Wednesday, August 18, 2010
இந்திய சினிமாவிற்கு எந்திரன் பெருமையை தேடித் தரும் : அமிதாப் புகழாரம்!
சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கர் இயக்கியுள்ள இந்திய சினிமாவின் மிகப் பிரமாண்ட படைப்பான 'The Robot' (எந்திரன் இந்திப் பதிப்பு) பாடல்கள் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரமாண்ட 'எந்திரன்', அடுத்த மாதம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
எந்திரனின் இந்திப் பதிப்பு நேரடி இந்திப் படங்களுக்கு இணையான பிரமாண்டத்துடன் வெளியாக உள்ளது. விழாவில் சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன், ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப்பச்சன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள். இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி. அவரது மனித நேயம், எளிமையை நான் மிகவும் விரும்புகிறேன். வானளாவிய புகழ், செல்வாக்கு எல்லாம் இருந்தும், ஒரு சாதாரண மனிதனாகவே தன் வாழ்நாள் முழுதும் இருந்து வருகிறார் ரஜினி. அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதரை, நண்பரை, கலைஞரை நான் பார்த்ததில்லை," என்றார் அமிதாப். இயக்குநர் ஷங்கர் பேசுகையில், "ரோபோ ஒரு தமிழ்ப் படமோ, தெலுங்குப் படமோ, இந்திப் படமோ அல்ல. இது ஒரு இந்தியப் படம். இந்தியாவின் படைப்பாற்றலை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு படம்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment