
கடந்த ஆண்டுகளை விட இன்றுடன் முடியப்போகும் 2010ம் ஆண்டு தமிழ் சினிமாவை தலைநிமிர வைக்கும் அளவுக்கு பல வெற்றிப்படங்கள் ரீலிஸ் ஆகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. அங்காடித்தெரு, மைனா, விண்ணைத்தாண்டி வருவாயா, மதராசப்பட்டனம், பாஸ் என்கிற பாஸ்கரன், களவாணி உள்ளி்ட எதார்த்த படங்களை ரசிகர்களாகிய நீங்கள் வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள். எத்தனையோ ஹிட் படங்கள் வந்தாலும் அவற்றில் உங்களை ரொம்பவே கவர்ந்த படம் என்று ஒன்று இருக்குமல்லவா? அது எந்த படம் என்பதை இங்கே நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ரொம்வே எதிர்பார்த்து தியேட்டருக்குச் சென்று ஏமாற்றமடைந்த படத்தைப் பற்றியும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதேபோல டைரக்டர்களைப் பொறுத்தவரை வசந்தபாலன், கவுதம் மேனன், பிரபு சாலமன், சுசீந்திரன், சற்குணம், லிங்குசாமி என பல டைரக்டர்கள் நல்ல கருத்துடைய, பொழுதுபோக்கு அம்சங்களுடனான படங்களை கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் யாரை சிறந்த படைப்பாளி என நீங்கள் கருதுகிறீர்கள் என்பதையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். 2010ம் ஆண்டில் உங்களை கவர்ந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர்கள் யார்? என்பதையும் இங்கே தெரிவியுங்கள் வாசகர்களே...!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment