
நடிகை மனீஷா கொய்ராலா திருமணம் செய்து கொள்வது தெரிந்திருக்கும்... ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மணமகன், அவரைவிட 7 வயது இளையவர் என்ற சமாச்சாரம் தெரியாதில்லையா...
இதே அந்த விவரம்.
வரும் வெள்ளிக்கிழமை மனீஷா கொய்ராலா திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மணமகன் பெயர் சாம்ராட் தகால். நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபர். வயது 33.
ஆனால் மனீஷா கொய்ராலாவுக்கு 40 வயது. அவரது பாஸ்போர்ட்ட்டில் பிறந்த தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது பிப்ரவரி 19, 1969. ஆனால் வெளியில் ஆகஸ்ட் 16, 1970 என்றே கூறியுள்ளார்.
அதாவது தன்னைவிட 7 வயது குறைவான இளைஞரை மனீஷா திருமணம் செய்து கொள்வது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்து எதுவும் கூற முடியாது.. அதற்கு அவசியமும் இல்லை என்று இறுக்கமான பதிலைத் தந்துள்ளார் மனீஷா.
மணமகன் சாம்ராட் தகாலோ, மனீஷாவை அடைவது என் பாக்கியம் என உருகியுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை காட்மாண்டு அருகே உள்ள கோகர்ணா காட் எனும் வனப்பகுதியில் இவர்கள் திருமணம் நடக்கிறது. நெருங்கிய உறவினர்கள், தமிழ் , தெலுங்கு , இந்திப் பட விஐபிக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
No comments:
Post a Comment