
தமிழில் சூர்யா, ஜோதிகா நடித்த படம் காக்க காக்க. தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு இப்படம்தான் புது வாழ்வு கொடுத்தது. இப்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். ஜான் ஆப்ரகாம்தான் கதாநாயகன். படத்தில் கதாநாயகியாக நடிக்க அசினை தேர்வு செய்துவைத்திருந்தார் இயக்கப் போகும் விபுல் ஷா. ஆனால் இப்போது அசின் படத்தில் இல்லையாம். காரணம், ஜான் ஆப்ரகாம்தான் அசின் வேண்டாம் எனக் கூறி விட்டாராம். இதற்கு ஜான் ஆப்ரகாம் சொன்ன காரணம் கிட்டத்தட்ட கஜினி சாயலில் காக்க காக்க படமும் இருக்கிறது.
இரண்டும் வேறு வேறு கதை என்றாலும் கூட கஜினியின் நிழல் காக்க காக்க படத்திலும் உள்ளது. ஏற்கனவே இந்தி கஜினியில் அசின் நடித்து விட்டார். இப்போது இதிலும் நடித்தால் சரியாக இருக்காது என்று பீல் பண்ணுவதாக விபுலிடம் கூறியுள்ளார். ஆனால் விபுலுக்கோ அசினைத்தான் போட வேண்டும் என ஆசை. ஏற்கனவே அவரது லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் அசின்தான் நாயகியாக நடித்திருந்தார். அந்த அனுபவத்தால் இந்தப் படத்திலும் அசினை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருந்தார். ஆனால் கதாநாயகன் வேறு மாதிரியாக நினைத்ததால் வேறு வழியில்லாமல் அசினிடம் ஸாரி சொல்லி விட்டாராம் விபுல். அதைக் கேட்டதும் அசினுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து விட்டதாம். தன்னைப் போய் ஜான் நிராகரித்து விட்டாரே, அதுவும் நல்ல நண்பராக இருந்து கொண்டு இப்படிச் சொல்லி விட்டாரே என்று நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்த்து விட்டாராம். அழகு பதுமையை இப்படி அழ வைக்கலாமா ஜான்?
No comments:
Post a Comment