
ஹிந்தியில் அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2009 ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் மிகப் பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுத்தது. இப்படத்தில் மாதவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. படத்தை ரீமேக் செய்யும் உரிமையை "ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்" நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை டைரக்ட் (ரீமேக்) செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் நடிக்க நான் நீ என்று நடிகர்கள் முட்டி மோதுகிறார்கள்.
ஆனால், மாதவன் நடித்த வேடத்தை தமிழ், தெலுங்கிலும் மாதவனே நடிக்க வேண்டும் என்று, ஷங்கர் அதைத்தான் விரும்புகிறார் எனவும் செய்திகள் வெளியாயின. இதுபற்றி மாதவனிடம் கேட்ட போது, தமிழ் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க தனக்கும் ஆசையாக உள்ளதாகவும் ஆனால் தற்போது, வேறு படங்கள் கைவசம் இருப்பதால் நான் 3 இடியட்ஸில் ஆர்வம் காட்டவில்லை என மாதவன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment