Monday, January 3, 2011
உதயநிதிக்கு ஜோடியானா த்ரிஷா!!!!!
'நண்பேன்டா' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தயாரிப்பாளராக மாறியுள்ள உதயநிதி ஸ்டாலின், அடுத்து புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு 'நண்பேன்டா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றிப் படம் தந்த ராஜேஷ்.எம் இயக்குகிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடி யார் என்பதில் பலரது பெயர்கள் அடிபட்டன. முதலில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கக்கூடும் என்ற செய்திகள் வெளியாயின. அதன் பின் 'களவாணி' படத்தில் கலக்கிய ஓவியா நடிக்கக் கூடும் என்றார்கள். ஆனால் இப்போது, உதயநிதியின் ஜோடியாக த்ரிஷா முடிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இயக்குநர் ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உதயநிதி தயாரித்த 'குருவி', 'மன்மதன் அம்பு' படங்களில் நாயகியாக நடித்தவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. வெல்வெட் மெத்தையில பட்டுத் தலையணை!
அனுஷ், கிருஷ் டும்டும்! .
தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகை அனுஷ்கா. க்ருஷ்-அனுஷ்கா காதல் என்ற செய்தி தமிழ்நாடு-ஆந்திரா இரு மாநிலங்களையும் உலுக்கி எடுத்திருக்கிறது. இவர் தற்போது சிம்பு ஜோடியாக 'வானம்' படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்காவையும் தெலுங்கு நடிகர் கோபிசந்தையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தார்கள். இப்போது தெலுங்கு இயக்குநர் க்ருஷுடன் அனுஷ்கா காதல் வயப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. க்ருஷ் தெலுங்கில் ஹிட்டான 'வேதம்' படத்தை இயக்கியவர். தற்போது தமிழில் 'வானம்' படத்தை இயக்கி வருகிறார். 'வேதம்' படப்பிடிப்பிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவது அனுஷ்காவின் வழக்கமாம். இதே சுபாவம் கொண்டவர்தானாம் க்ருஷும். இந்த ஒரு காரணத்திற்காகவே க்ருஷ்ஷை காதலிக்க ஆரம்பித்தாராம் அனுஷ்கா. இது குறித்து அனுஷ்காவிடம் கேட்ட பத்திரிக்கையாளரிடம் "ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம், கல்யாணமும் செய்து கொள்ளப்போகிறோம்" என்றாராம் தெளிவாக. ஆனால் இன்னும் இரண்டு வருஷத்துக்கு கால்ஷீட் இருப்பதால் அதன் பிறகுதான் கல்யாணமாம். இதுதான் இப்போதைக்கு அனுஷ்காவின் டார்கெட்! இரண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடிதான்!
கோலிவுட்டுக்கு 'பாய்'! டோலிவுட்டுக்கு 'ஹாய்'!! .
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை தமன்னா, தெலுங்கு படங்களுக்காக தமிழ் சினிமாவை ஓரம் கட்டி விட்டார். 'கேடி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமான தமன்னா, 'கல்லூரி' படத்தின் மூலம் வெற்றி நாயகி ஆனார். தமன்னா நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் வெற்றியடைந்ததால் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தமன்னாவின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தற்போது கார்த்தியுடன் 'சிறுத்தை' படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், தனுஷுடன் 'வேங்கை' படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தமன்னா தமிழில் எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். தெலுங்கில் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் தமன்னா 2011ம் ஆண்டு இறுதியில்தான் தமிழில் புதிய படத்தில் கமிட் ஆகும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இலியானா தமிழ் சினிமாவை முற்றுகையிடத் தொடங்கியிருக்கும் நிலையில், இலியானாவின் இடத்தை பிடிக்க ஏற்கனவே நடிகை த்ரிஷா முடிவு செய்திருக்கும் நிலையில், தமன்னாவும் தெலுங்கு பக்கம் போகத் தயாராகி விட்டார். முன்பு தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த த்ரிஷாவை ஓரம் கட்டிவிட்டு முதலிடத்துக்கு வந்த தமன்னா, த்ரிஷாவுக்கு போட்டியாக தெலுங்கு சினிமாவிலும் குதிக்கத் தயாராகியிருப்பது தெலுங்கு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்ன...இங்க காட்ட முடியாததெல்லாம் அங்க காட்டலாம்ல......
காத்துக்கிடக்கும் காவலன்! .!!!!
விஜய் நடித்த 'காவலன்' படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் இன்னும் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஒரு பக்கம் நஷ்ட ஈடு கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் விஜய்க்கு ரெட் போட்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் முக்கிய திரையரங்குகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இப்படத்தை வாங்கியுள்ள இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தமிழகமெங்கும் பொங்கலுக்கு 400 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படும் என்று கூறி வருகிறார். ஆனால் இதுவரை 70 தியேட்டர்கள் கிடைத்துள்ளன. அவையும் கூட சுமாரான தியேட்டர்கள்தான் என்கிறார்கள். தியேட்டர் உரிமையாளர் சங்கத்துக்கும் விஜய்க்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளே தியேட்டர் பற்றாக்குறைக்கு காரணம் என்கின்றனர். விஜய்யின் முந்தைய படங்களில் சில தோல்வி அடைந்ததால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர் சங்கத்தினர் வற்புறுத்தினர். ஆனால் நடிகர் சங்கம் இதை ஏற்கவில்லை. இரு தரப்புக்கும் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதில் முடிவு எட்டப்படவில்லை. 'சுறா' படத்தின் நஷ்டத்தில் 35 சதவீதத்தை விஜய் தரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் படத்தின் நஷ்டத்தில் நடிகர்கள் பங்கேற்க முடியாது என்று கூறியுள்ளார் விஜய். 'காவலன்' படத்தை கடந்த 17-ந் தேதி ரிலீஸ் செய்யத்தான் முதலில் ஏற்பாடாகி இருந்தது. பின்னர் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. நஷ்ட ஈடு வழங்காததால் 'காவலன்' படத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார். பொங்கலுக்கு 'ஆடுகளம்', 'சிறுத்தை' போன்ற படங்களும் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் இவற்றுக்கு தாராளமாக தியேட்டர்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தன்னோட படத்துக்கு இப்டியெல்லாம் ஒரு நெலம வரும்னு கனவுலகூட நெனச்சிருக்க மாட்டாரு தளபதி....!
நயன்தாராவின் மெகா பார்ட்டி! .!!!
தனது கள்ளக் காதலரை கணவராக்கிக் கொள்ளும் நாள் வெகு சீக்கிரம் வரப்போகிறது என்பதை கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிந்து கொண்டார் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்து நான்கு மொழிகளில் வெளிவந்த நான்கு படங்களுமே சூப்பர் ஹிட்! இந்த சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கும்படி இருந்தது ரமலத்தின் விவகாரத்துக்கான சம்மதம். இந்த இரண்டு சந்தோஷத்தையும் தாண்டி இன்னொரு சந்தோஷமும் வந்து சேர்ந்திருக்கிறது நயன்தாராவுக்கு. அதுதான் சினிமாவுக்கே முழுக்கு! எவ்வளவுதான் பணம் குவிந்தாலும், நடிப்பதிலிருந்து விலகுவதைதான் மனமார விரும்புகிறார்கள் நடிகைகள். இதற்கு நயன்தாராவும் விதிவிலக்கல்ல. சில தினங்களுக்கு முன் இந்த நான்கு மொழி முன்னணி நாயகர்களுக்கும் நயன்தாராவிடமிருந்து எஸ்.எம்.எஸ். வந்ததாம். அதில், விரைவில் உங்களுக்கு ஒரு விருந்து தரப்போகிறேன். நேரம் ஒதுக்க தயாராகுங்கள் என்று கூறியிருந்தாராம். தன்னை வைத்து படம் எடுத்தவர்கள், தன்னுடன் சேர்ந்து நடித்தவர்கள் என்று அத்தனை பேரையும் இந்த விருந்துக்கு அழைக்கப் போகிறாராம் நயன்தாரா. சினிமாவை விட்டு விலகிப்போன எந்த நடிகையும் இப்படி ஒரு பார்ட்டியை இதற்கு முன்பு நடத்தியதில்லை. அதை செய்து காட்டிவிட வேண்டும் என்று துடியாக துடித்துக் கொண்டிருக்கிறாராம் நயன். இந்த பார்ட்டி அநேகமாக ஐதராபாத்தில் நடக்கும் என்கிறார்கள். அது சரியம்மணி..! ஆட்ட நாயகன் இதுக்கு ஒத்துக்கிட்டாரா?
குட்டையை குழப்பிய சிம்பு! .!!!
இன்னும் சில நாட்களில் தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலின் அண்ணன் விக்ரம் புகார் கொடுப்பார் போலிருக்கிறது. புகாருக்கு ஆளாகவிருப்பவர் நடிகர் நகுல். ஜி.கே.பிலிம்ஸ் சார்பாக ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம் நகுல். இது இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். இதில் நடிக்கவிருந்த மற்றொரு ஹீரோ, தெலுங்கு ஹீரோ மோகன்பாபுவின் மகனான மனோஜ். இவரும் சிம்புவும் இணைபிரியாத நண்பர்கள். இந்த படத்தில் நடிக்க மனோஜ் கமிட் ஆனதை கேள்விப்பட்ட சிம்பு, நகுல் கூட நடித்து ஏன் பெயரை கெடுத்துக் கொள்கிறாய் என்று மனோஜின் மனசை கலைத்துவிட்டாராம். கடைசி நேரத்தில் என்னால் முடியாது என்று ஒதுங்கிக் கொண்ட மனோஜ், வாங்கிய அட்வான்சையும் முறையாக திருப்பி கொடுத்துவிட்டார். ஆனால் படம் எடுங்கள். நடிக்கிறேன். அட்வான்சை திருப்பி தர முடியாது என்கிறாராம் நகுல். சங்கம் தலையிட்டால்தான் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் போலிருக்கிறது. சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி!
திருமணத்துக்கு ஓ.கே. சொன்ன சமீரா! .!!!
கௌதம் மேனன் இயக்கி முடித்துள்ள 'நடுநிசி நாய்கள்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. க்ரைம் ஸ்டோரியான இக்கதைக்கு பின்னணி இசை ஏதும் இல்லை. இதனையடுத்து தெலுங்கில் கௌதம் மேனன் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் சமீரா ரெட்டி நடித்துள்ள 'நடுநிசி நாய்கள்' தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. 'வாரணம் ஆயிரம்', 'அசல்' என்று தமிழில் இரண்டு படங்களில் நடித்திருக்கும் சமீரா தற்போது லிங்குசாமியின் 'வேட்டை' மற்றும் பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷாலுடன் ஒரு படம் என்று தமிழில் பிஸியாக இருக்கிறார். சமீரா பிஸியாக இருக்கும் போதே திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று அவரின் பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள். பெற்றோர்களின் ஆசைக்கு தடைவிதிக்க மனமில்லாமல் சமீராவும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல். அதன்படி தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பிட்த்து விடார்கள் சமீராவின் பெற்றோர்
Saturday, January 1, 2011
2010ம் ஆண்டின் உங்களை கவர்ந்த படம் எது?
கடந்த ஆண்டுகளை விட இன்றுடன் முடியப்போகும் 2010ம் ஆண்டு தமிழ் சினிமாவை தலைநிமிர வைக்கும் அளவுக்கு பல வெற்றிப்படங்கள் ரீலிஸ் ஆகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின. அங்காடித்தெரு, மைனா, விண்ணைத்தாண்டி வருவாயா, மதராசப்பட்டனம், பாஸ் என்கிற பாஸ்கரன், களவாணி உள்ளி்ட எதார்த்த படங்களை ரசிகர்களாகிய நீங்கள் வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள். எத்தனையோ ஹிட் படங்கள் வந்தாலும் அவற்றில் உங்களை ரொம்பவே கவர்ந்த படம் என்று ஒன்று இருக்குமல்லவா? அது எந்த படம் என்பதை இங்கே நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ரொம்வே எதிர்பார்த்து தியேட்டருக்குச் சென்று ஏமாற்றமடைந்த படத்தைப் பற்றியும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதேபோல டைரக்டர்களைப் பொறுத்தவரை வசந்தபாலன், கவுதம் மேனன், பிரபு சாலமன், சுசீந்திரன், சற்குணம், லிங்குசாமி என பல டைரக்டர்கள் நல்ல கருத்துடைய, பொழுதுபோக்கு அம்சங்களுடனான படங்களை கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் யாரை சிறந்த படைப்பாளி என நீங்கள் கருதுகிறீர்கள் என்பதையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். 2010ம் ஆண்டில் உங்களை கவர்ந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர்கள் யார்? என்பதையும் இங்கே தெரிவியுங்கள் வாசகர்களே...!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
Subscribe to:
Posts (Atom)