
சிற்றிடை நாயகி ஸ்லிம்ரன், சென்னையில் பெரிய வீடாகவே கட்டிக் கொண்டிருக்கிறார். இநத் பஞ்சாப் கோதுமை தமிழ்நாட்டுக்கு இறக்குமதி ஆனதில் இருந்தே இந்த பூமியை நேசிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் இவருக்கு வலைவீசிய ஹீரோக்களிடமிருந்து தப்பி மனசுக்கு பிடிச்ச மும்பைவாலா ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பரபரப்பான மும்பையில் விறுவிறுப்பாக வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் இந்தி படவுலகில் நுழைகிற வயசையெல்லாம் விட்டு விட்டு இப்போது முடியுமா?.
தமிழில் சீரியல் எடுக்கலாம் என்று முடிவில் சென்னைக்கு வந்துவிட்டார். இங்கே ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பாசத்தால் கேட்டவுடன் ஸ்லாட் தருவதற்கு பல சேனல்கள் முன்வந்தாலும் இவர் விரும்பும் சேனல் சில கண்டிஷன்களை போடுகிறதாம். அதாவது நீங்க தயாரிக்கும் சீரியலில் நீங்களே நடிக்கணும். இதற்கு ஒப்புக் கொள்ளாத சிம்ரன், தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறார்.
இதற்கிடையில் முட்டுக்காடு அருகில் ஒரு பெரிய வீட்டை கட்டுகிற வேலையை துவங்கியிருக்கிறார். பிழைக்க வந்த இடத்திலேயே வாழ வர்றதும் நல்ல விஷயம்தான்.
No comments:
Post a Comment