
இலங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் தமிழ் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும்தான். இலங்கைத் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை எடுத்த எடுப்பில் நிராகரித்தவர்கள் இவர்களே. அதன் பின்னர்தான் மற்ற நடிகர்கள், கலைஞர்கள் இதனை விசேஷமாக நோக்கினர்.
No comments:
Post a Comment