
சிகரெட் நிறுவனம் ஒன்றுக்காக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசையில் வெளியான சிடியை தடை செய்யுமாறு பசுமை தாயகம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருந்த சிகரெட் விளம்பர இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அந்த நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. இதுபோன்ற நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் இசையில் ஒரு சிகரெட் நிறுவனம் தனது நிறுவனத்தின் விளம்பரத்துக்காக இசை சிடியை அண்மையில் வெளியிட்டது.
இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று பசுமை தாயகம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் பசுமை தாயகம் மனு கொடுத்துள்ளது. இதில் சிடியை வெளியிட்ட விளம்பர நிறுவனம், இசையமைத்த விஜய் ஆண்டனி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சிங்களர்களுடன் இணைந்து இசையமைத்தது, சிங்கள பாடல் மெட்டுகளை தமிழில் பயன்படுத்தியது போன்ற சர்ச்சைகளில் சிக்கியவர் விஜய் ஆண்டனி என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment