
இலங்கையில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி, அவரது வீட்டுக்கு முன் சிலர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று அளித்த அறிக்கை: சர்வதேச இந்திய திரைப்பட விழா இலங்கையில் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் நடக்கிறது. இதில் நான் பங்கேற்கக்கூடாது என்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பிலிருந்து (ஃபிக்கி) விலகக் கோரியும் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பி அளிக்குமாறும் வலியுறுத்தி தமிழுணர்வு கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்திய திரைப்பட விழாவில் நான் பங்கேற்கவில்லை. இதற்கு முன் நடந்த அதன் விழாக்களிலும் நான் பங்கேற்றதில்லை. ஃபிக்கி அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் அதில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதே போல இலங்கையில் நடைபெறும் வர்த்தக கூட்டமைப்பு விழாவிலும் அவர்கள் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளனர். அதே நேரம் எனது நாடு எனக்கு அளித்த கவுரவத்தை திருப்பி தருவதால் சாதிப்பது ஒன்றுமில்லை என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment