெற்றிப்பட நிறுவனமான ரெட்சன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸும் களத்திலேயே இல்லை. திரைப்பட விநியோகமும் நிறுத்தப்பட்டது.

பாசமுள்ள பாண்டியரே, பொன்னு விளையுற பூமி, வீரத்தாலாட்டு படங்களுக்குப் பிறகு சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த ராஜ்கிரணை, வெயிட்டான ரோலில் மீண்டும் காட்டியவர் பாலா. படம் நந்தா. அந்தப் படத்துக்கே தனி மரியாதையைத் தந்த பாத்திரம் அது.

தவமாய் தவமிருந்து படத்தில் இளசு, பெரிசு என்று வித்தியாசமில்லாமல் உலுக்கியெடுத்தது ராஜ்கிரண் நடிப்பு. அதன்பிறகு மரியாதைக்குரிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், இப்போது மீண்டும் தனது பரிவாரங்களுடன் இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.

ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடிக்கிறார் ராஜ்கிரண். படத்தின் பெயர் திருமங்கலத்து யானை.

ராஜ்கிரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகும் படம் இது. ராஜகிரண் தயாரித்த, இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் ராஜாதான் இசையமைப்பாளர்.

"இந்தப் படத்தில் மண்ணின் பெருமையும் இன்றைய இளைஞர்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சங்களும் தேவையான அளவுக்கு இருக்கும்" என்கிறார் ராஜ்கிரண்.

ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்குகிறது.

கேரளாவில் திரையரங்குகள் மூடல்-புதுப்பட ரிலீஸ் நிறுத்தம்!


சினிமா வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் புதிய சினிமா படங்கள் திரையிடுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரள திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகளுக்கு பதில் 4 காட்சிகள் திரையிட வேண்டும், விளம்பரத்துக்கு ஆகும் செலவை திரையரங்க உரிமையாளர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும், போன்ற கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கம் விடுத்துள்ளது.

இந்த கோரிக்கைகளை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதன் காரணமாக திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதன் காரணமாக நேற்று 48 வினியோக மையங்களை சேர்ந்த 200 திரையரங்குகளுக்கு புதிய சினிமா படங்களை கொடுப்பதில்லை என்று வினியோகஸ்தர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் புதிய படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

'புதிய படங்களையோ, பழைய படங்களை மீண்டும் திரையிடவோ கொடுக்க மாட்டோம்' என்று வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ஜோசி சி.முன்டாடன் தெரிவித்தார்.

'வினியோகஸ்தர்களின் இந்த திடீர் முடிவால் திரையரங்க உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவோம். புது முகங்களை வைத்து தயாரிக்கப்பட்ட 'நல்ல பாட்டுக்காரன்' என்ற படம் இன்று வெளியாக வேண்டும். இந்த நிலையில் புதிய படங்களை தரமாட்டோம் என்று வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளதால், நிலைமை பற்றி ஆராய வியாழக்கிழமை (இன்று) கமிட்டி கூட்டம் நடக்கிறது' என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.சி.பாபி தெரிவித்தார்.

இந்த மோதல் காரணமாக மோகன்லால் நடித்த 'ஒரு நாள் வரும்' என்ற படமும், ஜெயசூர்யா நடித்த 'நல்லவன்' படமும் வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது.

கருணாநிதி ஆரோக்க்கியத்துடன் வாழ ராகவேந்திர சாமியை வேண்டுகிறேன்-லாரன்ஸ்


கோவை: எத்தனையோ உதவிகள் செய்துவரும் முதல்வர் கருணாநிதி ஆரோக்கியத்துடன் நலமாக வாழ ராகவேந்திரா சாமியை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் நடிகர், நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று தொடங்கிய 2ம் நாள் நிகழ்ச்சியின் தொடக்கமாக செம்பனார் கோவில் சகோதரர்களின் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் லாரன்ஸ் குழுவினரின் மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், துணை முதல்வர் ஸடாலினின் மனைவி துர்க்கா, மு.க.அழகிரியின் துணை காந்தி அழகிரி ஆகியோர் இதை பார்த்து ரசித்தனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் லாரன்ஸ் பேசுகையில், எங்களது குழந்தைகள் இந்த நிகழ்ச்சியின் காரணமாக சந்தோஷமாக உள்ளனர். இது மிகப் பெரிய நிகழ்ச்சி. அதில் கலந்து கொள்கிறோம் என்பது சந்தோஷமாக உள்ளது.

நாங்கள் கேட்காமலேயே இந்த உதவியைச் செய்துள்ளார் கலைஞர். அவருக்கு நன்றி.

நான் நடத்தி வரும் அறக்கட்டளையில் 100 பேர் படித்து வருகிறார்கள். அதில் 35 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சையை இலவசமாக செய்ய ஏற்பாடு செய்தார் கலைஞர்.

இன்று 10 மாற்றுத் திறனாளிகள்தான் மேடையில் ஏறி ஆடியுள்ளனர். அடுத்து 1000 பேரை ஆட வைக்க விரும்புகிறேன். இதற்காக நடனப் பள்ளி தொடங்க முடிவு செய்துள்ளேன். கலைஞரும் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். அவர் செய்வார்.

கலைஞர் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க நான் வணங்கும் ராகவேந்திரா சாமியை வேண்டுகிறேன் என்றார் லாரன்ஸ்.

நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை!



மதுரை: மழைவிட்டும் தூவானம் தொடரும் கதையாக, விஜய்யின் தோல்விப் பட நஷ்டம் குறித்து பேச்சு நடத்தி முடிவு காணப்பட்டதாகக் கூறியும் இன்னும் விவகாரம் தொடர்கிறது.

தொடர்ந்து 6 படங்கள் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நடிகர் விஜய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மதுரை திரையரங்க உரிமையாளர்கள் இப்போது கொடிபிடிக்கத் துவங்கியுள்ளனர்.

மதுரையில் நேற்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியது:

நடிகர் விஜய் நடித்த 50-வது படம் சுறா தமிழகம் முழுவதும் திரையிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை-ராமநாதபுரம் வினியோக பகுதியில் மொத்தம் 29 திரையரங்குகளில் சுறா படம் திரையிடப்பட்டது. விஜய்யின் 50-வது படம் என்பதால் இந்த திரைப்படத்தை அனைத்து திரையரங்கு நிர்வாகிகளும் அதிக விலை கொடுத்து வாங்கினோம். மதுரை நகரில் 6 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. ஆனால் அனைத்து இடங்களிலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

ரூ.1 கோடி நஷ்டஈடு...

விஜய் நடித்த அழகிய தமிழ்மகனைத் தொடர்ந்து வந்த குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா உள்பட 6 படங்களும் நஷ்டத்தையே ஏற்படுத்தி உள்ளன. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளார்கள். இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் அந்த படத்தில் நடித்த நடிகர், அந்த படத்தை எடுத்தவர்கள் என அனைவரும் சேர்ந்து, மதுரை-ராமநாதபுரம் திரையங்கு உரிமையாளர்களுக்கு சுமார் 90 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

ஏற்கனவே ரஜினி நடித்த குசேலன் , மணிரத்தினத்தின் இருவர், விஜய்யின் ஆதி படங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற சுறா படத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மாநில திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி உள்ளோம்.

விஜய்யின் அடுத்த படம் வெளியாவதற்குள் இந்த நஷ்டஈட்டை பெற்றுத் தரவேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறி உள்ளோம். எனவே விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்..." என்றனர்.

'பட வாய்ப்புக்காக அழுபவள் அல்ல நான்!'-சீறும் அசின்


ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதற்காக கண்ணீர்விட்டு அழுபவள் நான் அல்ல, என்று நடிகை அசின் கூறியுள்ளார்.

"காக்க காக்க' படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான் ஆபிரஹாம் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அசின் கதாநாயகியாக நடிக்கவிருந்தார். ஆனால் திடீரென அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இந்த ஏமாற்றம் தாங்காமல் அசின் கண்ணீர் விட்டு அழுதார் என மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு படத்தில் நடிப்பதற்கும் நடிக்காமல் இருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கும். அது அந்தந்த நடிகர் , நடிகையின் சொந்த விஷயம். இதற்கெல்லாம் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பார்களா?

ஒரு சினிமா வாய்ப்புக்காக கண்ணீர் விட்டு அழும் சூழ்நிலையில் நான் இல்லை. இந்திப் பட உலகில் என்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் மீடியாவுக்குப் பரப்பிய வதந்திதான் இது. எனக்கான வாய்ப்புகள் எப்போதும் போல உள்ளன. நான் விரும்பும் கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். கிடைப்பதையெல்லாம் ஏற்பதில்லை.

முதலில் அந்தப் படத்தை கெளவுதம் மேனன் இயக்குவதாக இருந்தது. பிறகு நிஷிகாந்த காமத் இயக்குவார் என்றனர். அதையடுத்து கதையிலும் சில மாற்றங்கள் செய்தார்கள்..." என்ற அசின், "இதையெல்லாம் யோசித்துதான் நானே அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டேன். யாரும் என்னை நீக்கவில்லை...'' என்று ஒரே போடாகப் போட்டார்!

கவர்ச்சி நடிகை ஸ்வாதி வர்மா கையைப் பிடித்திழுத்த ரசிகர்கள்!



வீரசோழன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை ஸ்வாதி வர்மாவின் கையைப் பிடித்து சிலர் இழுத்து கலாட்டா செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தம்.

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் வீர சோழன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அங்கு திருவிழா காட்சியொன்றை இயக்குனர் அன்பு சரவணன் படமாக்கினார்.

நாயகனாக வரும் அஜய்குமார், நாயகி ஸ்வேதா, வில்லனாக வரும் முத்துக்குமார், ஸ்வாதி வர்மா ஆகியோர் நடித்துக் கொண் டிருந்தனர். ஸ்வாதி வர்மா கவர்ச்சியாக உடை அணிந்திருந்ததால் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஸ்வாதி வர்மாவை முற்றுகையிட்டு கலாட்டாவில் ஈடுபட்டனர். கையை பிடித்து இழுக்க முயற்சித்தனர். ஸ்வாதி ஓடினார்.

இதனால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. உடனடியாக அங்கு கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டினார்கள்.

தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடிக்கு மாற்றப்பட்டது.

சமீபத்தில் வெளியான 'துரோகம் நடந்தது என்ன?' படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளவர் இந்த ஸ்வாதி வர்மா.

ராவணன் படத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

பெங்களூர்: கர்நாடக திரைத்துறையின் கட்டுப்பாட்டை மீறி அதிக திரையரங்குகளில் ராவணன் படத்தை வெளியிட்டதைக் கண்டித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் நடித்த ராவணன் திரைப்படம் கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கர்நாடகத்திலும் இந்த திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் மொழியில் வெளியானது.

கர்நாடகத்தில் கன்னட மொழி அல்லாத பிறமொழி படங்கள் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் 21 தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்று கர்நாடக சினிமா வர்த்தக சபை விதி உள்ளது.

இந்த விதியை எதிர்த்து டெல்லியில் உள்ள இந்திய போட்டிகள் ஆணையத்திடம் (சி.சி.ஐ.) ராவணன் திரைப்படத்தின் வினியோகஸ்தர் மனுதாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து ராவணன் திரைப்படத்தை கர்நாடகத்தில் 21க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுவதைத் தடுக்கும் கர்நாடக சினிமா வர்த்தக சபையின் விதிக்கு தடை விதித்து சி.சி.ஐ. உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் 36 திரையரங்குகளில் ராவணன் படம் வெளியிடப்பட்டது.

இந் நிலையில் சி.சி.ஐ. உத்தரவை எதிர்த்து கர்நாடக சினிமா வர்த்தக சபை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பைரே ரெட்டி, விசாரணையை ஜுன் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

'இனி கமல் வழியில் ஒத்திகை!'- கரண்!


இனி கமல் சொன்னதைப் போல ஒத்திகைப் பார்த்தபிறகே நடிக்கப் போகிறேன், என்றார் நடிகர் கரண்.

சினிமாவில் ஒத்திகை பார்த்த பிறகே நடிக்க வேண்டும் என்று மன்மதன் அம்பு படத் துவக்க விழாவில் நடிகர் கமல் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழ் சினிமாவில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் கரணும் கமலின் கருத்தை ஆதரித்துள்ளதுடன், தனது அடுத்தபடமான தம்பி வெட்டோத்தி சுந்தரத்தின் படப்பிடிப்புக்கு முன் கட்டாயம் ஒத்திகை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி கரண் கூறியதாவது:

கமல் சார் சொன்ன விஷயம் சரியாக பட்டதால் அதுபற்றி 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் இயக்குனர் வி.சி. வடிவுடையானிடம் சொன்னேன். ஒத்திகைப் பார்த்து நடிக்கலாம் என்று கூறினேன். அவரும் நல்ல விஷயம் என சம்மதித்தார்.

'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை அதில் பங்கு பெறும் நடிகர்களை வைத்து மூன்று நாட்கள் ஒத்திகை செய்தோம். படம் உண்மை சம்பவkd கதை என்பதால் ஒத்திகைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

எமோஷன் காட்சிகள் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன. இயக்குனரின் எண்ணம் சிறிதும் குறையாமல் மேலும் சிறப்படைய இந்த ஒத்திகை காரணமாக அமைந்துள்ளது" என்றார் கரண்.

வயதான ஹீரோயின்களை விரும்பும் ப்ருத்விராஜ்!


வில்லனாக நடித்ததால் வில்லத்தனமான ஆசை கிளம்பிடுச்சோ பிருத்விராஜூக்கு?

சமீபத்தில் ராவணன் பட சிறப்புக்காட்சியின்போது ஒரு டெலிவிஷன் பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"திரையில் என்னைவிட வயது அதிகம் கொண்ட பெண் களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் சந்தர்ப்பம் அடிக்கடிக் கிடைக்கிறது.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தேன். இந்தியாவின் மிக அழகான பெண். அவருடன் நடிப்பதில் எனக்கு முதலில் தயக்கமிருந்தது. விக்ரம் வேறு அடிக்கடி சீண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் பின்னர் சகஜமாக காதல் காட்சிகளில் நடித்தேன்..." என்றார்.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அடுத்து அவர் சொன்னதுதான் மகா வில்லங்கமானது...

"என்னை விட வயசான ஹீரோயின்களோடு நடிப்பது எனக்குப் பிடித்தே இருக்கிறது. இதற்கு முன்பு அப்படி ஒரு ஹீரோயினோடு நடித்தேன். ஆனால் அவர் யார் என்று சொன்னால் என்னைக் கொன்றே போட்டுவிடுவார்" என்றார்.

உடனே பக்கத்திலிருந்த விக்ரம், 'எல்லாம்' தெரிந்தது போல விழுந்து விழுந்து சிரித்தார். அவர் யார் என்று சொல்வது போல விக்ரம் பாசாங்கு செய்ய, இவர் ஓடிப் பாய்ந்து தடுத்தார்...

ஆமா.. யாருங்க அது? உங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசிய மொழியை எங்களுக்கும் சொல்லுங்களேன்!

மட்டக்களப்பில் ஒருவாரத்துக்குப் பிறகு வெளியானது ராவணன்!


கொழும்பு: திட்டமிட்டபடி மட்டகளப்பின் அனைத்துத் திரையரங்குகளிலும் மணிரத்னத்தின் ராவண் மற்றும் ராவணன் படங்கள் இன்று திரையிடப்பட்டன.

மட்டகளப்பு நகரில் சாந்தி திரையரங்கில் ராவணன் படம் திரையிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அடையாளம் தெரியாத ஒரு கும்பல், இலங்கை திரைப்பட விழாவுக்கு வராமல் புறக்கணித்த நடிகர்கள் நடித்த இந்தப் படத்தை மட்டக்களப்பில் எங்கும் திரையிடக் கூடாது என்று கூறி கடந்த வியாழனன்று தீ வைத்தது.

இதனால் மட்டக்களப்பில் ராவணன் வெளியாகவில்லை. இந்த விஷயத்தில் தலையிட்ட இலங்கையின் தேசிய திரைப்பட கழகம், திட்டமிட்டபடி மட்டக்களப்பில் ராவண் மற்றும் ராவணன் திரைப்படங்களை வெளியிடச் சொன்னது. இதைத் தொடர்ந்து இன்று இந்தப் படங்கள் வெளியாகின.

ராவண், ராவணன் படங்கள் வெளியாகியுள்ள அனைத்துத் திரையரங்குகளுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க திரைப்பட கழகம் போலீசை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், சாந்தி திரையரங்கைக் கொளுத்திய சிங்கள கும்பல் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் திரைப்பட கழகம் அறிவித்துள்ளது.

ரூ 40 லட்சம் செலவில் கலைப்புலி தாணு தயாரித்த செம்மொழி மாநாட்டு குறும்படம்!



சென்னை: இன்று கோவை யில் தொடங்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக தமிழ் எனும் தலைப்பில் குறும்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தாணு.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் இன்று தொடங்கி, வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டையொட்டி, கலைப்புலி எஸ்.தாணு ஒரு குறும் படம் தயாரித்து இருக்கிறார். 5 நிமிடங்கள் ஓடுகிற இந்த படத்துக்கு, 'தமிழ்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

30,000 ஆண்டுகளுக்கு முன்பு குமரி கண்டம் உருவாகியதில் இருந்து தமிழ் எப்படி உருவாகி, வளர்ந்து, செம்மொழி ஆகியிருக்கிறது என்பதை இந்த குறும் படம் சித்தரிக்கிறது.

ரூ.40 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், தொலைக்காட்சிகளில் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

'எல்லாம் தெரிந்த கமல்'!-வாய் பிளக்கும் த்ரிஷா




'கமல் சாருக்கு தெரியாத விஷயமே இல்லீங்க... அவ்வளவு புத்திசாலி அவர்' என வியக்கிறார் த்ரிஷா.

கமல் ஜோடியாக முதல் முறையாக மன்மதன் அம்பு படத்தில் நடிக்கிறார் த்ரிஷா.

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்படுகிறது. இதற்காக சில தினங்களுக்கு முன் பாரிஸ் போய்ச் சேர்ந்தது. கமல், த்ரிஷா, கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் 80 பேர் கொண்ட பெரிய குழுவுடன் அங்கே தங்கியுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் பிரான்சில் உள்ள மாண்டி கார்லோவில், டைட்டானிக் போன்ற மெகா சொகுசு கப்பலில் மன்மதன் அம்பு ஷூட்டிங் ஆரம்பித்தது.

முதல்நாள் ஷூட்டிங் முடிந்ததும், அந்த அனுபவம் பற்றி த்ரிஷா இப்படிக் கூறுகிறார்:

"அது ஒரு அற்புதமான அனுபவம். ஒவ்வொரு நொடியையும் நான் அனுபவித்தேன். கமல் சாருடன் பணியாற்றுவதை வாழ்க்கையில் எப்போதும் மறக்க மாட்டேன். அவருக்கு தெரியாததே இல்லை. சூரியனுக்கு கீழ் உள்ள அனைத்து விஷயங்களையும் பற்றி அத்தனை விவரமாகப் பேசுகிறார். அனைத்து விஷயங்களையும் விரல் நுனியில் வைத்துள்ளார்..." என்கிறார் வியப்புடன்.

இந்தக் குழுவுடன் படத்தின் இன்னொரு ஹீரோ மாதவன் செல்லவில்லை. இந்த வார இறுதியில் அவர் அங்கு போகிறார்.

மதராஸபட்டினம்- உதயநிதி; நான் மகான் அல்ல-தயாநிதி!


பெரும் பொருட்செலவில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க ஆர்யா-எமி நடித்துள்ள மதராஸபட்டினம் படத்தை வாங்கினார் உதயநிதி ஸ்டாலின் .

'கிரீடம்' விஜய் இயக்கியுள்ள இந்தப் படம், 1940களில் இருந்த சென்னையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை, உருவாக்கம், பாடல்கள் மற்றும் விளம்பரம் போன்றவை இந்தப் படம் குறித்து நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தைப் பார்த்த உதயநிதி, மிகவும் திருப்தியுடன் தயாரிப்பாளர் கேட்ட விலையைக் கொடுத்து விற்பனை உரிமையை வாங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்டைலில் வெளியிடவிருக்கிறார்.

ஜூலை 2ம் தேதி வெளியாகிறது மதராஸபட்டினம்.

நான் மகான் அல்ல-தயாநிதி வாங்கினார்!

இதற்கிடையே கார்த்தி- காஜல் அகர்வால் நடித்துள்ள நான் மகான் அல்ல படத்தை தயாநிதி அழகிரி தனது க்ளவுட் நைன் மூவீஸுக்காக வாங்கியுள்ளார்.

வெண்ணிலா கபடிக் குழு இயக்குநர் சுசீந்திரனின் இரண்டாவது படம் இது. கார்த்தி நடித்த பையா படத்தையும் தயாநிதிதான் வெளியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.

யுட்யூப், பேஸ்புக், செல்போன்களில் ராவணன்!


மணிரத்னம் இயக்கியுள்ள ராவணன் முழுப் படமும் செல்போனில் இலவசமாக டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது. மேலும் யுட்யூப் மற்றும் ஃபேஸ்புக்கிலும் முழுவதுமாக காண முடிகிறது.

இப்போதெல்லாம் யாருடைய படமாக இருந்தாலும் சரி வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே இன்டர்நெட்டில் பார்த்து விட முடிகிறது. அந்த அளவுக்கு பைரஸி பேய் தலை விரித்தாடி வருகிறது. அந்த பேயின் தாக்குதலுக்கு தற்போது ராவணனும் சிக்கியுள்ளது.

ராவணன் படம் வெளியான அன்றே இணையதளங்களிலும் ரிலீஸாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் செல்போனிலேயே முழுப் படமும் பார்க்கும்படி பரவ விட்டார்கள்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் படம் யுட்யூப் இணையத்தளத்தில் நல்ல தரத்தில் பார்க்கும் வகையில் செய்து விட்டனர் புண்ணியவான்கள்.

இதுதவிர 20க்கும் மேற்பட்ட அண்டர்கிரவுண்ட் இணையத்தளங்களிலும் முழுப் படமும் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இந்த விவரங்களையும் டவுன்லோட் லிங்குகளையும் ஃபேஸ்புக்கிலும் பரவச் செய்கிறார்கள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிக் பிக்சர்ஸ் நிறுவனம், "வீடியோ பைரஸி பெரும் சவாலாக உள்ளது. மாற்று வழிகளும் தெரியவில்லை" என்று கூறியுள்ளது.

ஆனாலும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து இதுகுறித்து போலீஸில் எந்த புகார் களும் பதிவு செய்யப்படவில்லை.

விஜய் 37வது பிறந்த நாள்: ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி!


நடிகர் விஜய் இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி ஏராளமான ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவிகளை வழங்கினார்.

டீக்கடையில் இரவில் வேலை செய்து கொண்டே பகலில் மாநகராட்சிப் பள்ளியில் படித்து 1200க்கு 1130 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பாண்டியராஜ் எனும் மாணவரைப் பற்றிக் கேள்விப்பட்ட விஜய், அவரை இன்று நேரில் வரவழைத்தார். அந்த மாணவர் என்ன படிக்க விரும்புகிறார் எனக்கேட்டு அதற்கான முழுச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார்.

மேலும் விஜய் உதவியுடன் கம்ப்யூட்டர் கல்வி படித்து தேர்ச்சி பெற்ற 37 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 37 பேருக்கு சான்றிதழ்களும், 37 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.

இதே போல தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களைத் தத்தெடுத்துள்ள நடிகர் விஜய், அவர்களது கல்விக்கான அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று படிக்க வைக்கிறார். விஜய்யின் மேலாளரும் மக்கள் தொடர்பாளருமான பிடி செல்வகுமார் இப்பொறுப்பை நேரடியாகக் கவனித்து வருகிறார்.

மாவட்டம்தோறும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களையும் விஜய் ரசிகர் மன்றங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று விஜய் பிறந்த நாளையொட்டி காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விஜய் முன்னிலையில் ரசிகர்கள் நூறு பேர் ரத்த தானம் வழங்கினர்.

காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் தியாகராஜர் தியேட்டர் எதிரிலுள்ள முத்துலட்சுமி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.

காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே ஊள்ள நகராட்சி
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார்.

காலை 11 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள அவரது ஷோபா திருமண மண்டபத்தில் அனாதை இல்ல குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கினார். மேலும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று நடந்து வருவதாக விஜய் தெரிவித்தார்.

பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் சி.ஜெயசீலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா, துணைச்செயலாளர் ஐ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tuesday, June 22, 2010

ராவண் ரூ.38 கோடி-ராவணன் ரூ.11 கோடி!


மணிரத்னம் இந்தி, தமிழ், தெலுங்கில் இயக்கிய ராவணன்-ராவண் படம் இரு வேறான வசூலைக் கொடுத்து வருகிறதாம். முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் (தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து) ரூ.53 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வட அமெரிக்கா வில் ராவண் திரையிடப்பட்ட திரையரங்குகளில் திருப்திகரமான அளவு கூட்டம் இல்லாததால், வசூலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் முதல் மூன்று நாட்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலாகியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் படம் குறித்து ஓரளவு நல்ல விமர்சனங்கள் வெளியாகியும், தியேட்டர்களில் பாதியளவு கூட நிரம்பாததால் இந்த வாரத்துடன் படத்தைத் தூக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு மணிரத்னத்தின் குரு படம் வெளியானபோது, வட அமெரிக்காவில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 1 மில்லியன் டாலருக்கு மேல் வசூலானது. ஆனால், அதில் பாதியளவுக்குக் கூட ராவண் வசூலிக்கவில்லை.

இதே நிலை நீடித்தால் இரண்டாவது வாரம் இந்தப் படம் தூக்கப்பட்டு விடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி ரசிகர்களில் பலர், இந்தப் படம் 'நவீன ராமாயணமாக' இருக்கும் என நினைத்தே வந்ததாகவும், ஆனால் சொதப்பலான க்ளைமாக்ஸ் மற்றும் விக்ரமின் பாத்திரப் படைப்பைப் பார்த்து ஏமாந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

வசூல் எவ்வளவு?:

முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் மூன்று மொழிகளிலும் சேர்த்து ரூ.53 கோடியை வசூலித்துள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் தமிழ் ராவணன் மட்டும் ரூ.11 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு பதிப்பு உலகமெங்கும் ரூ.4 கோடியை ஈட்டியுள்ளது. ராவண் இந்திப் பதிப்பு ரூ.38 கோடியை வசூலித்துள்ளது.

இந்திப் படமான ராவணுக்கு வட இந்தியாவில் வரவேற்பில்லை. துவக்க நாளில் 40 சதவீத பார்வையாளர்களே வந்ததாகவும், பல மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் காலியாக இருந்ததாகவும் பாலிவுட் விமர்சகர்கள் எழுதியுள்ளனர்.

அவெர்ஸ் ஃபன் சினிமா மல்டிப்ளெக்ஸின் சிஇஓ விஷால் கபூர் கூறுகையில், "எங்கள் திரையரங்குக்கு 25 சதவீத பார்வையாளர்கள்தான் வந்தார்கள். இப்போது இன்னும் மோசம்..." என்றார்.

தமிழகத்தில் ராவணனுக்கு ஓரளவு நல்ல துவக்கம் இருந்தது. ஆனால் படம் குறித்த செய்தி பரவியதும் திங்களன்றே பல திரையரங்குகள் வெறிச்சோட ஆரம்பித்துள்ளனவாம்.

தெலுங்கில் நிலைமை படுமோசம் என ரிலையன்ஸே ஒப்புக் கொண்டுள்ளது.