Wednesday, June 9, 2010

தியேட்டரில் கூட்டம் சேர்க்க சரத்குமார் கொடுக்கும் ஐடியா!


காலி பீர் பாட்டிலை கச்சிமா நிக்க வச்ச மாதிரி நெருக்கியடிக்குது கூட்டம்! வட சுண்டல் விற்பனையில் கிடைச்ச லாபத்தை வச்சு அம்பானிக்கே சவால் விடுவாங்க போலிருக்கு சால்னா கடை முதலாளிங்க. இதெல்லாம் டாஸ்மாக் ஏரியா வயிற்றெரிச்சல். ஆனால் தியேட்டரில்? ஏ.பி.சி.டி ன்னு இசட் வரைக்கும் ரோ! ஆனால் அதுல வரிசைக்கு ஒருத்தராவது வருவா'ரோ'ங்கிற மாதிரியேதான் இருக்கு ஆடியன்ஸ் எண்ணிக்கை. இதையெல்லாம் எப்படி மாத்துறதாம்?

கொஞ்சம் கம்பீரமாகவே வாய் திறந்தார் சரத்குமார். கொல கொலயா முந்திரிக்கா படத்தில் கெஸட் ரோலில் நடித்திருக்கிறார் சரத். "எவ்ளோ ஹிட் கொடுத்தவர், சூப்ரீம் ஸ்டார், நடிகர் சங்க தலைவர்னு பல அந்தஸ்து அவருக்கு. ஆனாலும் நிஜமாகவே நட்புக்காக இந்த படத்தில நடிச்சு கொடுத்திருக்கார். அதுக்கு அவருக்கு என்னோட முதல் நன்றி" என்று நெக்குருகினார் தயாரிப்பாளர் திரிசக்தி சுந்தர்ராமன்.

பின்னாலேயே பேச வந்த சரத், தியேட்டருக்கு கூட்டம் சேர்ப்பது எப்படி என்கிற தந்திரத்தை சொல்லிக் கொடுத்தார். (பின்பற்றணுமே?) "இன்னைக்கு ஆயிரம் பேர் கூடுற இடத்தில ஐநு£று பேரு கூட வர மாட்டேங்கிறாங்க. இதை எப்படி சமாளிக்கறதுன்னு பேசிட்டு இருக்கோம். பாலிவுட்ல நடிக்கிற மாதிரி பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கணும். அப்படி நடிச்சா தியேட்டரில் கூட்டம் வரும். அவங்களோட ரசிகர்கள் திரண்டு வருவாங்க. இதில ஈகோ பார்க்கக் கூடாது. சினிமாவ காப்பாற்ற இதுதான் வழி" என்றார் அதிரடியாக.

கேட்க நல்லாதான் இருக்கு. சமுத்திரத்த கிணத்துக்குள்ளே நிரப்பணுமே!

No comments:

Post a Comment