
இப்படியெல்லாம் உதவி செய்யறதா இருந்தா வருஷத்துக்கு நாற்பது பிறந்த நாளை கூட கொண்டாடுங்க என்று வாழ்த்துற அளவுக்கு பசி தீர்த்த பகவான் ஆகியிருக்கிறார் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி. இது எத்தனையாவது என்று தெரியவில்லை. ஆனால் மே 25 ந் தேதியான நேற்று கார்த்திக்குக்கு பிறந்த நாள்.
இதை முன்னிட்டு முதியோர் இல்லம், பெண்கள் ஆண்கள் அரசு சீர்திருத்தப்பள்ளி ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று தனது கைப்பட பிரியாணி பரிமாறினார். இங்கெல்லாம் வாரத்திற்கு ஒரு முறை சினிமாவும் ஒளிப்பரப்பப்படுவதால் கார்த்தின்னா யாரு என்றெல்லாம் கன்ஃபியூஸ் ஆகாமல் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள் இந்த ஆதரவற்றோர். இங்குள்ள சிறுவர்கள் கார்த்தியிடம் கேள்விகள் கேட்க அதற்கு சிரிக்க சிரிக்க பதில் சொல்லி மகிழ்விக்கவும் தவறவில்லையாம் இவர்.
இதில் முக்கியமான இடம் குன்றத்து£ரில் அமைந்துள்ள லிட்டில் டிராப்ஸ் முதியோர் இல்லம். இங்குள்ள சுமார் 400 முதியோர்களுக்கு படுக்கை வசதிக்காக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏற்பாடு செய்ய சொன்னாராம். அப்படியே அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கியிருக்கிறார்.
நேற்று சென்னை முழுவதும் கார்த்தியின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருந்த வாழ்த்து விளம்பரங்களை பார்த்தவர்கள் வேலையில்லப்பா இவங்களுக்கு என்று அலுத்துக் கொண்டிருக்கக்கூடும். இப்போ சொல்லுங்க... கார்த்தியை என்ன சொல்லி வாழ்த்தலாம்?
No comments:
Post a Comment