Sunday, November 28, 2010

ஆக்ஷன் ஹீரோவாக தொடர்வது ஈசியில்லை


சினிமாவுக்கு வந்து 25 வருடங்களாகி விட்டது. இன்னும் ஒரேமாதிரி நடித்தாலோ அல்லது சண்டை போட்டாலோ, ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும் என்பதால், படத்துக்குப் படம் வித்தியாசம் காட்ட அதிக கவனம் செலுத்துகிறேன். ஆக்ஷன் ஹீரோவாக தொடர்வது அவ்வளவு ஈசியில்லை’ என்கிறார் அர்ஜுன். ‘மாசி’, ‘வல்லக்கோட்டை’, ‘மெய் காண்’ படங்களில் நடித்து வரும் அவருக்கு தீபாவளியன்று ‘வல்லக்கோட்டை’ ரிலீசாகிறது.


மீண்டும் வெங்கடேஷுடன் கூட்டணி?

நல்ல கூட்டணி, தொடர்வது தப்பில்லை. டைரக்டர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தபோதே வெங்கடேஷை தெரியும். அவரது டைரக்ஷனில் ‘வாத்தியார்’, ‘துரை’ படங்களில் நடித்தேன். இப்போது ‘வல்லக்கோட்டை’, பக்கா கமர்ஷியல் படம். ஆக்ஷன் பார்முலாக்கள் இருந்தாலும், வழக்கம்போல் இருக்காது. கமர்ஷியல் படத்திலும் வித்தியாசம் செய்ய முடியுமா என்று, பரிசோதனை செய்துள்ள படம். ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். எனது படங்களில், ‘மலரே மவுனமா’ மிகப் பெரிய மெலடி ஹிட். இப்போது தினா இசையில், ‘செம்மொழியே செம்மொழியே’ பாடல், மெலடி ஹிட் கிங்காக இருக்கும். ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவும், வெங்டேஷின் இயக்கமும், தயாரிப்பாளர் ராஜாவின் பிரமாண்டமும் படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும்.

சண்டைக்காட்சிகளில் என்ன வித்தியாசம்?

வழக்கமாக வசன காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளுக்கு ரிகர்சல் பார்ப்பார்கள். ஆனால், கிரஹம்பாக்கத்தில் இருக்கும் எனது ஸ்டுடியோவில், ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷின் பயிற்சியில், சண்டைக்காட்சிகளில் என்னென்ன வித்தியாசம் செய்யலாம் என்று பல நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். எனது படங்கள் என்றாலே, சண்டைக்காட்சிகளை ரசிகர்கள் பெரிதும் விரும்பி ரசிப்பார்கள். நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. ஒரேமாதிரி ஸ்டன்ட் காட்சிகளைப் பார்த்து சலிப்பு ஏற்பட்டிருக்கும். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, மிகப் புதுமையான சண்டைக்காட்சிகளை ‘வல்லக்கோட்டை’யில் கொடுத்துள்ளோம்.

நீங்களும் இயக்குனர் என்பதால், தலையீடு இருக்குமா?

வெற்றிகரமாக ஓட வேண்டும், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும், நடித்தவர்களுக்கு நல்ல பெயர் வர வேண்டும் என்றுதான் ஒரு படத்தை மிகப் பெரிய குழுவாக இருந்து உருவாக்குகிறோம். நானும் இயக்குனர் என்பதால், நான் நடிக்கும் படம் பலவிதங்களில் சிறப்பாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு? சம்பந்தப்பட்ட இயக்குனருடன் விவாதித்து, இந்தக் காட்சியை இப்படிப் படமாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்வேன். அதை அவரும் ஒப்புக்கொள்வார். இதனால் எந்தப் பிரச்னையும் வருவது இல்லை. ஒளிப்பதிவாளரிடம், லைட்டிங் இப்படி இருந்தால், நடிப்பவர்களின் முகபாவம் இப்படி வரும் என்று ஆலோசனை சொல்வேன். அப்படித்தான் ஸ்டன்ட் மாஸ்டரிடமும் விவாதிப்பேன். ஸோ, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைத்தால்தான் படம் சிறப்பாக வரும். இதை ‘என் தலையீடு’ என்பதை விட, ‘எனது இன்வால்வ்மென்ட்’ என்று சொல்லலாமே.

பாலிவுட் பயணம்?

இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நேரம் கிடைக்காததால் தள்ளிப்போகிறது. தமிழில் நான் நடிக்கும் படங்கள், தெலுங்கில் ‘டப்’ ஆகின்றன. அங்கும் என் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

எனக்கு நானே போட்டி : ஸ்ரீகாந்த் தேவா


டபுள்ஸ்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் தேவா, பத்து வருடங்களில் 50 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது 50வது படம், ‘ஆயிரம் விளக்கு’. தெலுங்கு ‘வெங்கடாத்ரி’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது வாங்கியுள்ளார். நடிக்க ஏராளமான அழைப்புகள் வந்தாலும், ‘இசைதான் எனது அடையாளம்’ என்கிறார்.

நடிக்க ஏன் தயக்கம்?

இசையை தவிர எதுவும் தெரியாது. ஜெயம் ரவியை வைத்து இயக்கும் புதுப்படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க டைரக்டர் பிரபுதேவா அழைத்தார். மறுத்து விட்டேன். ஒரு பாடலுக்கு இசையமைப்பாளராகவே தோன்றி பாடுவது, ஆடுவது என்றால் சம்மதம். இப்போது அதையும் எதிர்பார்ப்பது இல்லை. இசையில் சாதித்த இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எனது தந்தை தேவா போன்றவர்கள், இசைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்களை பின்பற்றி, இசைத்துறையில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.

யார் உங்களுக்கு போட்டி?

போட்டியாக யாரையும் நினைப்பது இல்லை. எனது முந்தைய படங்களின் இசையை, நானே அடுத்தடுத்த படங்களில் மெருகூட்ட ஆசைப்படுகிறேன். எனக்கு நான்தான் போட்டி.

ரீமிக்ஸ் பாடலை குறைத்து விட்டீர்களே?

‘காதல் வைபோகமே’ உட்பட நிறைய ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைத்தேன். சில பாடல்களை பாராட்டினர். சில பாடல்கள், கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இனிமையாக இல்லை என்று, ஒவ்வொரு ரீமிக்ஸ் பாடலையும், அதற்கு முந்தைய பாடலுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ‘கெடுத்துட்டாங்க’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறார்கள். அதற்காக பட்ட கஷ்டம், உழைப்பு வீணாகிறது. பழைய இசையமைப்பாளர்களின் ஆசீர்வாதம் இருந்தால்தான், எங்களை போன்றவர்கள் இசைத்துறையில் சாதிக்க முடியும். எனவே, ரீமிக்ஸ் பாடலை குறைத்து விட்டேன்.

ரீ-ரெக்கார்டிங்தானே முக்கியம்?

‘ஈ’, ‘சில நேரங்களில்’, ‘நேபாளி’ போன்ற படங்களில் எனது பின்னணி இசைக்கு பாராட்டு கிடைத்தது. கதையின் சூழலுக்கு ஏற்பத்தான் ரீ-ரெக்கார்டிங் செய்ய முடியும். பாடல் கம்போசிங், கோரஸ், பேக்கிரவுண்ட் மியூஸிக் போன்றவற்றில் இளையராஜாதான் எனது குரு. இப்போது இசையமைக்கும் ‘மறுபடியும் ஒரு காதல்’, ‘முரட்டுக்காளை’, ‘ஆயிரம் விளக்கு’, ‘அவர்களும் இவர்களும்’, ‘அர்ஜுனன் காதலி’, ‘கருங்காலி’, ‘பூலோகம்’ போன்ற படங்களின் பாடல்களிலும், பின்னணி இசையிலும் புதிய ஸ்ரீகாந்த் தேவாவை பார்க்கலாம்.

Wednesday, August 25, 2010

ரஜினி மகள் கல்யாணத்துக்கு வரும் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்-?


சவுந்தர்யா ரஜினிகாந்த்-அஸ்வின் திருமணம் செப்டம்பர் மாதம் 3ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதனையடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும், அமிதாப், மம்முட்டி, சிரஞ்சீவி உட்பட அனைத்து மாநிலங்களின் சூப்பர் ஸ்டார்களுக்கும் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

இதையும் தாண்டி புதிய வரவாக ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான ரிச்சர்ட் கிரே-வுக்கும் தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன் வீட்டின் கடைசி கல்யாணம் என்பதால், தானே முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து வருகிறாராம் ரஜினி.

கோ படத்துக்கு ஜேம்ஸ்பாண்ட் பட கேமரா


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, ராதா மகள் கார்த்திகா, பியா நடிக்கும் படம் 'கோ'. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக ஃபான்டம் ஃபிளக்ஸ் என்ற கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இது சினிமா உலகில் சமீபத்தில்தான் அறிமுகமானது. இந்த கேமராவில் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தை படமாக்க ஹாலிவுட்டில் திட்டமிட்டுள்ளனர். இது பற்றி இயக்குனர் ஆனந்த கூறும்போது, 'இந்த கேமரா அறிமுகமானது பற்றி அறிந்ததும் சந்தோஷப்பட்டேன். இது டிஜிட்டலில் ஹை ஸ்பீட் ரக கேமரா. படமான உடனே அந்த காட்சியை திரையில் போட்டு பார்க்கலாம். மற்ற கேமராக்களில் இந்த வசதி கிடையாது. அடியாட்களுடன் ஜீவா மோதும் சண்டை காட்சியை இந்த கேமராவில் படம் பிடித்துள்ளேன்Õ என்றார்.

நமிதாவை திரையுலகம் புறக்கணித்துவிட்டதா?


சில மாதங்களுக்கு முன்பெல்லாம் நமீதாவின் குத்துப்பாட்டு இல்லாத படங்களே இல்லேனு தான் சொல்லனும், ஆன இப்ப நமீதா மேடம் எங்க இருக்காங்கனு கூட தெரியல, ஆன மானாட மயிலாட நிகழ்ச்சியில் மட்டும் வந்து போறாங்க. என்னதான் ஆச்சு.. ஒரு வேல நமிதாவை திரையுலகம் புறக்கணித்துவிட்டதா என்ற சந்தேகம் வருது. இதுபற்றி நமீதா மேடத்துக்கிட்ட கேட்டா ஒரே மாதி‌ரியான வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அதனால்தான் என்னை அதிகமாக படங்களில் பார்க்க முடியவில்லை எனக் காரணம் சொல்லி வருகிறார். பாவம் நமீதா ஒரு மாசத்தில 15 படங்களில் நடிச்சவாங்க இப்ப "இளைஞன்" படத்தில் மட்டும் தான் நடிச்சிட்டு வராங்க. இளைஞன் படத்தில் படையப்பா நீலாம்ப‌ரி மாதி‌ரி பவர்ஃபுல்லான வேடமாம்.

தென்னிந்திய நடிகைகள் இந்தியில் நடிக்க கூடாதா?


தனது இந்த¤ படங்களில் தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கும் டெக்னீஷியன்களுக்கும் பிரியதர்ஷன் முக்கியத்துவம் தருவதாக பாலிவுட்டில் புகார் எழுந்துள்ளது. Ôகட்டா மிட்டாÕ படத்தில் த்ரிஷாவை நடிக்க வைத்தவர். அடுத்து, Ôபுல்லட் ட்ரைன்Õ படத்தில் நடிக்க பிரியாமணியிடம் பேசினார். இதையடுத்துதான் இந்த புகார் எழுந்தது. சில காரணங்களால் அந்த படத்தில் பிரியாமணி நடிக்கவில்லை. இதற்கிடையே அதே படத்தில் நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை தேர்வு செய்திருக்கிறார் பிரியதர்ஷன். தன் மீது புகார் கூறுபவர்களுக்கு பதிலடியாகத்தான் அவரை தேர்வு செய்ததாகவும் கூறுகிறார்.

இது பற்றி பிரியதர்ஷன் கூறியதாவது: மலையாளத்தில் மோகன்லாலுடன் 36 படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் மீண்டும் பணியாற்றுவது சந்தோஷம். எனது படங்களில் தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் தருவதாக சொல்கிறார்கள். திறமையானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன். அது பிறருக்கு பிடிக்கவில்லையென்றால் நான் என்ன செய்வது? புகார் கூறுபவர்களை கண்டு நான் பயப்படவில்லை. அதை நிரூபிக்கவே மோகன்லாலை என் படத்தில் நடிக்க வைக்கிறேன். சினிமா என்பது மொழிகளை கடந்தது. இதை புகார் கூறுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கந்தகார் படத்தை முதலில் முடிப்பது யார்!


கந்தகார் விமான கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்டு இரு படங்கள் தமிழில் உருவாகிறது. அதில் ஒன்று, 'பயணம்'. பிரகாஷ் ராஜ் தயாரித்து நடிக்கிறார். அவருடன் நாகார்ஜுனா, சனாகான் நடிக்கின்றனர். ராதாமோகன் இயக்கி வருகிறார். இன்னொரு படத்தில் அமிதாப் பச்சன், மோகன்லால் நடிக்கின்றனர். இப்படத்தை மேஜர் ரவி இயக்கி வருகிறார். தமிழ், மலையாளத்தில் இப்படம் 'கந்தகார்' என்ற பெயரிலேயே உருவாகி வருகிறது.

'கந்தகார்' படத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் மேஜர் ரவி கேட்டார். அதே கதையில் 'பயணம்' படமும் உருவாகி வருவதால் 'கந்தகாரி'ல் சூர்யா நடிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஒரே சம்பவத்தை படமாக்குவதால், இரு படங்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. முதலில் யார் படத்தை முடிப்பது என்பதுதான் அப்போட்டி. விரைவாக படத்தை முடித்து, ரசிகர்கள் முன் அதை சேர்த்துவிட வேண்டும் என இரண்டு யூனிட்டுமே இரவு, பகலாக வேலை செய்து வருகிறதாம்.

'வழக்கமாக பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகும் படங்களின் ஷூட்டிங் ஆமை வேகத்தில் நடக்கும். ஆனால் 'பயணம்' பட ஷூட்டிங் குறுகிய காலத்திலேயே 85 சதவீதம் முடிந்துவிட்டது. இதற்கு 'கந்தகார்' படம்தான் காரணம்' என்கிறது கோடம்பாக்க வட்டாரம். அதே நேரம், 'கந்தகார்' பட ஷூட்டிங்கை 90 சதவீதம் முடித்துவிட்டார் இயக்குனர் மேஜர் ரவி. இரண்டில் எந்த படம் முதலில் வரும் என இப்போதே சினிமா வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷாவுக்கு எதிராக ஆதாரம்?


போதை மருந்து வழக்கில் கைதானவரின் போனில் நடிகை த்ரிஷாவின் செல் நம்பர் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து த்ரிஷாவிடம் நேரில் விசாரணை நடத்த ஐதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர். இது த்ரிஷாவுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள், கோகைன் போதை மருந்து வாங்கும்போது ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போதை கும்பலுடன் பல நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து நடிகர், நடிகைகளை விசாரிக்க ஐதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு தெலுங்கு நடிகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி தெலுங்கு நடிகர்கள் சங்க தலைவர் முரளிமோகன் கூறும்போது, ‘‘போதை கும்பலுடன் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக சொல்வதில் உண்மையில்லை. இது கலைஞர்களின் இமேஜை கெடுக்கும் விதமாக உள்ளது. தெலுங்கு பட உலகுக்கு எதிராக போலீசார் செயல்படுகின்றனர்’’ என்றார். ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறுகையில், ‘‘போதை மருந்து கும்பலுடன் தெலுங்கு திரையுலகில் அனைவருக்குமே தொடர்பு உள்ளதாக கூறவில்லை. ஆனால் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனால் அவர்களை விசாரிக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்தாலும் விசாரணை என்று வரும்போது சட்டத்துக்கு கட்டுப்படுவோம் என நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தால் தெலுங்கு பட உலகில் பரபரப்பு நிலவி வருகிறது. விசாரணை பட்டியலில் யார், யார் பெயர் இருக்கிறது, விசாரணையில் சிக்குவோமா என நடிகர், நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் போதை மருந்து வழக்கில் கைதாகியுள்ள நபரின் செல்போனில் த்ரிஷாவின் செல் நம்பர் இடம்பெற்றுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து த்ரிஷாவிடம் போலீசார் நேரடியாக விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கொடைக்கானலில் ‘மன்மதன் அம்பு’ பட ஷூட்டிங்கில் இருந்த த்ரிஷாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: கைதானவரின் போனில் இருப்பது என் நம்பர் இல்லை. அது விசாரணையில் இப்போது தெரியவந்துள்ளது. இதில் எனக்கு தொடர்பு இருப்பதாக புரளி கிளப்புகிறார்கள். இந்த தகவலை பரப்பியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இது தொடர்பாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் கானிடமும் பேசினேன். என்னைப் பற்றி வந்துள்ள வதந்தியை பற்றி தெரிவித்தேன். என்னை போலீசார் விசாரிக்கப்போவதாக சொல்வதில் உண்மையில்லை. இந்தப் பிரச்னையில் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி எனது வக்கீலுடன் பேசி வருகிறேன். இவ்வாறு த்ரிஷா கூறினார். விசாரணை பட்டியலில் நடிகைகள் காம்னா, மதுஷாலினி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஷூட்டிங்கில் மயங்கி விழுந்தார் தன்ஷிகா


நில் கவனி செல்லாதே படத்தை இயக்குகிறார் ஆனந்த் சக்ரவர்த்தி. இவர் Ôவெண்ணிலா கபடி குழு படத்தை தயாரித்தவர். தமிழ்நாடு & ஆந்திரா எல்லை பகுதியில் இதன் ஷூட்டிங் நடந்தது. குறிப்பிட்ட இடத்துக்கு செல்லாதே, மீறி சென்றால் அதோகதிதான் என்ற கருவை கொண்டு படம் உருவாகிறதாம். படத்தில் வரும் காட்சிக்காக மரவீடு ஒன்று உருவாக்கப்பட்டது. ஹீரோயின் தன்ஷிகாவை வில்லன் துரத்தி வர, அவர் ஒளிந்து கொள்ளும் காட்சியை இரவில் படமாக்கி வந்தனர். கட்டைகள் குவிந்திருந்த ஒரு அறையில் தன்ஷிகா மறைந்துகொள்ள, அந்த கட்டைகளை தள்ளியபடி வில்லன் அவரை பிடித்து இழுக்கும் காட்சியை எடுத்தனர். அப்போது சில கட்டைகள் தன்ஷிகாவின் தலையில் விழுந்தது. ஆ என அலறிய அவர், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தாராம். உடனே படக்குழுவினர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளியவைத்தார்கள். பின்னர் அவருக்கு ஜூஸ் அளித்தனர். கட்டை மோதிய வேகத்தில் அவரது தலையில் வீக்கம் ஏற்பட்டது. மயக்கம் தெளிந்தும் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரத்துக்கு பிறகே அவர் பழைய நிலைக்கு திரும்பினார். அப்போதுதான் எனக்கு பதற்றம் அடங்கியது என்றார் இயக்குனர் ஆனந்த் சக்ரவர்த்தி.

நடிகர்களுக்கு பாலாபிஷேகம் குஷ்பு பாய்ச்சல்



சில நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டுகிறார்கள், பாலாபிஷேகம் செய்கிறார்கள், கற்பூரம் ஏற்றுகிறார்கள். இவர்கள் யாரும் கடவுள் இல்லை. அதனால் நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்ய தேவையில்லை. அதே நேரம் நமக்கு (நடிகர், நடிகைகளுக்கு) கடவுள்கள் யாரென்றால், ஷூட்டிங் ஸ்பாட்டில் வெயில், மழையில் நின்றுகொண்டு நட்சத்திரங்களுக்கு குடை பிடிப்பவர்கள், சாப்பாடு பரிமாறுபவர்கள், லைட் மேன், கிரேன் ஆபரேட்டர் என ஒவ்வொரு பிரிவிலும் உழைக்கிறார்களே அவர்கள்தான்Õ. இப்படி உணர்ச்சிவசப்பட்டு குஷ்பு பேசியது, பையனூரில் சினிமா கலைஞர்களுக்கு வீடு கட்டும் தொடக்க விழாவில்.

Sunday, August 22, 2010

யானை வாங்கப்போகிறார் நயன்தாரா!


தன்னைச் சுற்றி வரும் சர்ச்சைகள், தோஷங்களை போக்குவதற்காக நடிகை நயன்தாரா யானை வாங்கி வளர்க்கப் போகிறாராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை திவ்யா உன்னி சொந்தமாக யானை வாங்கி வளர்த்தார். அவருக்கு பிறகு நடிகைகள் யாரும் யானை வாங்கவில்லை. இப்போது நடிகை நயன்தாரா ஒரு யானைக்குட்டியை வாங்கி வளர்க்கும் திட்டத்தில் இருக்கிறாராம். விநாயகப் பெருமானாக கருதப்படும் யானையை வளர்த்து பராமரித்தால் தோஷங்கள் விலகும் என்று கேரள ஜோதிடர்கள் கூறியதால் நயன் இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறார். இப்போது நடிகை தரப்பில் குட்டி யானை ஒன்றை விலைக்கு வாங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாவேன்:பூர்ணா


தமிழ் தவிர மலையாளம் , தெலுங்கிலும் நான் நிறையப் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்த மூன்று மொழிகளிலும் நிறைய நடிப்பதே எனது லட்சியம் என்று கூறுகிறார் நடிகை பூர்ணா.

முதலில் ஆசின் போல இருக்கிறார் என்று அனைவரும் பரவசம் அடைந்தனர் பூர்ணாவைப் பார்த்து. பின்னர் ரேவதி போல இருக்கிறார் என்று கூறினார்கள். ரேவதியின் மகள்தான் என்றும் சிலர் அடித்துக் கூறினார்கள். இவற்றையெல்லாம் தனக்குக் கிடைத்த பாராட்டாக எடுத்துக் கொண்ட பூர்ணா இப்போது ஒவ்வொரு அடியாக,தமிழ் சினிமா வில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் நடித்து வரும் பூர்ணாவின் கையில் ஏகப்பட்ட படங்கள். துரோகி, ஆடுபுலி, நரன், கொலைத்தொழில், அர்ஜூனன் காதலி என கை கொள்ளாதஅளவுக்கு படங்களை வைத்துக் கொண்டு படு பிசியாக இருக்கிறார்.

இதுபோக மலையாளம், தெலுங்கிலும் கூட நிறையப் படங்களுக்குப் பேசிக்கொண்டிருக்கிறாராம். ஏன் இப்படி அரக்கப் பரக்க அடித்துப் பிடித்து ஏகப்பட்ட படங்களில் நடிக்கிறீர்கள் என்று கேட்டால், எனக்கு தமிழ் தவிர மலையாளம், தெலுங்கிலும் நிறைய நடிக்க வேண்டும் என ஆசை உள்ளது. மூன்று மொழிப் படங்களையும் குறி வைத்துதான் நடித்து வருகிறேன்.

என்னைத் தேடி வரும் படங்களின் கதை பிடித்திருப்பதால்தான் நிறையப் படங்களை ஒத்துக் கொண்டுள்ளேன். மேலும் உங்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதை என்கிறார்கள். அப்படிக் கூறுபவர்களை நிராகரிக்க மனம் வரவில்லை. அதுபோக எனக்கும் கதை பிடித்திருப்பதால்தான் ஒத்துக் கொள்கிறேன்.

தமிழ் எனக்கு இன்னும் சரளமாக வரவில்லை. கற்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் கற்றுக் கொள்வேன்.

விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாவேன். இது உறுதி என்று அடித்துச் சொல்கிறார் தெத்துப் பல்லழகி பூர்ணா.

கற்பழிப்பு-விபச்சாரம்-சமீரா ‘ஹாட்’!


படு ‘ஹாட்’டாக இருக்கிறது சமீரா ரெட்டியின் மார்க்கெட். தமிழில் மீண்டும் தலை காட்டும் சமீரா தனது 3வது தமிழ்ப் படத்தில் விலைமாது கேரக்டரில் நடிக்கிறார்.

வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சமீரா ரெட்டி, தொடர்ந்து அசல் படத்தில் தலை காட்டினார். அது சமீராவுக்கு பெரிய திருப்தியைத் தரவில்லை. ஆனால் தற்போது கெளதம் மேனனுடன் மீண்டும் இணைந்து இயங்கி வரும் சமீரா, நடுநிசி நாய்கள் படத்தில் பழைய கதாபாத்திரம் ஒன்றை சற்று வித்தியாசமாக செய்து வருகிறாராம்.

நடுநிசி நாய்கள் படத்தில் சமீராவுக்கு விலைமாது கேரக்டராம். திரில்லர் படமான இதில் சமீராவுக்கான பவர்ஃபுல் கேரக்டராம்.

இது இப்படி என்றால் நக்சலைட் வேடத்தில் சமீரா நடிக்கும் ரெட் அலர்ட் படத்தில் அதிர்ச்சிகரமான கற்பழிப்பு வேடத்தில் நடித்துள்ளாராம் சமீரா. இந்தக் காட்சியில் நடிக்கும்போது மிகவும் கஷ்டமாக உணர்ந்தாராம். படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட சோகத்திலிருந்து அவர் விடுபடவில்லையாம்.

போலீஸ் நிலைய கழிப்பறையில் வைத்து போலீஸார் சமீராவை கற்பழிப்பதாக காட்சியாம். இந்த சம்பவத்திற்குப் பின்னர்தான் அவர் நக்சலைட்டாக மாறுகிறாராம். படத்தின் கதையும், தனது பாத்திரமும் நிறைய பாதித்து விட்டதாக கூறும் சமீரா, இதுவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் என்னை மிகவும் பாதித்தது என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-அசின்


மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார் நடிகை அசின்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நடிகர் சங்க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் என் கவனத்துக்கு வந்தன. அந்த தீர்மானங்களை மனதார வரவேற்கிறேன்.

நான் ஒரு நடிகை தொழில் ரீதியாகத்தான் இலங்கை சென்றேன். நடிகர் சங்கத்தலைவரிடம் எனது நிலைப்பற்றி ஏற்கனவே விளக்கி விட்டேன். இலங்கை சென்றதற்காக என்னை பலர் விமர்சித்தனர்.

நடிகர் சங்க பொதுக்குழுவில் தனிப்பட்ட முறையில் இலங்கை செல்லும் கலைஞர்களை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் போட்டது ஆறுதலாக உள்ளது.

இனிமேல் இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். இனி நடிகர் சங்கத்தின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்ல மாட்டேன்.

நடிகர் சங்கத்தினரை எதிர்ப்பது போல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லாததை செய்தியாக வெளியிடுவது முறையல்ல என்று கூறியுள்ளார் அசின்.

மன்னிப்பு கேட்க, நான் என்ன தவறு செய்தேன் என்று தனது முந்தைய பேட்டியின்போது அசின் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தயாரிப்பாளர் சங்கம் இன்று முடிவு

இதற்கிடையே, இன்று மாலை நடைபெறும் தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் அசின் விவகாரம் குறித்து முக்கியமாக பரிசீலிக்கவுள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாகவும் ராம.நாராயணன் கடந்த 11ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது குரூப்பைச் சேர்ந்தவர்கள் பிற பொறுப்புகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

இதையடுத்து இன்று மாலை சங்க கட்டடத்தில் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அதில் முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்கப் போகிறார்களாம்.

குறிப்பாக அசின் குறித்துப் பேசப் போகிறார்களாம். இலங்கைக்கு நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக போகலாமா, கூடாதா என்பது குறித்தும் பேசப்படவுள்ளதாம்.

தயாரிப்பாளர் சங்கம் இதில் ஒரு முடிவு எடுத்த பின்னர் அதை நடிகர் சங்கம் பரிசீலனை செய்யும். அதன் பிறகே அதை ஏற்பது, ஏற்காதது குறித்து நடிகர் சங்கம் தீர்மானித்து பின்னரே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா மணியும் இந்திக்குப் போகிறார்!


திரிஷாவை இந்திக்குக் கூட்டிக் கொண்டு போய் அறிமுகப்படுத்தி வைத்த பிரியதர்ஷன் அடுத்து பிரியா மணியையும் இந்திக்கு அழைத்துச் செல்கிறாராம்.

பிரியதர்ஷனால் நடிகையானவர் திரிஷா . தமிழில் திரிஷாவை அறிமுகப்படுத்தி வைத்த பிரியதர்ஷன், அவரது இந்தி அறிமுகத்திற்கும் வழிவகுத்தார்.

அக்ஷ்ய் குமார் தயாரிப்பில் உருவான கட்டா மீத்தா படத்தில் நாயகியாக நடித்து இந்தியிலும் புகுந்து விட்டார் திரிஷா. படம் சிறப்பாக ஓடவே குஷியாகியுள்ளார். இதையடுத்து அடுத்தடுத்து இந்தியில் கலக்க தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில் பிரியா மணியும் இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம். அவரையும் பிரியதர்ஷன்தான் அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார்.

பிரியதர்ஷன் அடுத்து இயக்கும் புல்லட் டிரெய்ன் என்ற படத்தில் பிரியா மணி நடிக்கிறாராம். இதில் அஜய் தேவ்கனும், சுனில் ஷெட்டியும் நாயகர்களாக நடிக்கின்றனர். அதாவது இரட்டை ஹீரோ சப்ஜெக்ட். அதில் ஒரு நாயகிதான் பிரியா மணி. இன்னொரு நாயகியாக நடிக்கவிருப்பது சமீரா ரெட்டியாம்.

சமீப காலமாகவே கவர்ச்சி யில் புது இலக்கணம் படைத்து வரும் பிரியா மணி, இந்தியில் இதை விட சற்று கூடுதலான கவர்ச்சியுடன் கலக்கத் தயாராகி விட்டாராம்.

சமீரா வேறு இருப்பதால் அவரை மிஞ்சும் அளவுக்கு பிரியாவின் கவர்ச்சி சேவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பா அம்மாவுக்காக தமிழில் நடிக்கிறார் வித்யா பாலன்


அப்பா&அம்மா வேண்டுகோளுக்காக தமிழ், மலையாளத்தில் நடிக்க, வித்யா பாலன் சம்மதித்துள்ளார்.பாலகாட்டைச் சேர்ந்த தமிழ் குடும்பம் வித்யா பாலனுடையது. ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்தார். ஒரு படத்தில் 5 நாட்கள் நடிக்க வைத்துவிட்டு அவரை தூக்கிவிட்டனர். இதே போல மற்றொரு படத்திலும் மாதவன் ஜோடியாக நடிக்க தேர்வானார். சில நாட்களிலேயே அவரை நீக்கிவிட்டனர். இதனால் கடுப்பான வித்யா, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார். இப்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க அழைத்த போது, நடிக்க மாட்டேன் என்று மறுத்து வந்தார். தன்னை நிராகரித்த தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் சொல்லி வந்தார். இந்நிலையில் அவரது அப்பாவும் அம்மாவும் தமிழ், மலையாள படங்களில் நடிக்க வற்புறுத்தினார்களாம். இதையடுத்து, சந்தோஷ் சிவன் இயக்கும் ‘உருமி’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட சம்மதித்துள்ளாராம். இந்த படம் தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் வெளியாக இருக்கிறது. இதுபற்றி வித்யாபாலன் கூறும்போது, ‘தமிழ், மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்பா அம்மாவுக்காக, நடிக்க இருக்கிறேன்’ என்றார்.

தெலுங்கில் ‘மாட்லாடப்’ போகும் விஜய்!


இத்தனை காலமும் வேறு மொழிகளில் நடிக்கிறீர்களா என்று யார் கேட்டாலும், ‘அய்யோ நான் தமிழனுங்ணா’ என கவுண்டர் பாணியில் கூறிவந்த விஜய் , இப்போது அந்த தமிழன் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு தெலுங்கு ப் பக்கமும் எட்டிப் பார்க்க ஆர்வம் காட்டுகிறாராம் (இது சுறா எஃபெக்டா என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுங்னா!)

ஆம்… முதல் முறையாக ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறாராம் விஜய்.

அது த்ரீ இடியட்ஸின் தெலுங்கு ரீமேக்.

ஷங்கர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய், ஆர்யா மற்றும் ஜீவா நடிக்கின்றனர். தெலுங்கில் விஜய் பாத்திரத்தில் மகேஷ்பாபு நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது.

ஆனால், தெலுங்கிலும் விஜய்யே நடித்தால் என்ன? என்று அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தனது முன்னாள் சிஷ்யரான ஷங்கரிடம் (எஸ்ஏசியிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் ஷங்கர்!) கேட்டுள்ளார். சற்று யோசித்த ஷங்கரிடம், இதற்கு முன் விஜய்யின் டப்பிங் படங்கள் சில தெலுங்கில் நன்றாக ஓடியதாக புள்ளி விவரமெல்லாம் சொன்னாராம் (விஜய் படங்களில் 90 சதவீதம் தெலுங்கு ரீமேக்தான் என்பது குறிப்பிடத்தக்கது!).

இப்போது ஒரு வழியாக விஜய்யை தெலுங்கில் அறிமுகப்படுத்தவும் ஒப்புக் கொண்டாராம் ஷங்கர்!

ஆக.. விரைவில் விரல் சொடுக்கி தெலுங்கில் பஞ்ச் டயலாக் விடப் போகிறார் விஜய்!

ரஜினியின் பாட்ஷா – 2… பரபரக்கும் சத்யா மூவீஸ் அலுவலகம்!


எந்திரன் ரிலீஸுக்கு முன்பே, ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சியைத் தரத் தயாராகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி .

நாம் முன்பே சொன்னது போல, சத்யா மூவீஸுக்கு அடுத்த படம் செய்கிறார். இப்போதைக்கு பாட்ஷா -2 என்று படத்துக்கு தலைப்பு வைத்திருந்தாலும், பாட்ஷாவுக்கும் இந்தப் புதிய படத்துக்கும் தொடர்பு ஒன்றுமில்லையாம்.

பாட்ஷாவுக்கு நிகரான அனல் பறக்கும் ஆக்ஷன் கதை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்யா மூவீஸ் அலுவலகத்தில் தினசரி கதை விவாதம், டெக்னீஷியன்கள் தேர்வு என படு பரபரப்பாக உள்ளனர்.

விசாரித்தால் முன்பு மாதிரி அவசரமாக மறுக்காமல், ‘படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத்தானே போகிறார்கள்… கொஞ்சம் பொறுங்கள்’ என்கிறார்கள் தயாரிப்பாளர் ஆர் எம் வீரப்பனின் நெருங்கிய உறவினர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எம்.வீரப்பன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட ரஜினி, ‘என்னால் பலன் அடைந்தவர் பலர்; நஷ்டமடைந்த சிலரில் ஆர்.எம்.வீரப்பனும் ஒருவர். ‘பாட்ஷா’ போன்ற படத்தை ஆர்.எம்.வீரப்பன்தான் தயாரிக்க முடியும்…’ என்று பேசினார்.

அதைத் தொடர்ந்துதான் இந்தப் புதிய பட வேலைகள் சுறுசுறுப்பாகியுள்ளன. எந்திரன் படத்தின் ஆடியோ ரிலீஸ், டப்பிங் வேலைகள் என பிஸியாக இருந்த ரஜினி ஆரம்பத்தில் பாட்ஷா-2 படத்துக்கான கதை விவாதத்தில் பங்கேற்கவில்லை.

இப்போது, எந்திரன் படத்தின் அனைத்தும் வேலைகளும் முடிவடைந்துவிட்டதால் ரஜினியும் கதை விவாத்தில் கலந்து கொண்டாராம்.

இயக்குநர் யார் என்பதை மட்டும் பொத்திப் பொத்தி வைக்கிறார்கள். ஹரிதான் இயக்குகிறார் என்று முன்பே செய்தி கசிந்தது. அப்போது அதை அவசரமாக மறுத்தார் ஹரி. ஆனால் ரஜினியின் சாய்ஸ் ஹரிதான் என்கிறார்கள். இதற்கு சத்யா மூவீஸும் சம்மதம் சொல்லியிருக்கிறது. இரு முறை சத்யா மூவீஸ் அலுவலகத்துக்கு ஹரி வந்ததையும் உறுதிப்படுத்துகிறார்கள்.

எந்திரன் படம் முடிந்ததும் ரசிகர்களைச் சந்திப்பதாக உறுதி கூறியிருந்தார் ரஜினி. மகள் சௌந்தர்யா திருமணம் , சுல்தான் க்ளைமாக்ஸ் பணிகள் மற்றும் இமயமலைப் பயணத்தை முடித்துக் கொண்டு ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினி, அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தனது முடிவை அறிவிப்பார் என்றும், அதே நேரம் புதிய படத்தையும் நடித்து முடிப்பார் என்றும் ராகவேந்திரா மண்டப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொடைக்கானலில் கமல் – த்ரிஷா!


மன்மதன் அம்புக்காக 40 நாட்கள் ஐரோப்பிய சொகுசுக் கப்பலில் படப்பிடிப்பு நடத்தியவர்கள், அடுத்து சென்னையில் ஒரு வாரம் முக்கிய காட்சிகளை எடுத்தார்கள்.
இப்போது அடுத்த ஷெட்யூலுக்காக கொடைக்கானல் போயிருக்கிறது மன்மதன் அம்பு யூனிட்.

ஹீரோ கமல் , ஹீரோயின் த்ரிஷா, மாதவன், சங்கீதா ஆகியோர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளனவாம். ஐரோப்பிய தட்பவெப்பநிலை கொண்ட இடமாக வேண்டும் என்று தேடியதில், கமலுக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமான கொடைக்கானல் நினைவுக்கு வர, அட்டகாசமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

இப்போதைய நிலவரப்படி படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். செப்டம்பரில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவிருப்பதாகவும், தீபாவளிக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை போஸ்ட் புரொடக்ஷன் வேலை தாமதமானால், பொங்கலுக்கு படத்தை வெளியிட்டுவிட உத்தேசித்துள்ளாராம் தயாரிப்பாளர் உதயநிதி.

தமன்னாவின் ‘மார்க்கெட்’ ரேட்!


எனக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. மார்க்கெட் நிலவரப்படி நான் சம்பளம் கேட்கிறேன். ரூ. 1 கோடி சம்பளம் கேட்பதும் கூட மார்க்கெட் நிலவரத்தை அடிப்படையாக வைத்துதான் என்று கூறியுள்ளார் ‘சிக்’ தேவதை தமன்னா.

தமிழ் சினிமா காட்டில் இப்போது தமன்னாவின் மழைதான் ஜோராக பெய்து வருகிறது. முன்பு அடை மழையாக பெய்தது. இப்போது அப்படி இல்லாவிட்டாலும் கூட மழையின் வேகம் குறையவில்லை.

இன்னும் தனக்குள்ள நல்ல மவுசைப் பயன்படுத்தி சம்பளத்தை சரியாக ஏற்றி வைத்து வசூலித்து வருகிறார் தமன்னா. அவரது இன்றைய சம்பளம் ரூ. 1 கோடியாம்.

இதெல்லாம் ஜாஸ்தியா இல்லையா தமன்னா என்று யாராவது கேட்டால்,

பொதுவாக படங்களின் பட்ஜெட் மார்க்கெட் மதிப்பை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது; அதே போன்று மார்க்கெட் மதிப்பை ‌வைத்தே தயாரிப்பாளர்கள் எனது சம்பளத்தையும் வழங்கட்டும்.

நான் அவர்களிடம் இருந்து அதிகத் தொகையை எதிர்பார்க்கவில்லை. நான் இதுவரை நடித்த அனைத்து படங்களிலுமே, எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன். என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் எப்போதும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்கிறார்.

ஒரு கோடிக்கு ஒரு பைசா கூட குறைத்துக் கொள்ள முடியாது என்றும் கறாராக கூறி வருகிறாராம் தமன்னா.

நடிகர், நடிகை களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு திரையுலகில் சத்தம் கேட்டது. அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை!

மீண்டும் இணையும் ஏ எம் ரத்னம் – விஜய்!


விஜய்யை வைத்து கில்லி, சிவகாசி என வெற்றிப் படங்களைத் தந்தவர் ஏ எம் ரத்னம். ஒரே நேரத்தில் 6 மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர்.ஆனால்…. அவருக்கும் அடி சறுக்கியது. தொடர் தோல்விகளால் பெரும் நஷ்டம் ஏற்பட, வட்டியாக மட்டுமே மாதம் ரூ 10 கோடி வரை அவர் கட்டுவதாக சமீபத்தில் ஒரு பட விழாவில் அன்பாலயா பிரபாகரன் தெரிவித்தார்.
இப்போது அந்தக் கஷ்டத்திலிருந்து சற்றே மீள அவருக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது.

ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடிகர் விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் விக்ரம் குமார். யாவரும் நலம் படத்தை இயக்கியவர்.

சில தினங்களுக்கு முன் விஜய்யிடம் ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா கதையைச் சொன்னாராம். கில்லி மாதிரி விறுவிறுவென திரைக்கதை இருக்க வேண்டும் என விஜய் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, அப்படியே ஆகட்டும் என்று சொன்ன விக்ரம், சாலிகிராமத்தில் உள்ள ரத்னம் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக ஸ்க்ரிட்டை பக்காவாக உருவாக்கி வருகிறாராம்.

த்ரீ இடியட்ஸ் ரீமேக் பற்றி தெளிவான ஒரு அறிவிப்பு வந்ததும், இந்தப் படத்தை அறிவித்துவிடலாம் என்று ரத்னத்துக்கு வாக்களித்துள்ளாராம் விஜய்!

இளைய தளபதியின் புதிய அவதாரத்துடன் 5 படங்கள்!


லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அந்த படத்தை தானே இயக்குவதாக லிங்குசாமி அறிவித்தார். இப்போது, அந்த படத்தில் சிம்பு நடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி சிம்பு வெளியிட்ட அறிக்கை: செப்டம்பர் 1ம் தேதி முதல் என்னிடம் கால்ஷீட் இருப்பதையும் லிங்குசாமியிடம் தெரிவித்தேன். அப்படி இருந்தும் அவரது படத்தில் நான் இல்லை என்றும், இன்னொரு நடிகரை தேர்வு செய்வதாகவும் கூறியுள்ளார். இதற்கு நான் காரணம் என்பது போலவும் கூறியுள்ளார். இது முறையற்ற செயலாகும். இவ்வாறு சிம்பு தெரிவித்தார்.

சிம்புவுக்கும் இயக்குநர் லிங்குசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது அதில் விஜய் நடிக்க போகிறார். தற்போதைய நிலவரப்படி 5 படங்களில் நடிக்கிறார் விஜய். அவை: சித்திக் இயக்கத்தில் காவல் காதல், ராஜா இயக்கத்தில் வேலாயுதம், சீமான் இயக்கத்தில் பகலவன், ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் மற்றும் லிங்குசாமி படம். இப்படி பெரிய இயக்குனர்களை கொண்டு புதிய அவதாரத்துடன் தனது அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார் இளைய தளபதி.

சூப்பர்ஸ்டாருக்கு ‘நோ’,,, இளைய தளபதிக்கு ‘ஓகே’ சொன்ன சத்யராஜ்


ஷங்க‌ர் இயக்கிய சிவா‌ஜி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த சத்யராஜ் ர‌ஜினிக்கு நான் வில்லனாக நடித்தால் என் படத்தில் அவர் வில்லனாக நடிப்பாரா என கேள்வி கேட்டு நடிக்க மறுத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. இப்போது மீண்டும் ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. 3 இடியட்ஸ் படத்தில் இளைய தளபதி விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இளைய தளபதியுடன் நடிக்க சத்யராஜும் நடிக்க டபுள் ஓகே சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்ட நாயகன் தாமதமா?


ஷக்தி, ரம்யா நம்பீஷன் நடிக்கும் படம் ‘ஆட்டநாயகன்’. படத்தை இயக்கும் கிருஷ்ணாராம் கூறியதாவது:‘ஆட்ட நாயகன்’ என்ற தலைப்பு ஆக்ஷன் படத் தோற்றத்தை ஏற்படுத்தினாலும் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதை. ஆனாலும் ஆக்ஷன் படத்துக்கான அத்தனை அம்சங்களுடனும் காதல், சென்டிமென்ட் கலந்திருக்கும். ஷக்திக்கு இது திருப்புமுனையான படமாக இருக்கும். அவரின் முழுத் திறமையையும் இதில் கொண்டு வந்திருக்கிறோம். ரம்யா நம்பீஷன் அச்சு அசலான தமிழ் நாட்டுப் பெண்ணாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீரா வாசுதேவன், நாயகியின் அக்காவாக நடித்திருக்கிறார். சுவாரஸ்யம் கருதி வித்தியாசமான பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறோம். படத்தை தொழில் நுட்ப ரீதியாகவும், எடிட்டிங்கில் நேர்த்தியாகவும் கொண்டு வருதற்காக அதிக காலம் எடுத்துக் கொண்டதால் சற்று தாமதமாகி விட்டது. அடுத்த மாதம் வெளிவருகிறது.

நடி‌கை‌ எலி‌சபெ‌த்‌ பே‌ட்‌டி‌


“பி‌றந்‌தது கே‌ரளா‌வா‌க இருந்‌தா‌லும்‌ நா‌ன்‌ படி‌த்‌து வளர்‌ந்‌தது எல்‌லா‌ம்‌ கா‌ஞ்‌சி‌பு‌ரத்‌தி‌ல்‌தா‌ன்‌.சி‌னி‌மா‌வி‌ல்‌ நம்‌மளுடை‌ய தி‌றமை‌யை‌ கா‌ண்‌பி‌க்‌கலா‌ம்‌னு வந்‌தா‌, எனக்‌கு கி‌டை‌க்‌கி‌ன்‌ற வா‌ய்‌ப்‌பு‌கள்‌ எல்‌லா‌ம்‌ சி‌ன்‌ன சி‌ன்‌ன வே‌டமா‌கதா‌ன்‌ இருந்‌தது. இப்‌போ‌துதா‌ன்‌ பளி‌ச்‌சி‌ன்‌னு சொ‌ல்லி‌க்‌கி‌‌ற மா‌தி‌ரி‌ நல்‌ல வே‌டங்‌களை‌ கொ‌டுத்‌து எனக்‌குள்‌ இருக்‌கும்‌‌ தி‌றமை‌ உணர வை‌க்‌கி‌றா‌ங்‌க இயக்‌குனர்‌கள்‌. நா‌ன்‌ ஒரு படத்‌தி‌ல்‌ நடி‌த்‌தா‌ல்‌ சி‌ன்‌ன கே‌ரக்‌டரா‌க இருந்‌தா‌லும்‌. அது முடி‌ந்‌ததும்‌ இயக்‌குனர்‌கள்‌ என்‌னி‌டம்‌‌ சொ‌ல்‌கி‌ன்‌ற ஒரே‌ வா‌ர்‌த்‌தை‌ என்‌னோ‌ட அடுத்‌த படத்‌தி‌ல்‌ உங்‌களுக்‌கு பெ‌ரி‌ய கே‌ரக்‌டர்‌ தர்‌றே‌ன்‌ என்‌பதுதா‌ன்” என்‌று மகி‌ழ்‌ச்‌சியு‌டன்‌‌ தெ‌ரி‌வி‌க்‌கி‌றா‌ர்‌ நடி‌கை‌ எலி‌சபெ‌த்‌.

இவர்‌ தற்‌போ‌து வெ‌ளி‌வந்‌து வெ‌ற்‌றி‌கரமா‌க ஒடி‌க்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ ‘கா‌தல்‌ சொ‌ல்‌ல வந்‌தே‌ன்’‌ படத்‌தி‌ல்‌ கதா‌நா‌யகனி‌ன்‌ அம்‌மா‌வா‌க, ஆர்‌. சுந்‌தர்‌ரா‌ஜனி‌ன்‌ மனை‌வி‌யா‌க நடி‌த்‌தவர்‌. இவர்‌ ஏற்‌கனவே‌ நா‌ன்‌கு வருடத்‌தி‌ற்‌கு முன்‌பு‌ ‘எம்‌டன்‌ மகன்’‌ படத்‌தி‌ல்‌ கோ‌பி‌கா‌வி‌ன்‌ அண்‌ணி‌யா‌க அறி‌முகம்‌ ஆனா‌ர்‌. அதன்‌ பி‌றகு கஸ்‌தூ‌ரி‌ ரா‌ஜா‌வி‌ன்‌ ‘கா‌தல்‌ வரும்‌ பருவம்’‌, ‘இலக்‌கணம்’‌, ‘தம்‌பி‌ உடை‌யா‌ன்‌’, ‘தம்‌பி‌ அர்‌ஜு‌னா’‌, ‘மா‌த்‌தி‌யோ‌சி‌’, ‘கோ‌ரி‌ப்‌பா‌ளை‌யம்’‌, ‘ஈரம்‌’, ‘கல்‌லூ‌ரி’‌, ‘தி‌று தி‌று துறு துறு’, ‘கற்‌றது களவு’‌, ‘பு‌லி‌ வருது’ என இருபது படங்‌களி‌ல்‌ சி‌ன்‌ன சி‌ன்‌ன வே‌டங்‌களி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. ‘ரா‌வணன்’‌ படத்‌தி‌ல்‌ ப்‌ரி‌யா‌மணி‌யி‌ன்‌ அம்‌மா‌வா‌க நடி‌த்‌தி‌ருந்‌தா‌ர்‌. வெ‌ளி‌வர இருக்‌கும்‌ ‘மதி‌ல்‌ மே‌ல்‌ பூ‌ணை‌’, ‘அல்‌லி‌ நகரம்’‌, ‘வண்‌ணத்‌தே‌ர்’‌, ‘கருப்‌பர்‌ நகரம்’‌, ‘தி‌ருப்‌பூ‌ர்’‌, ‘சி‌க்‌கு பு‌க்‌கு’, ‘365 கா‌தல்‌ கடி‌தங்‌கள்’‌ போ‌ன்‌ற படங்‌களி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

அவர்‌ மே‌லும்‌ கூறுகையி‌ல்‌, “ஒரு நடி‌கை‌க்‌கு அவர்‌ நடி‌க்‌க வந்‌து, அவர்‌ தி‌றமை‌யை‌ பயன்‌படுத்‌துகின்‌ற மா‌தி‌ரி‌ நல்‌ல பா‌த்‌தி‌ரங்‌கள்‌ அமை‌ந்‌தா‌ல்‌தா‌ன்‌ சந்‌தோ‌ஷமா‌க இருக்‌கும்‌. அந்‌த வி‌தத்‌தி‌ல்‌ என்‌ தி‌றமை‌யை‌ இப்‌போ‌ பு‌ரி‌ஞ்‌சி‌க்‌க ஆரம்‌பி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌. எதி‌ர்‌ வரும்‌ படங்‌களி‌ல்‌ நல்‌ல வே‌டங்‌கள்‌ கி‌டை‌க்‌கி‌றது.

இப்‌போ‌து, ‘கா‌தல்‌ சொ‌ல்‌ல வந்‌தே‌ன்’‌ படத்‌தி‌ல்‌ தா‌ய்‌ சொ‌ல்‌லை‌ தட்‌டா‌த மகனா‌க கதா‌நா‌யகன்‌ பா‌லா‌ஜி‌ நடி‌த்‌தி‌ருந்‌தா‌ர்‌. அந்‌த தா‌ய்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌ன்‌ற மரி‌யா‌தை‌ எனக்‌கு கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌றது. கடந்‌த நா‌ன்‌கு வருடமா‌க நா‌ன்‌ உழை‌த்‌ததற்‌கு, அந்‌த கதா‌பா‌த்‌தி‌ரம்‌ மூ‌லமா‌க நல்‌ல மரி‌யா‌தை‌ கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌றது. அதற்‌கு நி‌றை‌ய பா‌ரா‌ட்‌டுக்‌கள்‌ கி‌டை‌க்‌கி‌றது. அதுக்‌கு முதலி‌ல்‌ இயக்‌குனர்‌ பூ‌பதி‌ பா‌ண்‌டி‌யனுக்‌கு நன்‌றி‌யை‌ தெ‌ரி‌வி‌த்‌துக்‌கொ‌ள்‌கி‌றே‌ன்‌” என்‌றா‌ர்‌.

மீண்டும் என் அலை அடிக்கும் : ஸ்ரேயா


இடையில் சில படங்கள் ஓடவில்லை. அதனால் எனது மார்க்கெட் சரியவில்லை. இப்போதும் தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ளேன். ‘சிக்கு புக்கு’ படத்துக்கு பின் மீண்டும் என் அலை அடிக்கும்’’ என்கிறார் ஸ்ரேயா.

‘சிக்கு புக்கு’ படம் பற்றி?

இது முழு நீள ரொமான்டிக் படம். முழுக்க முழுக்க என்னையும் ஆர்யாவையும் சுற்றிதான் கதை நகரும். இதில் துள்ளலான ஸ்ரேயாவை ரசிகர்கள் பார்க்கலாம். இந்த கேரக்டரை நானே விரும்பி நடிக்கிறேன். ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

இதில் இன்னொரு ஹீரோயின் பிரீத்தியும் இருக்கிறாரே?

இந்தி நடிகை அம்ரிதா ராவின் தங்கை அவர். படத்தில் அவர் ஹீரோயின் கிடையாது. கவுரவ வேடத்தில்தான் நடிக்கிறார். அதனால் யாருக்கு முக்கியத்துவம் என்பதை சொல்ல வேண்டியதே இல்லை.

‘ரவுத்திரம்’ படத்தில் நடிக்கிறீர்களா?

அப்படம் பற்றி சில தகவல்கள் வந்தன. நானும் கேள்விப்பட்டேன். அதில் உண்மை இல்லை. அந்த படத்தில் நான் நடிப்பது உறுதி. முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அதில் பங்கேற்கவில்லை. அடுத்த ஷெட்யூல், ஜூலையில் நடக்கிறது. அதில் பங்கேற்பேன்.

‘வாட்ஸ் குக்கிங்’ ஆங்கில படம் என்ன ஆனது?

அந்த படம் திரைப்பட விழாக்களுக்காக தயாரானது. பல பட விழாக்களில் கலந்துகொண்டது. தீபா மேத்தாவின் இயக்கத்தில் நடிப்பது எனது கனவு. அதில், முதல் கட்டமாக அவரது தயாரிப்பில் இந்த படத்தில் நடித்தேன். விரைவில் அவரது இயக்கத்திலும் நடிப்பேன் என நம்புகிறேன்.

அடுத்து?

தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக ‘டான் சீனு’ படத்தில் நடிக்கிறேன். எஸ்.ஜே.சூர்யா இயக்கியுள்ள ‘புலி’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளேன். ஏ.ஆர். ரகுமான் இசை என்பதாலும் படத்தில் மிக முக்கியமான பாடல் காட்சி என்பதாலும் டான்ஸ் ஆடினேன்.

Thursday, August 19, 2010

விளம்பர படங்களில் படு பிஸி : நடிகைகள் காட்டில் கரன்சி மழை


பட்டு சேலை, பனியன்-ஜட்டி, வலி நிவாரணி மாத்திரை, வயாக்ரா மாத்திரை என எது விற்பதற்கும் விளம்பரம் தேவைப்படுகிறது. டிவியிலோ, பத்திரிகையிலோ விளம்பரம் வந்தால் உடனே கடையில் ஆஜராகி விசாரிக்க ஆரம்பித்துவிடுகின்றனர் மக்கள். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் வசப்படுத்தும் திறமை விளம்பரத்துக்கு உண்டு. இதனால், நிறுவனங்கள் போட்டி போட்டு விளம்பரங்களை உருவாக்குகின்றன.
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான், ஆமிர்கான், விஜய், விக்ரம், மாதவன் என குறிப்பிட்ட சில நடிகர்கள், சச்சின், டோனி போன்ற சில விளையாட்டு வீரர்களை விளம்பரங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.

ஆனாலும், விளம்பர படங்களை பொருத்தவரை ஹீரோக்களைவிட ஹீரோயின்களுக்கு அதிக மவுசு. ஐஸ்வர்யாராயில் தொடங்கி, பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைப், கரீனா கபூர், ஸ்ரீதேவி, ப்ரீத்தி ஜிந்தா, குஷ்பு, தமன்னா, அனுஷ்கா, சினேகா, அசின், ஸ்ரேயா, ரம்யா, மீரா ஜாஸ்மின், ஜெனிலியா, இலியானா, தேவயானி, பத்மப்ரியா என பட்டியல் பெரிதாக நீள்கிறது. மாடல் அழகிகள், மாஜி விளையாட்டு வீராங்கனைகள், பாடகிகள் என பட்டியல் நீள்கிறது. பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடியும் விளம்பரத்தில் வந்துவிட்டார்.

இதுபற்றி நடிகை குஷ்புவிடம் கேட்டபோது, ‘விளம்பரத்தில் ஆண், பெண் ஆதிக்கம் என்று பிரித்துக் கூற விரும்பவில்லை. புதிதாக சந்தைக்கு வரும் பொருளின் விளம்பர தூதராக பெரும்பாலும் நடிகைகளையே நிறுவனங்கள் அறிவிக்கின்றன’ என்றார். பீக் நடிகை என்றால் ரூ.2 கோடி வரை போகிறது சம்பளம். அதிகபட்சம் 4 நாட்களில் ஷூட்டிங் முடிந்துவிடும் என்பதால் விளம்பர ஒப்பந்தங்களுக்கு நடிகைகள் நோ சொல்வதே இல்லை. சினிமாவைவிட விளம்பர படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். விளம்பர படங்களில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் நடிகைகள் காட்டில் கரன்சி மழை கொட்டுகிறது.

மெகா சீரியலில் நடிக்கிறார் மதுபாலா


தமிழில் ரோஜா, ஜென்டில் மேன், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்த மதுபாலா, திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர் நடிகை ஹேமமாலினியின் உறவினர் ஆவார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டி.வி., சீரியலில் நடிக்க வந்துள்ளார், மதுபாலா. குட்டி பத்மினியின் கணவர் பிரபு நேபால் தயாரித்து, இயக்கும் செளந்தரவல்லி என்ற மெகா தொடரில் நாயகியாக நடிக்கிறார் மதுபாலா. இதில் தாசிகுலத்தின் அவலத்தைத் துடைத்து சமூக நீதிக்காக போராடும் கேரக்டரில் மதுபாலா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்ததால் முதல் ஷூட்டிங்கின்போது சற்று பதட்டமாக இருந்ததாம் மதுபாலாவுக்கு. முதல் காட்சிக்கு நான்கு டேக்குகள் வாங்கி உள்ளார். அதன் பின்னர் படிப்படியாக இயல்பாகி ஒரே டேக்கில் ஓ.கே., செய்ய ஆரம்பித்து விட்டார். இது எனக்கு ரீ எண்ட்ரி. டிவி தொடரில் நடிப்பதற்காக நான் வருத்தப்படவில்லை. இதுவும் நடிப்புதான். நான் டிவியில் நடிப்பதை எனது தோழிகளான ரம்யா கிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் வரவேற்று உற்சாகப்படுத்தி உள்ளனர் என்றார் மதுபாலா.

கீர்த்தி சாவ்லா கொடுத்த முத்தம்


விஷன்ப்ரோஈ வெண்ட் மேனேஜ்மெண்ட் ஏற்பாடு செய்திருந்த ‘விவெல் மிஸ் சின்னத்திரை&2010’ போட்டியில் சின்னத்திரை நடிகைகள் தேவி பிரியா, லாவண்யா, விலாசினி, மோனிகா, மோபின், ஸ்வேதா, காயத்ரி, மணிமேகலை ரஜினி, ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள், போட்டி நடுவர்களாக ‘பாண்டவர் பூமி’ ஷமித்தா, ‘மிளகா’ நட்ராஜ், இயக்குனர் ரவிமரியா, அழகுக்கலை நிபுணர் மது, மாடல் பயிற்சியாளர் சுனிரல் மேனன், மிஸ் சென்னை திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விவெல் மிஸ் சின்னத்திரை2010 பட்டத்தை ஸ்வேதா வென்றார். இரண்டாவது இடத்தை ரஜினியும், மூன்றாவது இடத்தை தேவிபிரியாவும் பிடித்தனர். பட்டம் வென்றவர்களுக்கு கீர்த்தி சாவ்லா கீரிடம் சூட்டி முத்தம் கொடுத்தார்.

Wednesday, August 18, 2010

அஜீத்-கவுதம் இணையும் வாய்ப்பே இல்லை?





அஜீத்தின் 50 வது படத்தை முதலில் இயக்குவதாக இருந்த கவுதம்மேனன் பிறகு அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த கவுதம் அஜீத்தை பற்றி ஆவேசமாக பேட்டி கொடுக்க, அஜீத் ரசிகர்களும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் அஜீத்-கவுதம் இணையும் வாய்ப்பு தற்போதைக்கு இல்லை.

பிரபுதேவாவின் ரகசிய திட்டம்


டான்ஸ் மாஸ்டராக இருந்த பிரபு தேவா திடீரென நடிகர் ஆனார். நடனத்தில் காட்டிய கவனம் மாறி, நடிப்பில் மும்முரமாகிவிட்டார். நடிப்பு சான்ஸ் குறைந்தபோது, திடீரென டைரக்டர் ஆகிவிட்டார். இப்போது அடுத்த கட்டமாக சர்வதேச நடன பள்ளி தொடங்கும் முயற்சியில் ரகசியமாக இறங்கி உள்ளாராம். இதனால் பெரும்பகுதி கவனத்தை இந்த பள்ளிக்கூடத்தின் மேல் செலுத்த ஆரம்பித்திருக்கிறாராம். மைசூரில்தான் இந்த பள்ளியை அவர் தொடங்க உள்ளார். வெளிநாடுகளில் இதன் கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளார். துபாயில் உள்ள நயன்தாராவின் அண்ணனும் பிரபு தேவாவின்
இந்த புரொஜெக்ட்டில் அவருக்கு உதவியாக உள்ளாராம்.

விஷ்ணு எனக்கு பாய்பிரெண்ட் : பூனம் பஜ்வா


'துரோகி' படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக பூர்ணா, விஷ்ணு ஜோடியாக பூனம் பஜ்வா நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் விஷ்ணு தோள் மீது கை போட்டு மிக நெருக்கமாக போஸ் கொடுத்தார் பூனம். அனைவரின் கண்களும் அந்த ஜோடி மீதே இருந்தது. விழாவில் நிருபர்களிடம் பேசிய பூர்ணா, ‘எனக்கு வீட்டில் அண்ணன் இருக்கிறார். சினிமா இன்டஸ்ட்ரியில் எனக்கு அண்ணன் விஷ்ணுதான். ஒரு காட்சியில் என் முகத்தில் விஷ்ணு குத்தி நடித்தபோது அண்ணன் ஞாபகம்தான் வந்தது. அவனும் என்னை அப்படித்தான் அடிப்பான்Õ என்றார். உங்களுக்கு விஷ்ணு எப்படி என பூனம் பஜ்வாவிடம் கேட்டபோது, ‘பூர்ணாவுக்குதான் விஷ்ணு அண்ணன். எனக்கு பாய் பிரெண்ட்Õ என ஒரே போடு போட்டார். Ôஷூட்டிங்கில் விஷ்ணுவும் பூனமும் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த நெருக்கத்தைத்தான் போட்டோவுக்கு போஸ் தந்த போது நீங்கள் பார்த்தது.
விஷ்ணுவை பற்றி பூனம் சொன்னதிலும் உண்மை இருக்கலாம்Õ என பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறினார்.

ஷூட்டிங்கில் நடிகர் பரத் படுகாயம்


வானம் பட ஷூட்டிங்கில் நடந்த விபத்தில் நடிகர் பரத்தின் கை கிழிந்தது.சிம்பு, பரத், சினேகா உல்லால் நடிக்கும் படம் "வானம்". இப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடக்கிறது. கிரிஷ் இயக்குகிறார். காட்சிப்படி எதிரே வரும் வில்லனின் ஜீப் மீது ஓடி வந்து பரத் விழ வேண்டும். இந்த காட்சிக்கு டூப் போட்டு எடுக்கலாம் என திட்டமிட்டிருந்தனர். கடைசி நேரத்தில் டூப் இல்லாமல் நானே நடிக்கிறேன் என பரத் சொன்னாராம். இதையடுத்து காட்சியை படமாக்கினர். ஓடி வந்து ஜீப் மீது பரத் விழுந்தபோது, ஜீப்பின் முன்புற கண்ணாடி உடைந்தது. அது பரத்தின் கையை கிழித்ததில் ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த படக்குழுவினர் பதறினர். உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரது கையில் தையல்கள் போடப்பட்டன. இதுபற்றி பரத் கூறும்போது, "ஆக்ஷன் காட்சியில் டூப் இல்லாமல் நடிக்க விரும்பினேன். அது இப்படியாகிவிட்டது. படப்பிடிப்புக்கு லீவு போட்டுவிட்டு சென்னை வந்துவிட்டேன். 4 நாள் வீட்டில் ஓய்வெடுக்கப் போகிறேன்" என்றார்.

தெலுங்குக்கு வந்தார் அமீஷா


இந்தி சினிமா கைவிட்டதால் தெலுங்கு படத்தில் நடிக்க வந்திருக்கிறார் அமீஷா படேல்.ஆரம்பத்தில் தமிழில் கீதை, தெலுங்க¤ல் சில படங்களில் நடித்தாலும் இந்தியில் வாய்ப்புகள் கிடைத்ததும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்தார் அமீஷா.தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் அவரை சந்திப்பதே முடியாத காரியமாகிவிட்டது. சில தென்னிந்திய படங்களில் நடிக்க கதை கேட்டாலும் அதிக சம்பளம் கேட்டு வந்தார் அமீஷா. இப்போது இந்தியில் அவருக்கு மவுசு குறைந்துவிட்டது. இதனால் படங்களும் இல்லை. இதையடுத்து தெலுங்கில் வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார். பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் படம் பரம் வீர சக்ரா. இதில் அனுஷ்கா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. திடீரென அவர் படத்திலிருந்து விலகிக்கொண்டார். இதையடுத்துதான் இந்த வாய்ப்பு அமீஷாவுக்கு சென்றிருக்கிறது. இதில் இன்னொரு ஹ¦ரோயினாக ஷீலா நடிக்கிறார். இரு ஹீரோயின் கதை என்றாலும் வாய்ப்பே இல்லாததற்கு இதில் நடிக்கலாம் என அமீஷா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

திரும்பினார் ஸ்ரேயா: தொடங்கியது ரவுத்திரம்



ஜீவா நடிக்கும் ரவுத்திரம் படத்தின் இரண்டாம் ஷெட்யூல் ஒரு வழியாக தொடங்கியுள்ளது. ஸ்ரேயாவால் இரண்டாவது ஷெட்யூல் தாமதமாகி வந்தது. சிக்கு புக்கு, தெலுங்கு டான் சீனு படங்களின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டதால் ரவுத்திரம் படப்பிடிப்பில் ஸ்ரேயா பங்கேற்கவில்லை. அவர் இல்லாமலேயே முதல் ஷெட்யூலை முடித்தனர். இரண்டாம் ஷெட்யூலுக்காக அவரிடம் பட யூனிட் தேதி கேட்டபோது, குக்கிங் வித் ஸ்டெல்லா ஆங்கில படத்தின் புரமோஷனுக்காக வெளிநாடு சென்றுவிட்டாராம் ஸ்ரேயா. இதனால் ஸ்ரேயாவுக்காக யூனிட் காத்திருந்தது. இப்போது ஒரு வழியாக அவர் ரவுத்திரம் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் அவர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மீண்டும் நடிக்க வருகிறார் பாரதி




‘அம்முவாகிய நான்‘ உட்பட பல படங்களில் நடித்தவர் பாரதி. திடீரென்று திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், இப்போது மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:தமிழ், மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். கடைசியாக, ‘ஆயுதம்’ என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்தேன். ‘அம்முவாகிய நான்’ நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டதால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இப்போது ஒரு குழந்தைக்கும் தாயாகி எனது குடும்ப கடமைகளை முடித்து விட்டேன். அதனால் மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டேன். திருமணத்துக்குப் பிறகும் உடம்பை கவனமாக பார்த்துக் கொண்டதால் அப்படியேதான் இப்போதும் இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு ஹீரோயினாக நடிப்பது சிரமம் என்பது தெரியும். அதனால் நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். முக்கியத்துவம் நிறைந்த கேரக்டர்கள் கொண்ட கதைகளை கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.

இந்திய சினிமாவிற்கு எந்திரன் பெருமையை தேடித் தரும் : அமிதாப் புகழாரம்!



சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கர் இயக்கியுள்ள இந்திய சினிமாவின் மிகப் பிரமாண்ட படைப்பான 'The Robot' (எந்திரன் இந்திப் பதிப்பு) பாடல்கள் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரமாண்ட 'எந்திரன்', அடுத்த மாதம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.



எந்திரனின் இந்திப் பதிப்பு நேரடி இந்திப் படங்களுக்கு இணையான பிரமாண்டத்துடன் வெளியாக உள்ளது. விழாவில் சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன், ர‌ஜினி, ஷங்கர், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப்பச்சன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள். இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி. அவரது மனித நேயம், எளிமையை நான் மிகவும் விரும்புகிறேன். வானளாவிய புகழ், செல்வாக்கு எல்லாம் இருந்தும், ஒரு சாதாரண மனிதனாகவே தன் வாழ்நாள் முழுதும் இருந்து வருகிறார் ரஜினி. அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதரை, நண்பரை, கலைஞரை நான் பார்த்ததில்லை," என்றார் அமிதாப். இயக்குநர் ஷங்கர் பேசுகையில், "ரோபோ ஒரு தமிழ்ப் படமோ, தெலுங்குப் படமோ, இந்திப் படமோ அல்ல. இது ஒரு இந்தியப் படம். இந்தியாவின் படைப்பாற்றலை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு படம்" என்றார்.













காமன்வெல்த் போட்டி பாடல் ஏ.ஆர்.ரகுமானுடன் அமைச்சரவை ஆலோசனை



காமன்வெல்த் போட்டிக்கான பாடல் குறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் அமைச்சரவை குழு நேற்று இரவு ஆலோசனை நடத்தியது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், அக்டோபர் மாதம் டெல்லியில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பல ஆயிரம் கோடி செலவில் நடந்து வருகிறது. இதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. போட்டிகள் தொடங்க ஒன்றரை மாதமே உள்ள நிலையில் பணிகள் இன்னும் முடியாமல் உள்ளன. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், நேற்றுமுன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார்.



அப்போது, போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் ஊழல் புகார்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கேபினட் செயலர் தலைமையில் உயர்மட்ட கமிட்டியை பிரதமர் அமைத்துள்ளார். இந்த கமிட்டிக்கு காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழு கட்டுப்பட்டு நடக்கும். மேலும், காமன்வெல்த் போட்டி தொடர்பாக அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தலைமையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவுடன் இந்த கேபினட் செயலர் தலைமையிலான குழு ஒருங்கிணைந்து செயல்படும். தினந்தோறும் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்த கமிட்டி ஆய்வு செய்யும்.



இந்நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான அமைச்சர்கள் குழு டெல்லியில் நேற்று இரவு ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்கு மத்திய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.

காமன்வெல்த் போட்டிக்காக தயாரித்துள்ள பாடல் குறித்து ரகுமான் விளக்கினார். ‘ஜெய் ஹோ’ பாடல் பாணியில் அனைவரையும் கவரும் வகையில் அந்த பாடல் இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.









Tuesday, August 17, 2010

ஜெயராமின் சபாஷ் சரியான போட்டி


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயராம் ஹீரோவாக நடிக்கும் படம், ‘சபாஷ் சரியான போட்டி’. இதை டி.வி நடிகர் வேணுஅரவிந்த் இயக்குகிறார்.2003ம் ஆண்டு வெளியான ‘ஜூலி கணபதி’ படத்துக்குப் பிறகு, சரோஜா, தாம்தூம் உட்பட சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார் ஜெயராம். இப்போது சபாஷ் சரியான போட்டி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக ஸ்ரீரஞ்சனி நடிக்கிறார். இந்த படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். ‘பிரபலமான நடிகராக இருக்கும் ஹீரோவை உறவினர்கள் அரசியலில் குதிக்க சொல்கிறார்கள். கண்டிப்பாக முதல்வர் ஆகலாம் என்றும் உசுப்பேற்றுகிறார்கள். அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை. காமெடிக்கு முக்கியத்துவம் தந்து படத்தை எடுத்திருக்கிறோம். படம் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

எந்திரனின் இந்திப் பாடல் வெளியீடு : ஒரே மேடையில் ர‌ஜினி, அமிதாப்!


சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கர் இயக்கியுள்ள இந்திய சினிமாவின் மிகப் பிரமாண்ட படைப்பான 'எந்திரன்' பாடல்கள் வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரமாண்ட 'எந்திரன்', அடுத்த மாதம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

எந்திரனின் இந்திப் பதிப்பு நேரடி இந்திப் படங்களுக்கு இணையான பிரமாண்டத்துடன் வெளியாக உள்ளது. முதல்கட்டமாக இன்று எந்திரனின் இந்திப் பாடல்களை வெளியிடுகின்றனர். இந்த விழாவில் ர‌ஜினி, ஷங்கர், கலாநிதி மாறன், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப்பச்சனும், ஷாருக்கானும் கலந்து கொள்கிறார்கள். ஷங்கர் எந்திரன் கதையை ஷாருக்கானிடம் சொன்னதும், அவர் கடைசி நிமிடத்தில் எந்திரனில் நடிக்காமல் பின் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. உடல்நலக்குறைவு காரணமாக அமீர்கான் விழாவில் கலந்து கொள்ள இயலாது என தெ‌ரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் போனி வர்மாவால் ஹேமமாலினி அப்செட்


பிரகாஷ் ராஜ், போனி வர்மா திருமணம் ஆகஸ்ட் 24ம் தேதி மும்பையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டார் பிரகாஷ் ராஜ். தென்னிந்திய மற்றும் இந்தி சினிமாவை சேர்ந்த தனது நண்பர்களை திருமணத்துக்கு அழைக்க முடிவு செய்திருக்கிறார். பிரகாஷ் ராஜ்
திருமண வேலைகளில் பிசியாக இருந்தாலும் போனி வர்மா, படங்களுக்கு நடனம் அமைக்கும் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் ஹேம மாலினி தயாரிக்கும் படம் Ôடெல் மீ ஓ குதாÕ. இதில் அவரது மகள் இஷா தியோல் நடிக்கிறார். இப்படத்தின் வசன காட்சிகளுக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது படத்தில் இடம்பெறும் 5 பாடல்களை படமாக்கும் வேலைகள் நடக்கிறது. இந்த 5 பாடல்களுக்கும் போனி வர்மாதான் டான்ஸ் மாஸ்டர். இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் பாடல்களுக்கான ஷூட்டிங் அடுத்த மாதம் வரையும் நடக்க உள்ளதாம். இதற்கிடையே 24ம் தேதி தனது திருமணம் இருப்பதால் அன்று ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாது என போனி வர்மா கூறியிருக்கிறார். அதற்கு ஹேமமாலினி ஓகே சொல்லிவிட்டார். ஆனால் இப்போது பிரகாஷ்ராஜ் & போனி வர்மாவின் திடீர் ஹனிமூன் பிளானால் அப்செட் ஆகியிருக்கிறாராம் ஹேமமாலினி.
Ôஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டும். அதற்காக போனி வர்மாவுடன் படக்குழுவினர் இம்மாத இறுதியில் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தோம். முதலில் 24ம் தேதி மட்டும் ஷூட்டிங்கிற்கு வரமுடியாது என போனி சொன்னார். இப்போது திடீரென திருமணத்துக்கு பின் 10 நாள் பிரேக் வேண்டும். ஹனிமூனுக்காக குலுமணாலி செல்கிறேன் என கூறுகிறார். ஷூட்டிங் தடைபடும் என்பதால் ஹேமமாலினி
அப்செட்டில் இருக்கிறார்Õ என பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறினார். இது பற்றி போனி வர்மா கூறும்போது, திருமணத்துக்கு பின் நானும் பிரகாஷும் குலுமணாலிக்கு செல்வது உண்மைதான். இதை ஹேமமாலினியிடம் சொல்லிவிட்டேன். இதனால் படத்துக்கு எதுவும் பிரச்னை இருப்பதாக எனக்கு தெரியவில்லைÕ என்றார்.

இலங்கை சென்ற விவகாரம் ஆறவில்லை நடிகை அசின் படம் ரிலீஸ் ஆகுமா?


இலங்கை சென்ற விவகாரம் காரணமாக, நடிகை அசின் நடித்துள்ள ‘ரெடி’ என்ற இந்தி படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகை சேர்ந்த யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று அனைத்து சங்கங்களும் இணைந்த தமிழ் திரையுலக கூட்டு நடவடிக்கை குழு அறிவித்தது. இதையடுத்து தமிழ் திரையுலகினர் அந்த விழாவை புறக்கணித்தனர்.
‘ரெடி’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் இலங்கையில் நடந்தது. சல்மான்கான் ஹீரோவாக நடிக்க அசின் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இலங்கையில் நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

இதையடுத்து அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ் திரையுலகினர் வற்புறுத்தினார்கள். இதுதொடர்பாக நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, ‘நடிகை அசினிடம் இதுபற்றி விவரம் கேட்கப்படும்’ என்று கூறப்பட்டது. இந்நிலையில் ‘ரெடி’ படம் வெளியாவதில் சிக்கல் அதிகரித்துள்ளது. படத்தை வாங்குவதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் கூறுகையில், “இலங்கைக்கு தமிழ் திரையுலகினர் யாரும் செல்லக்கூடாது; மீறிச் சென்றால் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று தமிழ் திரையுலக கூட்டு நடவடிக்கை குழு எடுத்த முடிவு அப்படியே தொடர்கிறது. மீண்டும் அக்குழு கூடி புதிய முடிவு எடுத்தால்தான் இந்த தடை முடிவுக்கு வரும். கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் படமான ‘கைட்ஸ்’ இங்கு திரையிடப்பட்டது. அவர் இலங்கை பட விழாவில் கலந்துகொண்டதால் அந்த படம் உடனடியாக நிறுத்தப்பட்டது” என்றார்.

கேரளாவில் கமலுக்கு பாராட்டு விழா : மலையாள நடிகர் சங்கம் எதிர்ப்பு!


நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள அரசு நடத்தும் பாராட்டு விழாவுக்கு மலையாள நடிகர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள அரசு ஆண்டுதோறும் ஒணம் பண்டிகையையொட்டி, ஓணம் சுற்றுலா வார விழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி ஒரு திரைப்பட நடிகருக்கு பாராட்டு விழாவும் நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு மலையாள நடிகர் மோகன்லால், கவுரவ ராணுவ கர்னலாக தேர்வு பெற்றதையொட்டி பாராட்டு விழா நடத்தியது. இந்த ஆண்டு திரையுலகில் 50 ஆண்டு சேவையை பாராட்டி நடிகர் கமல¢ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தது. இந்த விழா வரும் 22ம் தேதி முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் நடக்க இருக்கிறது.

இதற்கிடையில் கேரள அரசு கமலஹாசனுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு மலையாள நடிகர் சங்கம் (அம்மா) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் இன்னொசென்ட் கூறியுள்ளதாவது: கமல¢ஹாசன் திறமையான, கவுரவிக்கப்பட வேண்டிய நடிகர்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரைப் போல் 50 ஆண்டுகள் சினிமாவுக்கு சேவை செய்த நடிகர்கள் இங்கும் இருக்கும்போது, எங்களை கலந்தாலோசிக்காமல் அரசு தன்னிச்சையாக முடிவு செய்திருக்கிறது. அதனால் கமல¢ஹாசனுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நடிகர் சங்கம் பங்கேற்காது. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளும் யாரையும் தடுக்காது.

இவ்வாறு இன்னொசென்ட் கூறினார். இதற்கிடையே கமலுக்கு ஆதரவாக நடிகர் திலகன் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, ‘‘கமலஹாசன் பாராட்டு விழாவை புறக்கணிக்கும் நடிகர் சங்கத்தை கலைக்க வேண்டும். கேரளாவைச் சேர்த்த எம்.ஜி.ஆரை, புரட்சித் தலைவர் என்று தமிழ் மக்கள் கொண்டாடியதையும் அவரை முதல்வராக்கி அழகு பார்த்ததையும் யாரும் மறக்கக் கூடாது’’ என்றார். மலையாள நடிகர் சங்க விதிமுறைகளை மீறியதாக சங்கத்திலிருந்து திலகன் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் விநியோக உ‌ரிமையை ரெட் ஜெயண்ட் வாங்கியது!


உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆர்யா நடித்து வரும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் விநியோக உ‌ரிமையை வாங்கியுள்ளது. முன்னதாக ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தையயும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியது. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் எம். இயக்கியுள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கும் இந்தப் படத்தில் ஆர்யா ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விரைவில் படம் திரைக்கு வருகிறது.

எந்திரன் விழாவிற்கு வராதது ஏன் : தனுஷ் விளக்கம்!


தமிழ் திரையுலகமே திரண்ட எந்திரன் பாடல் வெளியீடு மலேசியாவில் நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ் வரவில்லை. இது பலருக்கும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் எந்திரன் பாடல் வெளியீடு நடந்த அதே நாளில் தனுஷூக்கு 'மாப்பிளை' பட ஷூட்டிங் இருந்ததாம். இதனால் தயாரிப்பாளர் நலம் கருதி தனுஷ் எந்திரன் ஆடியோ விழாவிற்குச் செல்லாமல் 'மாப்பிளை' படப்பிடிப்பிற்கு சென்றாராம்.

தமிழ் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க ஆர்வம் இல்லை : மாதவன்?


ஹிந்தியில் அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2009 ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் மிகப் பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுத்தது. இப்படத்தில் மாதவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. படத்தை ரீமேக் செய்யும் உரிமையை "ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்" நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை டைரக்ட் (ரீமேக்) செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் நடிக்க நான் நீ என்று நடிகர்கள் முட்டி மோதுகிறார்கள்.

ஆனால், மாதவன் நடித்த வேடத்தை தமிழ், தெலுங்கிலும் மாதவனே நடிக்க வேண்டும் என்று, ஷங்கர் அதை‌த்தான் விரும்புகிறார் எனவும் செய்திகள் வெளியாயின. இதுபற்றி மாதவனிடம் கேட்ட போது, தமிழ் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க தனக்கும் ஆசையாக உள்ளதாகவும் ஆனால் தற்போது, வேறு படங்கள் கைவசம் இருப்பதால் நான் 3 இடியட்ஸில் ஆர்வம் காட்டவில்லை என மாதவன் கூறியுள்ளார்.

‘மன்மதன் அம்பு’ படத்தில் என்னுடைய அம்மா நடிக்கவில்லை : த்ரிஷா மறுப்பு


'சமீபத்தில் 'மன்மதன் அம்பு' படத்துக்காக நடிகர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தினார் கமல்ஹாசன். இந்நிலையில் கமல் அவர் நடிக்கும் ‘மன்மதன் அம்பு’ படத்தில் த்ரிஷாவின் அம்மா நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இதுபற்றி பட த்ரிஷாவிடம் கேட்ட போது, எல்லோரும் சொல்வது போல் என்னுடைய அம்மா மன்மதன் அம்பு படத்தில் நடிக்கவில்லை என தெ‌ரிவித்துள்ளார்.

வரும் 24-ம் தேதி திருமணம் பிரகாஷ்ராஜ் தகவல்


பிரகாஷ் ராஜ் & போனி வர்மா திருமணம் வரும் 24&ம் தேதி மும்பையில் நடக்கிறது. ஏராளமான பாலிவுட் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணிபுரிந்தவர், போனிவர்மா. இவரும் பிரகாஷ் ராஜும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் வரும் 24&ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. நெருக்கமானவர்கள் மட்டும் இதில் பங்கேற்கின்றனர். பிறகு தமிழ், கன்னடம், தெலுங்கு படவுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதுகுறித்து பிரகாஷ்ராஜ் எங்கள் நிருபரிடம் கூறுகையில், ‘24&ம் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது. பிறகு நானும், போனிவர்மாவும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் நண்பர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே விருந்து நிகழ்ச்சி நடத்த உள்ளோம். போனிவர்மா எங்கள் வீட்டு மருமகள். எங்கள் திருமணத்தை ரகசியமாக நடத்தவில்லை. அனைவரது ஆசீர்வாதத்துடனும், ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் நடத்த உள்ளோம்’ என்றார்.

சுபாஷ் கய் தயாரிப்பில் படம் இயக்குகிறார் பிரியதர்ஷன்


இந்தி பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சுபாஷ் கய் நிறுவனத்தில் படம் இயக்குகிறார் பிரியதர்ஷன்.இதுபற்றி சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் செய்தியாளர்களை சந்தித்த சுபாஷ் கய் கூறும்போது, ‘பிரியதர்ஷன் சிறந்த இயக்குனர். 81 படங்களை உருவாக்கியிருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போல் இயக்கி வருகிறார். ‘காஞ்சிவரம்‘ மாதிரியான படம், காமெடி படம் என வித்தியாசமான படங்களை தருவதில் வல்லவர். நான் தயாரிக்கும் படத்தை அவர் இயக்குவது மகிழ்ச்சி. இப்போது கதை விவாதத்துக்காக வந்துள்ளேன்’ என்றார்.

பிரியதர்ஷன் கூறும்போது, ‘இளம் வயதிலேயே சுபாஷ் கய் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். கமர்சியல் படங்களை எல்லா தரப்பு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்ப்பது என்பதில் அவர் திறமையானவர். அவர் பாணியை நான் பின்பற்ற முயற்சித்து வருகிறேன். இப்போது அவர் தயாரிப்பில் இந்திப் படம் இயக்குவது பெருமையாக இருக்கிறது. யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார்.

காமெடி நடிகர் படம் இயக்குவது கஷ்டம்


எக்ஸ்பிரஷன் மீடியா தயாரிக்கும் படம், ‘நீயே என் காதலி’. சின்னி ஜெயந்த், உதய், பிரியா சர்மா நடிக்கின்றனர். சின்னி ஜெயந்த் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. சூர்யா வெளியிட, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார். இதில் சின்னி ஜெயந்த் பேசியதாவது: இது என் 412&வது படம். நடிக்க வந்து 24 ஆண்டுகள் ஆகிறது. ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தில் அறிமுகமானேன். முதலில் ‘சின்னபுள்ள’ படத்தை உருவாக்கினேன். ‘மறுமலர்ச்சி’ பாரதியை இயக்குனராகவும், பிறகு ‘உனக்காக மட்டும்’ படத்தில், இசையமைப்பாளர் சங்கர் (கணேஷ்) மகன் பிரபு சங்கரை இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்தேன். ரஜினியின் ரசிகனாக ‘ஒருதடவை சொன்னா...’ படத்தில் நடித்தேன். பிறகு ‘கானல் நீர்’. இப்போது ‘நீயே என் காதலி’ படத்தை இயக்கி நடிக்கிறேன்.

பிரேம்குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளேன். காமெடி நடிகர் படம் இயக்குவது என்பது கஷ்டம். இந்த படத்தை கஷ்டப்பட்டு இயக்கியுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்துள்ளது.