
ஹைதராபாத்: என்னை நடு ரோட்டில் வைத்து கைது செய்தவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஆந்திர அரசுஇச்சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என விஜயசாந்தி கோரியுள்ளார்.
தெலுங்கானாவுக்கு எதிராக பேசுபவர்களை வெட்டிக் கொல்வேன் என்று பேசிய நடிகையும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பியுமான விஜயசாந்தியை போலீசார் கைது செய்தனர். பினனர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தனது கைது சம்பவம் குறித்து விஜயசாந்தி கூறுகையில்,
நான் என்ன தவறு செய்தேன்?, கொலை செய்தேனா?, கொள்ளையடித்தேனா? என்னை நடுரோட்டில் வைத்து பெண் என்றும் பாராமல் போலீசார் கைது செய்து அவமானப்படுத்தியுள்ளனர்.
நான் போலீசாருக்காக வீட்டில் காத்திருந்தேன். அப்போது எல்லாம் அவர்கள் கைது செய்ய வரவில்லை. இந்த பிரச்சினை குறித்து ஆந்திர முதல்வரும், உள்துறை அமைச்சரும் மவுனம் சாதித்து வருகிறார்கள். இந்த சம்பவத்திற்காக ஆந்திர அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். என்னை கைது செய்த போலீஸ் உயர் அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
இந்த பிரச்சினையை நான் பாராளுமன்றத்தில் எழுப்புவேன். எனக்கு நடந்த கொடுமையைப் பற்றி பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் முக்கிய தலைவர்களிடம் கூறுவேன் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment