Wednesday, June 9, 2010

ராவணன் பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி!


ராவணன் படத்தின் பாடல் வெளியீடு மற்றும் ஐபில் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகள் மும்பையில் நடக்க இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், பிருத்விராஜ், ப்ரியாமணி நடித்துள்ள படம் ராவணன்.

இந்தி, தமிழ், தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, வரும் 24-ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த படத்துக்கு இசை அமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் இந்நிகழ்ச்சியில், மணிரத்னம் படங்களில் அவர் இசை அமைத்த பாடல்களை மேடையில் பாட இருக்கிறார். இதில், மீடியா மற்றும் குறிப்பிட்ட அழைப்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். இதையடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான ஏப். 25-ஆம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. மும்பை படேல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் பிரபலமான பாடகர்களோடு இணைந்து இசைப்புயலும் பாடுகிறார்.

No comments:

Post a Comment