Tuesday, August 17, 2010
கேரளாவில் கமலுக்கு பாராட்டு விழா : மலையாள நடிகர் சங்கம் எதிர்ப்பு!
நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள அரசு நடத்தும் பாராட்டு விழாவுக்கு மலையாள நடிகர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள அரசு ஆண்டுதோறும் ஒணம் பண்டிகையையொட்டி, ஓணம் சுற்றுலா வார விழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி ஒரு திரைப்பட நடிகருக்கு பாராட்டு விழாவும் நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு மலையாள நடிகர் மோகன்லால், கவுரவ ராணுவ கர்னலாக தேர்வு பெற்றதையொட்டி பாராட்டு விழா நடத்தியது. இந்த ஆண்டு திரையுலகில் 50 ஆண்டு சேவையை பாராட்டி நடிகர் கமல¢ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தது. இந்த விழா வரும் 22ம் தேதி முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் நடக்க இருக்கிறது.
இதற்கிடையில் கேரள அரசு கமலஹாசனுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு மலையாள நடிகர் சங்கம் (அம்மா) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் இன்னொசென்ட் கூறியுள்ளதாவது: கமல¢ஹாசன் திறமையான, கவுரவிக்கப்பட வேண்டிய நடிகர்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரைப் போல் 50 ஆண்டுகள் சினிமாவுக்கு சேவை செய்த நடிகர்கள் இங்கும் இருக்கும்போது, எங்களை கலந்தாலோசிக்காமல் அரசு தன்னிச்சையாக முடிவு செய்திருக்கிறது. அதனால் கமல¢ஹாசனுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நடிகர் சங்கம் பங்கேற்காது. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளும் யாரையும் தடுக்காது.
இவ்வாறு இன்னொசென்ட் கூறினார். இதற்கிடையே கமலுக்கு ஆதரவாக நடிகர் திலகன் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, ‘‘கமலஹாசன் பாராட்டு விழாவை புறக்கணிக்கும் நடிகர் சங்கத்தை கலைக்க வேண்டும். கேரளாவைச் சேர்த்த எம்.ஜி.ஆரை, புரட்சித் தலைவர் என்று தமிழ் மக்கள் கொண்டாடியதையும் அவரை முதல்வராக்கி அழகு பார்த்ததையும் யாரும் மறக்கக் கூடாது’’ என்றார். மலையாள நடிகர் சங்க விதிமுறைகளை மீறியதாக சங்கத்திலிருந்து திலகன் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசு நல்ல நிர்வாகத்தை அளித்து வருவதாக நடிகர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார் click here
ReplyDelete