
இலங்கையில் நடந்த ரெடி ஷூட்டிங்கில் கலந்து கொண்டதால் அசினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த வரும் நிலையில், சல்மான் கானின் வான்டட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ப்ரியாமணி நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. போக்கரி படத்தை சல்மான்கானை வைத்து வான்டட் என்ற பெயரில் இந்தியில் இயக்கினார் பிரபுதேவா. படம் ஹிட். அப்போதே வான்டட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து ப்ரியாமணியிடம் கேட்டதற்கு, வான்டட் இரண்டாம் பாகத்தில் நடிக்க கேட்டு என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அப்படி கேட்டால் உடனடியாக ஒப்புக் கொள்வேன் என்றார். ஏற்கனவே சல்மானின் படங்களை தென்னிந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப்ரியாமணியின் இந்த பதில் சர்ச்சை கிளப்பியுள்ளது.
No comments:
Post a Comment