
உள்ளூரில் சுட வேண்டிய காட்சிகளையெல்லாம் சுட்டு முடித்த கையோடு ஸ்விட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைக்குப் பறந்துவிட்டது பாஸ் என்கிற பாஸ்கரன் குழு.
நயன்தாரா - ஆர்யா நடிக்கும் இந்தப் படத்தில் இருவரும் பங்குபெறும் ஒரு ரொமான்டிக் பாடல்காட்சியை ஆல்ப்ஸ் மலையின் லொக்கேஷனில் படமாக்க உள்ளனர்.
ஆனால் படக்குழுவினருடன் போகவில்லை நயன்தாரா. பிரபுதேவாவுடன் பாரிஸில் கேம்ப் அடித்துள்ளார். பிரபுதேவா இயக்கும் இச் படப்பிடிப்பில் அவருக்குத் துணையாக தங்கியுள்ளாராம். பாஸ் என்கிற பாஸ்கரன் குழு ஸ்விஸ் போனதும், இவர் சேர்ந்து கொள்வாராம்.
ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கேஎஸ் சீனிவாசன் தயாரிக்கிறார்.
No comments:
Post a Comment