
ஒரே ஹீரோ அல்லது ஹீரோயினை இயக்குனர்கள் தமது அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க வைப்பது பழைய சினிமாவில் பார்க்க முடிந்தது.
இப்போது அந்த பாணியை யாரும் பின்பற்றுவதில்லை. அதே நேரம், கவுதம் மேனன் மட்டும் தனது படங்களில் இந்த பாணியை சற்றே மாற்றி பயன்படுத்துகிறார். ஒரே ஹீரோயினை தனது இரு படங்களில் நடிக்க வைக்கிறார். கவுதம் இயக்கிய Ôகாக்க காக்கÕ படத்தில் ஜோதிகா நடித்தார். பிறகு Ôவேட்டையாடு விளையாடுÕ படத்திலும் அவர் நடித்தார். Ôகாக்க காக்கÕ தெலுங்கு ரீமேக்கில் அசின் நடித்தார். அதன் பின் Ôசென்னையில் ஒரு மழைக்காலம்Õ பெயரில் சூர்யாவை வைத்து படம் ஆரம்பித்தார் கவுதம். இதிலும் அசின்தான் ஹீரோயின். ஒரு ஷெட்யூல் முடிந்த நிலையில் படம் கைவிடப்பட்டது. Ôவாரணம் ஆயிரம்Õ படத்தில் நடித்த சமீரா ரெட்டியை இப்போது Ôநடுநிசி நாய்கள்Õ படத்தில் இயக்கி வருகிறார். Ôவிண்ணைத்தாண்டி வருவாயாÕவில் த்ரிஷா நடித்தார். இப்போது இதன் இந்தி ரீமேக் ஷூட்டிங்கில் கவுதம் ஈடுபட்டிருக்கிறார். இதிலும் த்ரிஷாதான் ஹீரோயின். இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவை நடிக்க வைத்தார். அடுத்து தெலுங்கில் ராணா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கும் சமந்தாவை தேர்வு செய்துள்ளார். ராணா&சமந்தாவை வைத்து போட்டோ ஷூட்டையும் முடித்திருக்கிறார் கவுதம். Ôஒரே ஹீரோயினை, கவுதம் இரு படங்களில் பயன்படுத்துவது தொடர்கிறது. ஒவ்வொரு இயக்குனரும் ஏதாவது ஒரு விஷயத்தை சென்டிமென்ட்டாக வைத்துக் கொள்வார்கள். இது கவுதமின் சென்டிமென்ட்Õ என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment