
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த புதிய படம் ராவணன் இன்று உலகெங்கும் வெளியானது. இந்த நேரத்தில் ஒரு நல்ல செய்தி யையும் கூறியுள்ளார். அது அவரது பிரசவ செய்திதான்.
இதே மணிரத்னம் 2006-ல் இயக்கிய குரு படத்தில் அபிஷேக்பச்சனுடன் ஐஸ்வர்யாராயும் சேர்ந்து நடித்த போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினி ஜோடியாக எந்திரன் மற்றும் இரு இந்திப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவை ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
வழக்கமாக இறுக்கமான ஆடைகள் அணியும் அவர் ராவணன் படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சிகளில் தளர்வான உடை அணிந்து கலந்து கொண்டார். வயிறு பெரி தாகி இருப்பதை மறைப்பதற்காகவே இந்த மாதிரி ஆடைகள் அணிவதாக கூறப்படுகிறது.
ஆனாலும் வயிறு வீங்கி இருப்பது வெளியே தெரிந்தது. கர்ப்பமான தகவலை விரைவில் அறிவிக்கப் போகிறாராம். எந்திரன் ரிலீசுக்கு பிறகு பிரசவம் வரை சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போடுவதாக தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறாராம் ஐஸ்வர்யா ராய்.
No comments:
Post a Comment