Wednesday, June 9, 2010

கடைசி நேரத்தில் தப்பிய ஜெனிலியா


இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ஜெனிலியா பங்கேற்றதாக பரபரப்பான செய்திகள் வெளியாகின. இதனால் கோபம் கொண்ட திரையுல அமைப்புகள், அவர் தற்போது நடித்து வரும் படங்களில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தன. ஆனால் ஜெனிலியா இலங்கை பட விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று மறுத்து உள்ளார்.

இலங்கை செல்லும் முடிவை கடைசி நேரம் ரத்து செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படக்குழுவினர் ஜெனிலியாவை அழைத்தபோது வருவதற்கு சம்மதம் சொன்னாராம். விமான நிலையத்துக்கும் புறப்பட்டுச் சென்றுவிட்டாராம். ஆனால் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கடைசி நேரம் அவரது பயணத்தை தடுத்து நிறுத்திவிட்டாராம். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் வேலாயுதம் படத்தில் ஜெனிலியா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். உத்தமபுத்திரன் என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இலங்கை பட விழாவில் பங்கேற்றால் இவ்விரு படங்களுக்கும் சிக்கல் ஏற்படும். தியேட்டர்களில் திரையிடவும் தடை வரலாம். எனவேதான் இரு படங்களை சேர்ந்தவர்களும் எச்சரித்து பயணத்தை ரத்து செய்ய வைத்துவிட்டனர். வேலாயுதம் பட போட்டோசெஷனுக்காக ஜெனிலியா சென்னை வந்தார். பாலு மகேந்திரா ஸ்டுடியோவில் நடந்த போட்டோ செஷனில் விஜய்யுடன் சேர்ந்து பங்கேற்றார். இருக்கறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டா, இப்படித்தான் பறந்து பறந்து வரணும்!

No comments:

Post a Comment