Thursday, July 8, 2010

மதுரையில் வன்முறை மட்டுமா உள்ளது?-மிளகா இயக்குநர் வேதனை!


மதுரை மண்ணில் வன்முறை மட்டுமே உள்ளது போல படங்கள் வருவது ஆரோக்கியமானதல்ல. குடும்பப் பாசம், அன்பு போன்றவற்றுக்குப் பெயர் போனது மதுரை என்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மிளகா படத்தின் இயக்குநர் ரவி மரியா வேதனையுடன் கூறியுள்ளார்.

இயக்குநர் ரவி மரியாவின் இயக்கத்தில் உருவான படம் மிளகா. இப்படத்தில் நட்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். பூங்கொடி நாயகியாக நடித்துள்ளர்.

மதுரையில் இப்படம்திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு ரவி மரியா, நடராஜ், இணை இயக்குநர் பான்ஸ் ஆகியோர் சென்று ரசிகர்களை சந்தித்தனர்.

அப்போது ரவி மரியா பேசுகையில், மதுரையில் சமீப காலமாக எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் வன்முறை, வெட்டுக்குத்து கலாச்சாரத்தையே எடுத்து காட்டியது.

வன்முறை பூமியா மதுரை?. இதனை பார்க்கும் மக்கள் மதுரை என்றாலே வன்முறை பூமி என நினைப்பார்கள்.

மதுரைக்காரனாகிய நான் மதுரை மக்களின் அன்பு, பாசம், கலாச்சாரம் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து உள்ளேன்.

இதில் ஆபாசமோ, வன்முறையோ கிடையாது. இன்றைய தமிழ் சினிமாக்களில் ஆபாச காட்சிகள் அதிக அளவில் வருகிறது. இதனால் குடும்பத்தோடு பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த நிலை மாற வேண்டும். தமிழ் சினிமாவிற்கு ஆபாசம் தேவையில்லை. எனவே குடும்பத்தோடு அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் தமிழ் சினிமாக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் வேதனையுடன்.

சினிமாக்காரர்களே ரவிமரியா சொல்வதிலும் நியாயம் உள்ளது. கூட்டிக் கழித்துப் பாருங்க சரியா வரும்!

No comments:

Post a Comment