Friday, June 11, 2010

ஒரு படத்துக்கு ஒரு புது ஹீரோயின் கேக்கறாங்க! - குஷ்பு


இப்போதெல்லாம் படத்துக்குப் படம் புதுப் புது ஹீரோயின்கள் வேண்டும் என்கிறார்கள் ஹீரோக்கள். முன்பு அப்படியில்லை. நான் பல வருடங்கள் ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துள்ளேன், என்கிறார் நடிகை குஷ்பு.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

"தமிழ் திரைப்படங்களில் தற்போது ஒரு நடிகை நிலைத்து நிற்பது கடினமாக உள்ளது. எனது காலத்தில் நிறைய ஹீரோக்களுடன் நான் தொடர்ந்து பல ஆண்டுகள் நடித்தேன்.

ஆனால் இப்போதைய ஹீரோக்கள் ஒரு படத்துக்கு ஒரு கதாநாயகி தங்களுடன் நடிப்பதை விரும்புகின்றனர். அடுத்த படத்தில் அதே நாயகியை நடிக்க வைப்பதில்லை. சில ஹீரோக்கள் 3 சீன்களுக்கு மட்டுமே ஹீரோயின்களை பயன்படுத்துவதும் உள்ளது..." என்றார்.

சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற குஷ்பு, இயக்குநர்கள் வட இந்திய நடிகைகளை தேடிப் போகாமல் தமிழ்ப் பெண்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு விளக்கமளித்த குஷ்பு, "சினிமாவில் திறமையும், உழைப்பும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும். கடந்த காலங்களில் சிம்ரன், ஜோதிகா போன்றோர் திறமையால் தான் நிலைத்து நின்றனர். அவர்களுக்கு பின் திரிஷா, அசின், நயன்தாரா போன்றோர் செல்வாக்கு பெற்றுள்ளனர். புதுமுகங்களான அபிநயா, அஞ்சலி போன்றோரும் கவர்ந்துள்ளனர்.

தமிழில் கவர்ச்சியான கதாநாயகிகள்தான் ஜெயிக்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் கவர்ச்சிக்கு தயங்குவதால் இயக்குனர்கள் வடக்கே நடிகைகளை தேடி போகிறார்கள்... இதை தமிழ் நடிகைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.." என்றார்.

No comments:

Post a Comment