
மன்மதன் அம்புக்காக 40 நாட்கள் ஐரோப்பிய சொகுசுக் கப்பலில் படப்பிடிப்பு நடத்தியவர்கள், அடுத்து சென்னையில் ஒரு வாரம் முக்கிய காட்சிகளை எடுத்தார்கள்.
இப்போது அடுத்த ஷெட்யூலுக்காக கொடைக்கானல் போயிருக்கிறது மன்மதன் அம்பு யூனிட்.
ஹீரோ கமல் , ஹீரோயின் த்ரிஷா, மாதவன், சங்கீதா ஆகியோர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளனவாம். ஐரோப்பிய தட்பவெப்பநிலை கொண்ட இடமாக வேண்டும் என்று தேடியதில், கமலுக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமான கொடைக்கானல் நினைவுக்கு வர, அட்டகாசமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடக்கிறதாம்.
இப்போதைய நிலவரப்படி படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். செப்டம்பரில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவிருப்பதாகவும், தீபாவளிக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை போஸ்ட் புரொடக்ஷன் வேலை தாமதமானால், பொங்கலுக்கு படத்தை வெளியிட்டுவிட உத்தேசித்துள்ளாராம் தயாரிப்பாளர் உதயநிதி.
No comments:
Post a Comment