
“பிறந்தது கேரளாவாக இருந்தாலும் நான் படித்து வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரத்தில்தான்.சினிமாவில் நம்மளுடைய திறமையை காண்பிக்கலாம்னு வந்தா, எனக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் எல்லாம் சின்ன சின்ன வேடமாகதான் இருந்தது. இப்போதுதான் பளிச்சின்னு சொல்லிக்கிற மாதிரி நல்ல வேடங்களை கொடுத்து எனக்குள் இருக்கும் திறமை உணர வைக்கிறாங்க இயக்குனர்கள். நான் ஒரு படத்தில் நடித்தால் சின்ன கேரக்டராக இருந்தாலும். அது முடிந்ததும் இயக்குனர்கள் என்னிடம் சொல்கின்ற ஒரே வார்த்தை என்னோட அடுத்த படத்தில் உங்களுக்கு பெரிய கேரக்டர் தர்றேன் என்பதுதான்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் நடிகை எலிசபெத்.
இவர் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் கதாநாயகனின் அம்மாவாக, ஆர். சுந்தர்ராஜனின் மனைவியாக நடித்தவர். இவர் ஏற்கனவே நான்கு வருடத்திற்கு முன்பு ‘எம்டன் மகன்’ படத்தில் கோபிகாவின் அண்ணியாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு கஸ்தூரி ராஜாவின் ‘காதல் வரும் பருவம்’, ‘இலக்கணம்’, ‘தம்பி உடையான்’, ‘தம்பி அர்ஜுனா’, ‘மாத்தியோசி’, ‘கோரிப்பாளையம்’, ‘ஈரம்’, ‘கல்லூரி’, ‘திறு திறு துறு துறு’, ‘கற்றது களவு’, ‘புலி வருது’ என இருபது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். ‘ராவணன்’ படத்தில் ப்ரியாமணியின் அம்மாவாக நடித்திருந்தார். வெளிவர இருக்கும் ‘மதில் மேல் பூணை’, ‘அல்லி நகரம்’, ‘வண்ணத்தேர்’, ‘கருப்பர் நகரம்’, ‘திருப்பூர்’, ‘சிக்கு புக்கு’, ‘365 காதல் கடிதங்கள்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், “ஒரு நடிகைக்கு அவர் நடிக்க வந்து, அவர் திறமையை பயன்படுத்துகின்ற மாதிரி நல்ல பாத்திரங்கள் அமைந்தால்தான் சந்தோஷமாக இருக்கும். அந்த விதத்தில் என் திறமையை இப்போ புரிஞ்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எதிர் வரும் படங்களில் நல்ல வேடங்கள் கிடைக்கிறது.
இப்போது, ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் தாய் சொல்லை தட்டாத மகனாக கதாநாயகன் பாலாஜி நடித்திருந்தார். அந்த தாய் கதாபாத்திரத்துக்கு கிடைத்திருக்கின்ற மரியாதை எனக்கு கிடைத்திருக்கிறது. கடந்த நான்கு வருடமாக நான் உழைத்ததற்கு, அந்த கதாபாத்திரம் மூலமாக நல்ல மரியாதை கிடைத்திருக்கிறது. அதற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைக்கிறது. அதுக்கு முதலில் இயக்குனர் பூபதி பாண்டியனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
No comments:
Post a Comment