
தன்னைச் சுற்றி வரும் சர்ச்சைகள், தோஷங்களை போக்குவதற்காக நடிகை நயன்தாரா யானை வாங்கி வளர்க்கப் போகிறாராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை திவ்யா உன்னி சொந்தமாக யானை வாங்கி வளர்த்தார். அவருக்கு பிறகு நடிகைகள் யாரும் யானை வாங்கவில்லை. இப்போது நடிகை நயன்தாரா ஒரு யானைக்குட்டியை வாங்கி வளர்க்கும் திட்டத்தில் இருக்கிறாராம். விநாயகப் பெருமானாக கருதப்படும் யானையை வளர்த்து பராமரித்தால் தோஷங்கள் விலகும் என்று கேரள ஜோதிடர்கள் கூறியதால் நயன் இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறார். இப்போது நடிகை தரப்பில் குட்டி யானை ஒன்றை விலைக்கு வாங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்.
No comments:
Post a Comment