Wednesday, June 9, 2010

ஐஃபா விழாவில் பங்கேற்கும் நடிகர்களின் படங்களுக்கு தடை!


கொழும்பில் வரும் ஜூன் 3, 4, 5 தேதிகளில் நடக்கும் ஐஃபா விழாவில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், கத்ரீனா கைஃப், லாரா தத்தா, ப்ரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார் உள்ளிட்ட இந்தி நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவில் ஷாருக்கான் பங்கேற்று நடனம் ஆடுகிறார். நடிகைகள் தீபிகா படுகோன், மல்லிகா ஷெராவத், 3 இடியட்ஸ் படக்குழு, சைஃப் அலிகான், ஜான் ஆப்ரகாம் போன்ற கலைஞர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. ஐஃபா விழாவில் பங்கேற்கும் இந்திய நடிகர்களின் எந்தப் படமும் இனி தென்னிந்தியாவில் வெளியாகாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சன் என அமிதாப் குடும்பத்துக் கலைஞர்கள் மட்டுமே தமிழ் அமைப்புகள் வேண்டுகோளை மதித்து ஐஃபா விழாவில் பங்கேற்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளனர். மற்ற நடிகர்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. திரையுலக அமைப்புகளின் இந்த அறிவிப்பையும் தாண்டி இந்தி திரையுலக நட்சத்திரங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்பார்களா... அப்படி பங்கேற்றால் கண்டிப்பாக தடை அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தடையெல்லாம் எத்தனை நாளுக்கு? உணர்வுகளை புரிந்தவன் தான் கலைஞன், அவன் தான் நடிகன், உணர்வுகளைக்கூட புரியாதவனை ஏன் நடிகனாக ஏத்துக்கிறீங்க....

No comments:

Post a Comment