Sunday, August 22, 2010

அப்பா அம்மாவுக்காக தமிழில் நடிக்கிறார் வித்யா பாலன்


அப்பா&அம்மா வேண்டுகோளுக்காக தமிழ், மலையாளத்தில் நடிக்க, வித்யா பாலன் சம்மதித்துள்ளார்.பாலகாட்டைச் சேர்ந்த தமிழ் குடும்பம் வித்யா பாலனுடையது. ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்தார். ஒரு படத்தில் 5 நாட்கள் நடிக்க வைத்துவிட்டு அவரை தூக்கிவிட்டனர். இதே போல மற்றொரு படத்திலும் மாதவன் ஜோடியாக நடிக்க தேர்வானார். சில நாட்களிலேயே அவரை நீக்கிவிட்டனர். இதனால் கடுப்பான வித்யா, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார். இப்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க அழைத்த போது, நடிக்க மாட்டேன் என்று மறுத்து வந்தார். தன்னை நிராகரித்த தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் சொல்லி வந்தார். இந்நிலையில் அவரது அப்பாவும் அம்மாவும் தமிழ், மலையாள படங்களில் நடிக்க வற்புறுத்தினார்களாம். இதையடுத்து, சந்தோஷ் சிவன் இயக்கும் ‘உருமி’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட சம்மதித்துள்ளாராம். இந்த படம் தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் வெளியாக இருக்கிறது. இதுபற்றி வித்யாபாலன் கூறும்போது, ‘தமிழ், மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்பா அம்மாவுக்காக, நடிக்க இருக்கிறேன்’ என்றார்.

No comments:

Post a Comment