Wednesday, August 25, 2010

கந்தகார் படத்தை முதலில் முடிப்பது யார்!


கந்தகார் விமான கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்டு இரு படங்கள் தமிழில் உருவாகிறது. அதில் ஒன்று, 'பயணம்'. பிரகாஷ் ராஜ் தயாரித்து நடிக்கிறார். அவருடன் நாகார்ஜுனா, சனாகான் நடிக்கின்றனர். ராதாமோகன் இயக்கி வருகிறார். இன்னொரு படத்தில் அமிதாப் பச்சன், மோகன்லால் நடிக்கின்றனர். இப்படத்தை மேஜர் ரவி இயக்கி வருகிறார். தமிழ், மலையாளத்தில் இப்படம் 'கந்தகார்' என்ற பெயரிலேயே உருவாகி வருகிறது.

'கந்தகார்' படத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் மேஜர் ரவி கேட்டார். அதே கதையில் 'பயணம்' படமும் உருவாகி வருவதால் 'கந்தகாரி'ல் சூர்யா நடிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஒரே சம்பவத்தை படமாக்குவதால், இரு படங்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. முதலில் யார் படத்தை முடிப்பது என்பதுதான் அப்போட்டி. விரைவாக படத்தை முடித்து, ரசிகர்கள் முன் அதை சேர்த்துவிட வேண்டும் என இரண்டு யூனிட்டுமே இரவு, பகலாக வேலை செய்து வருகிறதாம்.

'வழக்கமாக பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகும் படங்களின் ஷூட்டிங் ஆமை வேகத்தில் நடக்கும். ஆனால் 'பயணம்' பட ஷூட்டிங் குறுகிய காலத்திலேயே 85 சதவீதம் முடிந்துவிட்டது. இதற்கு 'கந்தகார்' படம்தான் காரணம்' என்கிறது கோடம்பாக்க வட்டாரம். அதே நேரம், 'கந்தகார்' பட ஷூட்டிங்கை 90 சதவீதம் முடித்துவிட்டார் இயக்குனர் மேஜர் ரவி. இரண்டில் எந்த படம் முதலில் வரும் என இப்போதே சினிமா வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment