
இரண்டாவது முறை கருவுற்ற ஐஸ்வர்யா, நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு இரண்டாவது மகன் பிறந்தான்.
மகன் பிறந்த சந்தோஷத்திலிருந்த தனுஷ் கூறுகையில், இரண்டாவது முறை தந்தையாகும்போதும் இத்தனை சந்தோஷமும் த்ரில்லும் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. மனசு முழுக்க சந்தோஷத்தில் மிதக்கிறேன். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்திருக்கிறான். தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.
ஏற்கெனவே இவர்களுக்கு யாத்ரா என்ற மூன்று வயது மகன் உள்ளான். மழலையர் பள்ளிக்குச் செல்கிறான்.
No comments:
Post a Comment