
சென்னை: 2006ல் தான் தொடர்ந்த ஒரு வழக்கை வாபஸ் பெறுவதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் நாசர் ஆஜரானார்.
கடந்த 2006ம் ஆண்டு நாசர் சென்னை குற்றப் பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கடந்த ஆண்டு இந்தி படம் தயாரிப்பதாகக் கூறி ராமநாதன் என்பவர் என்னிடம் ரூ.50 லட்சம் கடனாகப் பெற்றார். ஆனால் படமும் எடுக்கவில்லை. என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக போலீசார், சைதாப்பேட்டை பெருநகர 11வது நீதிமன்றத்தில் வழக்கு த் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட் ஸ்ரீராம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நாசர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தி படம் எடுக்க என்னிடம் ராமநாதன் பணம் வாங்கியிருந்தார். ஆனால் படம் எடுக்கவில்லை. எனது பணத்தை திருப்பி தரவும் இல்லை. இந் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நாங்கள் சமாதானமாக சென்று விட்டோம். எனவே ராமநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றார்.
இதையடுத்து விசாரணையை வரும் 25ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment