
ஆலப்புழா: கேரள காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில், நயன்தாராவின் முன்னாள் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவை சேர்ந்தவர் திவாகரன் (39), காங்கிரஸ் தலைவராக இருந்தார். சில தினங்களுக்கு முன்பு திவாகரனை 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வீடுபுகுந்து சரமாரியாக வெட்டிக்கொன்றது.
இது தொடர்பாக சேர்த்தலா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைகார கும்பலை தேடினர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சேர்த்தலாவை சேர்ந்த சேதுகுமா என்ற இளைஞரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரனையில் இவர் நடிகை நயன்தாராவின் முன்னாள் கார் டிரைவர் என்று தெரியவந்தது.
கொலைக்கான காரணம் பற்றியும் இதில் தொடர்புடைய வேறு சிலர் குறித்தும் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment