Monday, August 16, 2010

பஞ்ச் டயலாக் எதற்கு? ஹரிகுமார் விளக்கம்


ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க, பஞ்ச் டயலாக் தேவைப்படுகிறது என்றார் ஹரிகுமார். லக்ஷ்மி கிருஷ்ணா கம்பைன்ஸ் தயாரிக்கும் படம், ‘போடிநாயக்கனூர் கணேசன்’. ஹரிகுமார், அருந்ததி ஜோடி. ஞானம் எழுதி இயக்குகிறார். இப்படம் பற்றி ஹரிகுமார் கூறியதாவது:
போடி நாயக்கனூரில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. நான் நடித்த ‘மதுரை சம்பவம்’ ப டத்தில் பஞ்ச் டயலாக் இருந்தது. அதே போல இந்த படத்திலும் இருக்கிறது. ஒரு படம் மக்கள் மனதில் பதிய, பல விஷயங்கள் தேவைப்படுகிறது. அதனால் இதுபோன்ற வசனங்களை இடம்பெறச் செய்கிறோம். வலுக்கட்டாயமாக திணிக்கவில்லை. கதைக்கும், அந்த காட்சிக்கும் பொருத்தமாக வசனம் இடம்பெற்றுள்ளது. போடியை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளோம். அந்த பகுதியை சேர்ந்த பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அவர்களின் இயல்பான முகமும், யதார்த்தமான நடிப்பும் தனியாகத் தெரியும். படம் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. இப்படத்தில் ஹீரோவாக நடித்தாலும், டான்ஸ் மாஸ்டர் பணியை விடவில்லை. இந்தப் படத்திலும் பின்னணி பாடியிருக்கிறேன்.

No comments:

Post a Comment