Wednesday, August 25, 2010

தென்னிந்திய நடிகைகள் இந்தியில் நடிக்க கூடாதா?


தனது இந்த¤ படங்களில் தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கும் டெக்னீஷியன்களுக்கும் பிரியதர்ஷன் முக்கியத்துவம் தருவதாக பாலிவுட்டில் புகார் எழுந்துள்ளது. Ôகட்டா மிட்டாÕ படத்தில் த்ரிஷாவை நடிக்க வைத்தவர். அடுத்து, Ôபுல்லட் ட்ரைன்Õ படத்தில் நடிக்க பிரியாமணியிடம் பேசினார். இதையடுத்துதான் இந்த புகார் எழுந்தது. சில காரணங்களால் அந்த படத்தில் பிரியாமணி நடிக்கவில்லை. இதற்கிடையே அதே படத்தில் நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை தேர்வு செய்திருக்கிறார் பிரியதர்ஷன். தன் மீது புகார் கூறுபவர்களுக்கு பதிலடியாகத்தான் அவரை தேர்வு செய்ததாகவும் கூறுகிறார்.

இது பற்றி பிரியதர்ஷன் கூறியதாவது: மலையாளத்தில் மோகன்லாலுடன் 36 படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் மீண்டும் பணியாற்றுவது சந்தோஷம். எனது படங்களில் தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் தருவதாக சொல்கிறார்கள். திறமையானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன். அது பிறருக்கு பிடிக்கவில்லையென்றால் நான் என்ன செய்வது? புகார் கூறுபவர்களை கண்டு நான் பயப்படவில்லை. அதை நிரூபிக்கவே மோகன்லாலை என் படத்தில் நடிக்க வைக்கிறேன். சினிமா என்பது மொழிகளை கடந்தது. இதை புகார் கூறுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment