Wednesday, June 9, 2010

த்ரிஷாவின் செக்யூரிடி சிஸ்டம்! -ஆச்சர்யப்படும் கோலிவுட்


த்ரிஷாவின் இதயம் வேண்டுமானால் திறந்து கிடக்கலாம். ஆனால் த்ரிஷாவின் வீடு? செமத்தியான செக்யூரிடி சிஸ்டம்! அவரது வீட்டுக்கு போகிற அதிர்ஷ்டம் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. போகிற புண்ணியவான்களுக்கு அந்த பிரமிப்பிலிருந்து மீள்வதற்கே நாள் கணக்கில் பிடிக்கும்!

அப்படியென்ன விசேஷம் அந்த வீட்டில்? பால் பாக்கெட்டாக இருந்தால் கூட த்ரிஷாவின் குரலோ, அவங்க மம்மி குரலோ 'உள்ளே வரட்டும்' என்று அனுமதிக்காமல் கேட் வாசலை கூட தாண்ட முடியாது. அதெப்படி?

கதவிலிருந்து ஜன்னல் வரைக்கும் 'வாய்ஸ் லேசர்' சிஸ்டத்தை பொருத்தியிருக்கிறார் த்ரிஷா. இவரது குரலும், இவரது மம்மி குரலும் ஒலித்தால் ஒழிய கதவை திறப்பதில்லை இந்த பூட்டுகள். 'அண்டாகாகுசம், அபுல்காகுசம் திறந்திடு சீசே' என்பது போலல்லவா இருக்கிறது இந்த மேட்டர் என்று ஆச்சர்யப்படுகிறவர்களுக்கு...

இந்த விஞ்ஞான விசேஷத்தை வெளிநாட்டில் இருந்து தருவித்த த்ரிஷ், தனது தோழிகளுக்கும் ரெகமண்ட் செய்கிறாராம். வூடு கட்டி அடிக்கறது என்பது இதுதானோ?

No comments:

Post a Comment