Wednesday, June 9, 2010

வெளிநாட்டு சூட்டிங் மோகத்தால் தவிக்கும் தமிழ் சினிமாக்காரர்கள்


வெளிநாட்டு சூட்டிங் மோகத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பால் அங்கிருந்து திரும்பி வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பருத்திவீரன், நாடோடிகள், அங்காடித்தெரு போன்று எத்தனையோ நல்ல கதையம்சமுள்ள கிராமிய படங்கள் வெற்றி பெற்றாலும், நம் தமிழ் சினிமாக்காரர்களின் வெளிநாட்டு சூட்டிங் மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. அதுவுமும் முன்னணி நாயகர்கள், நாயகிகள் நடிக்கும் படமென்றால் கண்டிப்பாக வெளிநாட்டில் ஒரு பாடல் காட்சியாவது இருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத நியதி.

அந்த வரிசையில் சமீபத்தில் சூட்டிங்கிற்காக லண்டன் சென்றிருந்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பால் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சிக்கு புக்கு பட சூட்டிங்கிற்காக லண்டன் சென்றிருந்த ஆர்யா, ஸ்ரேயா ஆகியோர் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். இதேபோல குழந்தைகளுடன் ஜாலி டூர் சென்றிருந்த குஷ்புவும் விமான போக்குவரத்து பாதிப்பால் சென்னை திரும்ப முடியாமல் தவிக்கிறார்.

No comments:

Post a Comment