
என்னை வாழ வைக்கும் தமிழர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன், என்று நடிகை நமிதா கூறியுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நமிதா, எவ்வளவு பணம் தந்தாலும் இலங்கை செல்ல மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானவர் நமிதா. குஜராத்தை சேர்ந்த இந்த ஆறடி உயர குதிரை ஏய், பில்லா, அழகிய தமிழ் மகன், ஜெகன்மோகினி உள்பட 20 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களை மச்சான் என்று அழைப்பதுடன் தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டிருக்கும் நமிதாவை இலங்கையில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக ஒரு பெரிய தொகையை கொடுக்கவும் இலங்கை அரசும், சர்வதேச இந்திய பட விழா நிர்வாகமும் முன்வந்திருக்கிறது. ஆனாலும் அந்த விழாவில் நடனம் ஆடுவதற்கு நமிதா மறுத்திருக்கிறார். இதுகுறித்து நமிதா கூறியது:- இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய படவிழாவில் நடனம் ஆடுவதற்காக, என்னை அழைத்தார்கள்.
அதற்காக, ஒரு பெரிய தொகையை தருவதாகவும் ஆசை காட்டினார்கள். ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. தமிழர்களுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் பிரச்சினை இருப்பது தெரிந்த பிறகும், நான் எப்படி அந்த பட விழாவுக்கு போக முடியும்? இன்று நான் இந்த அளவுக்கு பிரபல நடிகையாக இருப்பதற்கு, தமிழ் மக்கள்தான் காரணம். அதனால், இலங்கை பட விழாவில் பங்கேற்க ஆரம்பத்திலேயே மறுத்து விட்டேன். தமிழர்களின் நலனுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும், நான் கலந்துகொள்ள மாட்டேன், என்று கூறினார். நமிதாவின் நல்ல மனசை இப்பவாவது புரிஞ்சுக்கோங்க....
No comments:
Post a Comment