Wednesday, June 9, 2010

அப்பாவைப் போல் வில்லத்தனத்தில் அசத்தும் மகன்


1950களின் இறுதியில் தமிழ்ப் படவுலகில் நுழைந்து எண்பதுகள் வரை பல வேடங்களில் பல பாடி லாங்குவேஜுகள் காட்டி, வாய்ஸ் மாடுலேஷன் செய்து அசத்தியவர் வில்லன் நடிகர் அசோகன். தந்தையின் வில்லத்தனமான நடிப்பின் ஈர்ப்பால் அவரைப் போலவே வில்லன் நடிகராக இப்போது தமிழ்ப் படவுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வின்சென்ட் அசோகன். ஏய், நீ வேணுன்டா செல்லம் உள்ளிட்ட 19 படங்களில் நடித்து முடித்திருக்கும் வின்சென்ட், தற்போது தமிழ்ப் படவுலகின் முன்னணி வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது அவர் வல்லகோட்டை, ஆதிபகவன், வித்தகன், 2010 பாக்யராஜ் உள்ளிட்ட படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். நடிப்பில் தனக்கென தனி சூத்திரம் எதுவும் வைத்திருக்கவில்லை என்று கூறும் வின்சென்ட், கதைக்கு என்ன தேவையோ அதை தத்ரூபமாக நடித்துக் கொடுக்கிறேன் என்கிறார். அப்பாவின் வித்தியாசமான வில்லத்தனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்காக அவரோட நடிப்பை காப்பி அடிக்க மாட்டேன். அவரோட நடிப்பை உள்வாங்கிக் கொண்டு, என்னோட ஸ்டைலையும் சேர்த்து வெளிப்படுத்துறேன். அதுதான் என்னை வெற்றி வில்லனாக்கியிருக்கிறது என்கிறார்.

No comments:

Post a Comment