
பிரகாஷ் ராஜ் & போனி வர்மா திருமணம் வரும் 24&ம் தேதி மும்பையில் நடக்கிறது. ஏராளமான பாலிவுட் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணிபுரிந்தவர், போனிவர்மா. இவரும் பிரகாஷ் ராஜும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் வரும் 24&ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. நெருக்கமானவர்கள் மட்டும் இதில் பங்கேற்கின்றனர். பிறகு தமிழ், கன்னடம், தெலுங்கு படவுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதுகுறித்து பிரகாஷ்ராஜ் எங்கள் நிருபரிடம் கூறுகையில், ‘24&ம் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது. பிறகு நானும், போனிவர்மாவும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் நண்பர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே விருந்து நிகழ்ச்சி நடத்த உள்ளோம். போனிவர்மா எங்கள் வீட்டு மருமகள். எங்கள் திருமணத்தை ரகசியமாக நடத்தவில்லை. அனைவரது ஆசீர்வாதத்துடனும், ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் நடத்த உள்ளோம்’ என்றார்.
No comments:
Post a Comment